அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சில வாரங்களாக ராசிபலன்கள் நான் அனுப்பி கொண்டிருக்கிறேன் எனபதை அறிவீர்கள். அதில் சிலருக்கு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அதை கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கிறேன்.
கேள்வி: தாங்கள் எழுதும் ராசிபலன்களை சந்திர ராசிக்கு பார்க்க வேண்டுமா?
பதில்: சந்திரன் இருக்கும் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ பார்க்க வேண்டும்.
கேள்வி: தாங்கள் எழுதும் பலன்களை எல்லோருக்கும் பொதுவானதா?
பதில்: ஆம். ஆனால் நான் கொடுத்திருக்கும் பலன்கள் கோட்சார பலன்களே(அதாவது தற்கால கிரஹநிலைப்படி உள்ளவை). இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடலாம்.
கேள்வி: நியுமராலஜி படி எனக்கு பலன்கள் பார்க்க முடியுமா?
பதில்: மன்னிக்கவும். எனக்கு நியுமராலஜி பற்றி தெரியாது.
கேள்வி: என்னுடைய லக்னம் மீனம். ராசி கடகம். நான் எதற்கு பலன் பார்க்க வேண்டும்?
பதில்: நீங்கள் மீனத்திற்குத்தான் பலன்கள் பார்க்க வேண்டும். என் வரையில் நான் சொல்வது பொதுவாக ராசிக்கு பலன்கள் பார்ப்பதை விட லக்னத்திற்கு பலன்கள் பார்ப்பது சிறந்தது.