திருவல்லிக்கேணி பெண்பிள்ளை ரகசியம் - 007 - மழையில் நின்றேனோ எம்பெருமானாரைப் போல?

6 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Jul 12, 2023, 1:21:12 AM7/12/23
to thatha patty
வைணவப் பெரியவர்கள் பெருமாளை அல்லாத பிற தெய்வங்களை வணங்குவது இல்லை. 

ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுவாமி எழுந்தருளி புறப்பாடு நடந்தது.  மழை கொட்டோ கொட்டென்று கொட்டித் தீர்த்தது. 

பெருமாள் மழையில் நனையலாமோ?  கூடாதல்லவா... சுவாமியை மழையிலிருந்து காப்பாற்ற அருகே அமைந்திருந்த சிவன் ஆலய மண்டபத்தில் கொண்டு வைக்கின்றனர்.  சுவாமி ஆனந்தமாய் அங்கு எழுந்தருளி விட்டார்.  கூட வந்திருந்த வைணவர்களில் பலர் மழைக்குப் பயந்து சிவன் கோவில் மண்டபத்திற்குள் தஞ்சம் புகுந்தனர்.
image.png
எம்பெருமானார் இராமானுஜரோ சோ என்று பெய்த மழையில் அப்படியே வெளியில் நின்றுவிட்டார்.  சிலர் பெருமாளே சிவன் கோவிலில் எழுந்தருளியிருப்பதால் தாங்களும் மழையில் நனையாமல் மண்டபத்திற்குள் வரலாமே என்றனர்.

எம்பெருமானாரோ, பெருமாள் கடவுள்.  அவர் எங்கு வேண்டுமானாலும் எழுந்தருளலாம்.  ஆனால் வைணவ சம்பிரதாயத்தில் வந்த நாங்கள் பெருமாள், பிராட்டியாரைத் தவிர பிற தெய்வங்களை வழிபடுவது கிடையாது.  என்றார்.  அப்படிப் பட்ட வைராக்கியம் என்னிடம் இல்லையே சுவாமி என்றாள் திருவல்லிக் கேணி பெண் பிள்ளை.

------------------------------------------------------------------------------------------------------------------------------
எட்டெழுத்து மந்திரத்தை ஒரு குருவிடமிருந்து உபதேசமாய்க் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது வைணவ மரபு. அதன்படி எம்பெருமானார் திருக்கோட்டியூர் நம்பியிடம் பெற்றார்.அதற்காக திருவரங்கத்திலிருந்து திருக்கோட்டியூருக்கு 18 முறை சென்றாரென்று கதைகள் மூலம் அறிகிறோம். அப்படிப் பெற்ற அம்மந்திரத்தை  ஆசையுடையோரெல்லாம் கேட்டுப் பயனடையலாம் என்று திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி  அம்மந்திரத்தைச் சொன்னார். இதையறிந்த ஆசான் கடிந்துகொண்டார்.  

இராமானுசர் சொன்னார்.”நான் ஒருவன் நரகம் புகுந்து எல்லோரும் சுவர்க்கம் புகுந்தால் எனக்கு ஆனந்தமே” என்று சொன்னவுடன் அவரை ஆசான் ஆரத்தழுவி அவருக்கு நீர்தான் ”எம்பெருமானார்”என்று பெயரைச் சூட்டினார்.

  • இராமானுசர் இயற்றிய நூல்கள்

வடமொழியில் இராமானுசர் இயற்றிய ஸ்ரீபாஷ்யம் அவருடைய தலைசிறந்த படைப்பு. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிலைநாட்டிய நூல். 

அதைத்தவிர அவர் இயற்றியவை:

  • வேதாந்த சங்கிரகம்-உபநிடத தத்துவங்களை விவரித்துச்சொல்கிறது.
  • வேதாந்த சாரம், மற்றும், வேதாந்த தீபம்-பிரம்ம சூத்திரத்தைப்பற்றிய உரைகள்.
  • கீதா பாஷ்யம்- கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
  • நித்யக்கிரந்தங்கள். அன்றாட வைதீகச்சடங்குகளும், பூசை முறைகளும்.

 கத்யத்ரயம்= உரைநடை நூல்கள்.

  • சரணாகதி கத்யம்- பிரபத்தி என்ற சரண் புகுதலைப் பற்றியது.
  • ஸ்ரீரங்க கத்யம்- அரங்கநாதப் பெருமானைத் தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது.
  • வைகுண்ட கத்யம்-வைகுண்டத்தை நேரில் பார்ப்பதுபோல் விவரிப்பது.

புருஷ குணங்களில் சிறந்தவரும்; ஜீவகாருண்யம், குரு பக்தி, வைராக்கியம், பகவத் பாகவதத் தொண்டு, பாண்டித்யம் பெற்றவரும்; நாலூரானும் நற்கதியடைய திருமாலிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டவருமான இராமானுஜரை  வணங்கினால்  கண் பார்வை கோளாறுகளும் விலகும்.


 

https://www.youtube.com/watch?v=9ggxOl9cIAA

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages