கற்க கசடற கற்றபின்
வள்ளுவர் தாத்த கல்வியை பற்றி சொல்லும் போது கற்க என்று சொன்னாரே தவிர எதுவரை என்று சொன்னாரா,
இன்றும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மானவர்கள் தங்களது எதிர்காலம் பற்றி சிந்தனையுடன் படிப்பது குறிப்பிட்ட பருவம் வரும் வரை தான் அதாவது சிலர் 6ஆம் வகுப்பிற்க்கு பிறகு கருத்து கொண்டு படிப்பது, உண்டு சிலர், 12 ஆம் வகுபிற்க்கு பிறகு வழிக்கு வருவதும் உண்டு ஆனால் சிரமேற்க்கொண்டு படிப்பவர் தான் பெற்ற கல்வியால் மற்றவருக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று எண்ணுபவர் எத்தனை பேர்.
இன்று இரண்டு நபர்களை நாம் கானலாம் இணையத்தின் மூலம் நான் பல தங்கமான நன்பர்களை பெற்றிருக்கிறேன் அதில் இருவரை பற்றி பார்க்கலாம்
ஒருவர் மத்திய வணத்துறையின் கீழ் வரும் மண்ணியல் ஆய்வுத்துறையின் துணைஇயக்குனர் அவரது பெரிய மத்திய அரசு பதவியின் காரணமாக அவரது பெயரை வெளியிடுவது மரபகாது.
மற்றோருவர் திரு ஆனந் பொன்னுசாமி ஆஸ்திரேலியவில் பிரபல் நிறுவனத்தில் பணிபுரிபவர்.
கற்க கசடற கற்றபின்
தர்மபுரிமாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய வரட்சியான கிராமத்தில் பிறந்தவர்
அவரது பெற்றோர்கள் இருவரும் செங்கல் சூளை கூலித்தொழிலாளர்கள்.
எல்லா குழந்தைகளை போல் இவரும் பள்ளிசெல்லும் பருவம் வந்ததும் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் படிக்கிறார் விளையாட்டாக வருடங்கள் ஓடிவிடுகிரது. 10 ஆம் வகுப்பு வருகிரது இரண்டு பாடங்களில் கணிதம்(அது நமக்கும் வராதுங்க) ஆங்கிலம் இரண்டு பாடங்களிலும் தேர்வு பெற தவறிவிட பேப்பரில் இவரது நம்பர் வரவில்லை. இதற்க்காக கவலை படாமல் சும்மா சுற்ற ஆரம்பித்தவர், தனது தாய் தந்தை சென்ற செங்கல் சூளையில் வேலைக்கு செல்ல அங்கு தான் இதுநாள் வரை தனது பெற்றோர்கள் நமக்காக எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை உணர்ந்தார்,
இதற்க்கு முடிவு கட்ட வேண்டும் என்ற என்னத்துடன் தனது வகுப்பு ஆசிரியரின் அறிஉறைப்படி மீண்டும் தனது கல்வியை தொடர்கிறார்.
இரண்டு பாடங்களிலும் தேற்ச்சி பெற்ற பின் மீண்டும் அறிவியல் பாடப்பிறிவில் உயர்கல்வி 12 வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் அரசு கலைகல்லூரியில் இளங்கலை இயற்பியல் , பிறகு சென்னை பல்கலைகழகத்தில் முதுகலை தேர்சி பெற்ற பிறகு மேற்ப்படிப்பு படிக்க டெல்லி சென்று மண்ணியல் துரையில் ஆராய்ச்சி மானவனாக நல்ல முறையில் தேர்ச்சி பலன் மத்திய அரசாங்கத்தின் வனத்துரையில் மண்ணியல் பிரிவில் வேலை கிடைக்க அங்கும் தனது பணிசிறப்பாக செய்து மஹாரஸ்டிரா, மத்திய பிரதெசம் மற்றும் குசராத் மாநிலத்தின் மண்ணியல் பிரிவின் துணை இயக்குனராக பதவியேற்றம் பெற்று இன்று க்ர்சத் என்னும் மும்பைக்கு அருகில் உள்ள நகரத்தில் மண்ணியல் துரையின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இவர் அங்குள்ள வனவாழ் மக்களின் குழந்தைகளுக்காக அவர்களின் கல்வித்திறன் வளம் பட தன்னால் ஆன உதவிகள் செய்து வந்தார். ஆனால் என்ன செய்ய ஒருசில அமைப்புகள் அவர்குழந்தைகளுக்கு மறமாற்றம் செய்விக்கிறார் என்ற காரனத்தை காட்டி அவரது நற்ப்பனிகளுக்கு தடைவிதிக்க பல காரனங்களால் அவருக்கு இடைஞ்சல் கொடுக்க அவர் தற்போழுது வேறு மாநிலத்திற்க்கு மாற்றல் வேண்டு நிற்க்கும் நிலை,
நான் அவரிடம் சார் வெளிநாடு போய் வேலை பார்க்கலாமே என்றேன் அதற்க்கு அவர் சரவணா எனக்கு என்னவோ மனம் வரமறுக்கிறது.
வனப்பகுதியில் பல குழந்தைகளை பார்க்கும் போது இவர்களுக்கு கல்வி கிடைக்க ஆவன செய்தால் நாம் பல நல்ல அதிகாரிகள், பொரியியல் வல்லுனர்கள், மருத்துவர்களை உருவாக்கலாமே என்றார்.
எனக்கு உண்மையில் பெருமையாக உள்ளது. நமது தமிழர் ஒருவர் கடைநிலையில் இருந்து இவ்வளவு உயர்ந்த பதவிக்கு வந்தும் பிறரைபற்றி சிந்திக்கும் இவரைப்போல் படித்த தமிழ் இளைஞர்கள் அனைவருக்கும் இருந்தால் ஒரு அழகான வளமான தமிழ் நாட்டை கானலாமே என்ற ஏக்கம்( இன்னும் இவர் ஊர் சென்றால் தனது தாய் தந்தையருக்கு உதவி செய்யும் பழக்கம் இவரது காய்த்துபோன கைகளை கண்டாலே சொல்லும்) நான் இவரிடம் சார் அம்மா அப்பாவை உடன் வைத்துக்கோள்ளமே என்றால் அவரோ சரவணா நானும் பல முறை அழைத்து பார்த்துவிட்டேன் அப்பா வேலையை விட மாட்டேன் கிறார் அம்மாவோ அவருக்கு துனையான நான் இல்லாவிட்டால் யாரப்பா, நீ சம்பாதிக்கிறா வேலையாட்கள் எல்லாம் இருக்கிறார்கள். உங்க அப்பாவிற்க்கு என்னை விட்டால் யார் என்கிறார்கள்.
இன்னும் அவர் தனது மண்ணியல் துரையில் ஆராய்ச்சி முனைவர் பட்டத்திற்க்காக பூனா பல்கழை கழகத்தில் பயின்று கொண்டிருக்கிறார்.
கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக
திரு ஆனந்த பொன்னுசாமி
ஒரு சாதாரன தொழிலாளிக்கு மகவாக திருச்சி கொள்ளிமலை சாரலில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து கல்விகற்று கணணித்துறையில் உயர்கல்விகற்று ஆரம்ப காலத்தில் சொற்ப்ப சம்பளத்தில் பணிபுரிந்து இன்று ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபல நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் தான் மட்டுமல்லாது சமுதாய நோக்கோடு ஒரு டிரேஸ்ட் ஒன்றை திரு இராதாகிருஸ்னன் அவர்களின் பெயரில் ஆரம்பித்து அதன் வாயிலாக பலருக்கு கல்விபணி அளிப்பது உண்மையில் நாம் பெருமிதம் கொள்ளவைக்கும் காரியம்,
இன்று பலர் படிக்கின்றனர், பதவிபெற்ற பிறகு பல அயல்நாடுகளில் பணிபுரிந்து குடும்பம் குடித்தனம் என்று அமர்ந்துவிடுகிண்றனர். அவர்களை பற்றி குறையொன்றும் சொல்லவில்லை ஆனால் திரு சக்காரியா, ஆனந் போன்றவர்களுக்கு மட்டும் எழும் அந்த ஆசைகள் ஏன் எல்லொருக்குமெழவில்லை என்பது நமகெல்லாம் தொன்றும் ஒரு எண்ணம்
--
உங்கள் வாழ்வு வளம்பெற வாழ்த்தும் சரவணா
சரவணா சுற்றுலா ஒருங்கிணைப்பகம்
091 9819166850
மும்பையிலிருந்து