இடைச்சிகளிடையே நின்றேனோ வங்கிப்புரத்தாரைப் போலே? (நன்றி: பத்மா கோபால்) "ஸம்ஸாரத்துல இருந்தாலும், எம்பெருமான நெனச்சு, தெனம் ஏதோ நாலு ஸ்லோகங்களாவது சொல்ற வழக்கம் உண்டா அம்மணி?.." ...மாமுனிகள் கேட்டதும்தான் தாமதம்!. திருவல்லிக்கேணி அம்மையார் தன் மனதில் உள்ள வருத்தத்தை எல்லாம், மூட்டையைப் பிரித்ததும் நாலுபக்கமும் ஓடுகின்ற தானியமாய்க் கொட்ட ஆரம்பித்தாள்... "ஸ்வாமி... அது ஏன் கேக்கறேள்?.. பெரியவா நினவு தெரிஞ்ச நாள்லேந்து கேள்வி ஞானத்துல வந்த ஸ்லோகங்களத் தெனமும் சொல்லிட்டு, அத்தோட "இன்னிக்கு கணக்கு ஆயிடுத்து!.."ங்கற மாதிரி போயிடுவேன்... அடியேன் அர்த்தம் தெரிஞ்சோ, அனுபவிச்சோ எதையும் சொன்னதில்ல!... சரி.. "பா"வத்தோடயும், பக்தியோடயும் பெருமாள அனுபவிக்கறவாளோட சேர்ந்துண்டு, கொஞ்ச நேரமாவது பெருமாள அனுபவிச்சேனானு பார்த்தா, அதுவும் இல்ல!.. அடியேன் என்ன, இடைச்சிகளிடையே நின்றேனோ வங்கிப்புரத்தாரைப் போலே?.. என்று தனக்கே உரிய பாணியில், ஒரு கேள்வியைக் கேட்டவள், அதற்கான விளக்கத்தையும் தொடர்ந்தாள்... எம்பெருமானார் காலத்துல இருந்தவர் வங்கிபுரத்து நம்பிகள்னு ஒருத்தர்.. ![]() ஸ்ரீ எம்பெருமானாரும் வங்கிபுரத்துநம்பியும் ஒரு சமயம் ஶ்ரீவைஷ்ணவா எல்லாரும் கோஷ்டியா, அரங்கன சேவிக்க, சந்நிதி முன்னாடி எழுந்தருளி இருந்தா.. இந்த நம்பிகள் மட்டும் ஶ்ரீவைஷ்ணவ கோஷ்டியில நிக்காம, அந்த சமயம் அங்கே வடக்கே இருந்து வந்திருந்த ஒரு இடைச்சிகள் கும்பலுக்கு இடையில போய் நின்னுண்டார்.. அதப் பார்த்த முதலியாண்டான் ஸ்வாமிகள், "அழகான ஶ்ரீவைஷ்ணவ கோஷ்டி இருக்க, நீர் போய் அவாளிடையே நிப்பானேன்?.."னு கேட்டார்.. அதுக்கு நம்பிகள், "நம்ம விட, இந்த இடைச்சிகளுக்குத் தான் எம்பெருமான் மேல அன்பும் ஆசையும் அதிகமா இருக்கு!.. அதனால, இவா கோஷ்டியில இருக்கறதுதான் சரினு இங்க வந்து நின்னேன்.."னு பதில் சொன்னார்.. அதுக்கு ஆண்டான், "நம்பிகளே!.. அந்த அளவுக்கு அவாளுக்குத்தான் எம்பெருமான் மேல ப்ரீதி இருக்குனு நீர் எப்படி கண்டுபிடிச்சீர்?.."னு கேட்கவும், நம்பிகள், "இவாள்ளாம் தங்களுக்குத் தெரிஞ்ச கொச்சை பாஷையில, "பால் உண்பீர்!.. பழம் உண்பீர்!.. பட்டாடை அணிவீர்!.. பொன்னாலே பூணூல் இடுவீர்.." னு பெருமாளக் கொண்டாடறா!.. அது கேட்கறதுக்கு ரொம்ப இனிமையாவும் ஆனந்தமாவும் இருக்கு!.."னு பதில் சொல்லவும், உடனே ஆண்டான், "அது சரி.. அவா சொல்றது இருக்கட்டும் !.. அங்க நின்னுண்டு, நீர் என்ன சொல்லிண்டு இருக்கீர்?.." என்று கேட்டார்.. நம்பிகள், "பெருமாளப் பார்த்து, "விஜயஸ்வ விஜயீ பவ!.."னு மங்களாசாஸனம் பண்ணிண்டு இருக்கேன்.."னு பதில் சொன்னார்.. உடனே ஆண்டான், "ஓய் நம்பிகளே!.. அங்கப் போயும் ஒம்மோட முரட்டு ஸம்ஸ்க்ருதம் விடலப் போல இருக்கே!.. எங்க இருந்தாலும் நாம், நாம்தான் நம்பிகளே!.. நீர் பேசாம இங்கயே வாரும்!.."னு கூப்பிட்டார்... நம்பிகள் உடனே தான் பண்ற மங்களாசாசனத்த நிறுத்திட்டு, இடைச்சிகளோட கொச்சை பாஷையை அனுபவிக்க ஆரம்பிச்சாராம்!.. அதுமாதிரி... அடியேனும் எப்பவாவது பெருமாள சேவிக்கப் போனாலும், இப்படி ப்ரீதியோட பெருமாள சேவிக்கறவா பக்கம் ஒதுங்கினது கூட இல்லயே ஸ்வாமி.." ....என்று குற்ற உணர்வோடு தன் நிலை விளக்கம் தந்தாள் திருவல்லிக்கேணி மாதரசி... (வளரும்..) ஆசார்யன்: எம்பெருமானார் சிஷ்யர்: சிறியாத்தான் வங்கிபுரத்து நம்பி அருளிச் செய்தவை : விரோதி பரிஹாரம் வங்கிபுரத்து ஆச்சி என்பவர் மணக்கால் நம்பியின் சிஷ்யராவார். இவருடைய மகனாகிய வங்கிபுரத்து நம்பி எம்பெருமானரிடம் சிஷ்யராக சென்று சேர்ந்தார். வங்கிபுரத்து நம்பி விரோதி பரிஹாரம் என்ற கிரந்தத்தை நம்முடைய சம்ப்ரதாயம் பெறுவதற்கு காரணமானவர். வங்கிபுரத்து நம்பி எம்பெருமானாரிடம் சென்று, ப்ரபன்னர் ஒருவர் தனது சம்சார வாழ்க்கையில் இருக்கும் பொழுது எதிர்நோக்கும் தடைகள் யாவை என்று வினவ எம்பெருமானாரும் எண்பத்தி மூன்று தடைகளை விவரித்தார். வங்கிபுரத்து நம்பியும் எம்பெருமானரிடமிருந்து தான் செவியுற்றபடி அந்த எண்பத்தி மூன்று தடைகள் ஒவ்வொன்றிற்கும் மிகவும் விளக்கமான உரையை அருளிச்செய்தார். இந்த கிரந்தத்தில் நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் நன்கு ஆராய்ந்து, அந்த சூழ்நிலைகைளில் எவ்வாறு நடக்க வேண்டும் என்கிற முறையையும் காட்டியுள்ளார். மாமுனிகள் தனது வ்யாக்யானத்தில், வங்கிபுரத்து நம்பியை ” ஆப்த தமர்” (நம்முடைய ஆன்மீக நலத்தில் முக்கிய இடம் வகிப்பவர்) என்று சுட்டிக்காட்டியுள்ளார். வங்கிபுரத்து நம்பியின் தனியன் பாரத்வாஜ குலோத்பூதம் லக்ஷ்மணார்ய பதாச்ரிதம் அடியேன் ஸந்தான க்ருஷ்ண ராமாநுஜ தாஸன் |
https://www.youtube.com/watch?v=n1q0zfO6HxM
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu