நம்மில் ஒற்றுமை நீங்கிடில்

9 views
Skip to first unread message

Saravana Rajendran

unread,
Nov 19, 2007, 10:05:04 PM11/19/07
to

இன்றும் கூட மேற்க்கு திருநெல்வேலிகிராமங்களில் ஒரு வாய் வழிக்கதை
 கயிலைநாதரின் திமணத்திற்க்கு உலகமே சென்று விட வடக்கு தாழத்துவங்கியது.
 
 
பதட்ட முற்ற அம்மையப்பன் சித்தருக்கெல்லாம் சித்தனாகிய அகத்தியனை அழைத்து தெற்க்கு செல்ல சொல்லி உலகை சமமாக்கினார் இந்த கதை அனைவரும் அறிந்த ஒன்று.
 
அவர் நின்ற‌ இடம் பள்ளமாகி மேல்பகுதி உயர்ந்து விட  தமிழகத்திற்க்கு வரும் மழை சேரலத்தை சென்று வீனாய் கடலில் விழுந்தது.
பதறிப்போன நமது பெரியவர்கள் நேராக அகத்தியரின் காலில் விழுந்து சாமி என்ன இப்படி செய்துபுட்டீக ,
 
மழையெல்லாம் மலையாள பக்கம் போய்டுச்சே என சொல்ல,
அகத்தியரும் சரி உங்களுக்கும் மழை வர ஏற்ப்பாடு செய்கிரேன் போய் வாருங்கள் என்று சொன்ன பிறகு! சிறிது நேரம் கழித்து இன்னொரு பெரியவர் வந்து, சாமீ எங்களுக்கு மழை என்று சொல்ல அகத்தியரும் இதற்க்கு முன்னால் போன வரும் நீங்களும் ஒன்றாக பேசி நல்ல தீர்வொன்றை கண்டு ஒன்றாக வாருங்கள் அப்பொழுது நான் உங்களின் குறையை போக்குகிறேன் என்று சொல்லிவிட்டார்.
 
நமது பெரியவர்களும் இரவு முழுவதும் பேசி விட்டு அடுத்த நாள் அகத்தியரை கான செல்ல, வாயை மூடிக்கொண்டு சும்மா போகாமல்! அதைவிட்டு விட்டு கீழூர்காரர், மேலூர்காரரை பார்த்து இங்க பாருங்க குள்ள சாமீ மழை கொடுத்துவிட்டால் முதலில் எங்கள் குளம் நிறைந்த பிறகுதான் நீங்க மடையை அடைத்து உங்களது குளத்தை நிறைக்க வேண்டும் என சொல்ல,

 அதற்க்கு மேலூர்காரர் அதெப்படி முதலில் எங்கள் குளம் நிறையட்டும் அதன் பிறகுதான் உங்களுக்கு என பதிலலிக்க, கீழூர்காரருக்கு கோபம் எங்களை என்ன பிச்சைகாரர் என்ரு நினைத்து விட்டீரா , நீங்க பிச்சை போட நாங்க வாங்க என பேச,

 மேலூர்காரருக்கும் கோபம் வந்து கடைசியில் இவர்கள் வழியிலேயே சன்டை போட்டுகொண்டு அகத்தியரிடம் போகாமல் திரும்பிவிட  மறுநாளும் ஒருவர் மட்டூம் போய் தனியாக அகத்தியரிடம் முறையிட இது ஆகாது இருவரும் வாருங்கள் என சொல்ல , எங்கே தமிழன் ஒன்று சேர்வது  நாட்கள் கடந்து,  மாதம் வருடம் யுகம் என சென்றுவிட , கயிலை நாதரும் அகத்தியருக்கு டிரங்கால் போட்டு கூப்பிட அகத்தியரும் புஷ்பக விமானத்தில் பிசுனஸ் கிலாஸ் டிக்கேட் எடுத்து கிளம்பிவிட   இன்று வரை தமிழகம் மழை மறவு பிரதேசமாகவே ஆகிவிட்டது.

இது ஒரு கதை என்று எடுத்துக்கொள்ளாம் (தயவு செய்து கடவுளாரை கிண்டல் செய்தேன் என்று என்னை திட்ட வேண்டாம் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்)
 
இன்றைய‌ நிலை என்ன‌ முல்லை பெரியாறு விவ‌கார‌த்தில் கேர‌ள‌த்துட‌ன் ம‌ல்லுக‌ட்ட‌ வேன்டீருக்கிற‌து.
 
ச‌ம்பா ப‌ருவ‌த்தின் போது க‌ருநாட‌க‌த்திட‌ம் போராட‌ வேன்டீருக்கிற‌து.
 
பாலாற்றின் த‌ண்ணீருக்காக‌ ஆந்திராவிட‌ம் கெஞ்ச‌ வேண்டீருக்கிற‌து ஏன்
நம் த‌மிழ‌ரிட‌ம் ஒற்றுன்மை இல்லா நிலையால் தானே,

 உல‌க‌த‌மிழ‌னிட‌ம் இன்றுவ‌ரை இதே நிலைதான் நீடிக்கிற‌து. அத‌னால் தான் க‌ல் தோன்றி மண்தோற்ற‌ கால‌த்தில் தோன்றிய‌ மூத்த‌ குடி க‌ல்லையும் பொண்ணாக‌ மாற்றித்த‌ரும் ஒரு த‌னித்த‌ன்மை வாய்ந்த‌ த‌மிழின‌ம் எந்த‌ ஒரு காரிய‌த்திலும் ஒன்றுப‌டாம‌ல் த‌ன‌து இன‌த்தின் வ‌ள‌ர்ச்சிக்கு தாமே ஒரு த‌டைக்க‌ல்லாக இருக்கிற‌து.
 
ந‌ம‌து க‌ண்முன்னே ந‌ம‌து த‌மிழின‌ம் அல்ல‌ல் ப‌டும் போது நாம் ச‌ட்ட‌ வாய்மூடி மௌனித்திருக்கிறோம்.
 
பால‌ஸ்தீனம‌க்க‌ள் அல்ல‌ல் ப‌டும்போழுது அனைத்து இஸ்லாமிய‌ நாடுக‌ளும் ஒன்று சேர்ந்து ஆத‌ர‌வ‌ளித்து அர‌வ‌ணைத்த‌து.
 
இஸ்ரேலை உல‌க‌ம் முழுவ‌தும் ஆத‌ரித்து வ‌ருகிற‌து ஏன் அவ‌ர்க‌ளின் ஒற்றுமையான‌ வேண்டுகோளால் தானே நாம் ஏன் ந‌ம் த‌மிழ‌ருக்காக‌ குர‌ல் கொடுக்க‌ கூடாது.
 
 

--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
சரவணா சுற்றுலா ஒருங்கினைப்பகம்
091 9819166850
மும்பையிலிருந்து
Reply all
Reply to author
Forward
0 new messages