ஆழ்வார்கள் எத்தனை பேர் இருந்தாலும் திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு விருப்பமானவராகவும், திருமலை வரலாற்றில் குறிப்பிடப் பெறுபவருமாக இருப்பவர் அனந்தாழ்வார். இராமானுஜரின் சீடரான இவர், இராமானுஜரின் உத்தரவின் பேரில் திருமலையில் கைங்கரியம் செய்யத் தனது மனைவியுடன் வந்தவர்.
ஒரு
முறை பராசர பட்டர் தனது சிஷ்யர்களுள் ஒருவரை அநந்தாழ்வானிடம் சென்று ஒரு ஸ்ரீ வைஷ்ணவன்
எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிந்து வரச் சொன்னார். அவரும்
அநந்தாழ்வானின் திருமாளிகைக்குச் சென்ற போது அங்கே ததீயாராதனம் நடந்து
கொண்டிருந்தது. அங்கு இடம் முழுவதும் நிரம்பி இருந்ததால் அந்த சிஷ்யர் அங்கே
எல்லோரும் உணவருந்தி முடிக்கும் வரை காத்திருந்தார். அவரைப் பார்த்து விட்ட
அனந்தாழ்வான் அவரை வரவேற்று இறுதியில் தம்மோடு இருந்து பிரசாதம் பெற்றுக் கொள்ள
வேண்டினார். பின் அவரைப் பற்றிய விவரங்கள் கேட்டபோது அந்த ஸ்ரீ வைஷ்ணவர் தாம்
பட்டருடைய சிஷ்யர் என்றும், பட்டர் தான் அவரை ஒரு ஸ்ரீ வைஷ்ணவ
லக்ஷணம் என்ன என்று அநந்தாழ்வானிடமிருந்து அறிந்து கொண்டு வரச் சொன்னதையும் கூறினார்.
அதற்கு
அனந்தாழ்வான் கூறினார், ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் கொக்கு போலவும்,கோழி போலவும் உப்பைப் போலவும் உம்மைப்
போலவும் இருக்க வேண்டும் என்று பதிலுரைத்தார்.
கொக்கு என்பது எப்போதும் மிகச்சிறந்த மீனுக்காக காத்திருந்து உண்ணும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் பகவானையே எப்போதும் எல்லாவற்றிற்கும் அண்டி இருந்து பாகவத கைங்கர்யத்தையே மிகச் சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கோழி எப்போதும் குப்பையைக் கிளறி அதிலிருந்து தனக்குத் தேவையான அரிசியைப் பொறுக்கிக் கொள்ளும். அது போல ஸ்ரீவைஷ்ணவனும் சாஸ்த்ரங்களிலிருந்து தேடி (அதில் எல்லா மனிதர்களுக்கும் தேவையான எல்லா விஷயங்களும் கிடைக்கும்) அதிலிருந்து மிக உயர்ந்த விஷயங்களான பரகத ஸ்விகாரம் பாகவத கைங்கர்யம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
உப்பு நம் உணவுப் பண்டங்களோடு கலந்து அந்த உணவை சுவையானதாக ஆக்கும். அதுபோல ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் தன்னுடைய அகங்காரம் எல்லாவற்றையும் அடக்கி இன்னொரு ஸ்ரீவைஷ்ணவன் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும். மேலும் தான் இல்லாத போது தான் செய்த நல்ல செயல்களை மற்றவர்கள் எண்ணிப் பார்க்குமாறு இருக்க வேண்டும்.
இறுதியில் ஒரு ஸ்ரீவைஷ்ணவன் என்பவன் உம்மைப் போன்று பொறுமை காத்து பணிவோடு இருந்து என்னிடமிருந்து விஷயங்களை அறிந்து கொண்டது போல ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவனும் அடுத்தவர்களின் சந்தோஷத்திற்காக பணிவுடன் செயல்பட வேண்டும் என்றார்.
இப்படி நான் என்ன உம்மைப் போல என்றேனோ அனந்தாழ்வானைப் போல என்றாள் திருவல்லிக் கேணி பெண் பிள்ளை
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu