இப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை
நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி
இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்த படி இருக்கும்.
நந்தி விலகத் தரிசித்த நாளைப்போவார் கோவிலின் மேற்புறமுள்ள ரிஷப
தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப்படுத்த எண்ணித் தனக்குத் துணை யாருமில்லாததால்
இறைவனை வேண்ட, இறைவன் அவருக்குத் துணையாகுமாறு கணபதியை அனுப்பினார். அவர் துணையால் அத்
தீர்த்தத்தை வெட்டிச் சீர்ப் படுத்தினார். அதுவே கணபதி தீர்த்தம் என்றும் பெயர்
பெற்றது. எனவே இங்குள்ள விநாயகர் 'குளம் வெட்டிய
விநாயகர் ' என்றழைக்கப்பெறுகிறார்.
துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு
தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது
என்று சொல்லப் பெறுகிறது.
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக
மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.
புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புனுகுச் சட்டம்
சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள்
நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள்
தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகிறார்கள். இவ்வாறு செய்தால்
திருமணத் தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை
மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும்
இத்தலத்தில் விசேஷமானது. இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்குச் செய்யப்
பெறும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம
பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த
அன்னைக்குப் புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனக் காப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திக் கடன் களாக
உள்ளது.
இத் தலத்திற்குரிய பன்னிரு வேலி பெற்ற வரலாறு : தன் நாட்டில் பஞ்சம்
நிலவியதால் இராசேந்திரச் சோழன் எல்லாச் சிவாலயங்களிலும் பூசைகளைச் செய்தான்.
அவன் கனவில் இறைவன் தோன்றித் திருப்புன்கூர் சிவலோக நாதரை வழிபடின் மழை
உண்டாகும் என்று அருள, அவ்வாறே மன்னனும் அங்கு வந்து சுவாமியை வழிபட்டான். அப்போது சுந்தரர்
அங்கு வந்தார். அரசன் அவரை வணங்கி, சந்நிதியில் பாடி
மழை பெய்விக்குமாறு வேண்டினான். சுந்தரரும் மழை பெய்வித்தால் சுவாமிக்குப்
பன்னிரு வேலி நிலமளிக்குமாறு மன்னனுக்குக் கட்டளையிட்டு
விட்டுப் பாடினார், மழை பெய்தது. எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை மிகுதியைக்
கண்ட மன்னன், அதை நிறுத்தாவிடில் பெருஞ்சேதம் உண்டாகும் என்றெண்ணிச் சுந்தரரைப்
பார்த்து நிறுத்துமாறு பாடியருள வேண்ட, அவரும் மேலும்
பன்னிரு வேலி, நிலம் கேட்க, மன்னனும் தர, சுந்தரரும் பாடியருள மழையும் நின்றது.
நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ
தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. மூலவர் சிவலோக நாதர் சுவாமியை
வணங்குவோரு க்குத் துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும்
இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து
வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார். இந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர்.
நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு
திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த
ஆலயத்தின் தல விருட்சம் புங்க மரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான
கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது.
வைகாசி விசாகம், 10 நாள்
பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து
நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள்
கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு
தினங்கள் போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும்
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
பஞ்ச லிங்கங்கள் : ஒரு முறை சுவாமிக்கும் அம்பாளுக்கும் ‘அழகில் யார் சிறந்தவர்?’ என்ற போட்டி வந்தது. போட்டி
வரும்போது பூலோகத்தில் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து மூன்று முடிச்சு போட்டு
கீழே போடுகிறேன். அது எங்கு எந்த இடத்தில் கீழே விழுகிறதோ அங்கு அழகில்
சிறந்தவள் இருப்பதாக ஒப்புக் கொள்கிறேன் என்று சிவபெருமான் கூறினார். அதற்கு
அம்பாளும் சம்மதித்தார். அதன்படி சிவபெருமான், ஒரு தர்ப்பையை எடுத்து கீழே
போட்டார். அது இந்தத் திருத்தலத்தில் வந்து விழுந்து பஞ்ச லிங்கங்களாக
மாறியதாகத் தல புராணம் சொல்கிறது. இந்தப் பஞ்ச லிங்கங்களை வணங்கினால், திருமண வரம், நாகதோஷ நிவர்த்தியாகும் என்பது
பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கோவில் அமைப்பு
இக்கோவில் நிரம்பப் பெரிய கோவிலும்
இல்லாமல், சின்னஞ்
சிறிய கோவிலாக இல்லாமல் நடுத்தர அளவில் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து நந்தி
மண்டபம் வந்து, நந்தியெம்பெருமானைக்
கடந்து கோயில் கருவறையில் இறைவனைத் தரிச்சிக்க வேண்டும். மகா மண்டபத்திலே தெற்கு
நோக்கி சிவகாமிநாதன் சிவகாமியோடு நடம் ஆடிய கோலத்தில் நிற்கிறார் நடராசர். அவரது
திருவடியில் குடமுழா வையும், பஞ்சமுக வாத்தியத்தையும் முழக்கும் பூதகணங்கள் உள்ளளன. அம்மனான
சௌந்திரநாயகி தனிக் கோவிலில்
உள்ளார். இத்தலத்தில் திருநாளைப் போவாராம் நந்தனாரைச் செப்புச் சிலை வடிவில் காண
இயலும்.
திருநாளைப்போவார் (நந்தனார்)
வணங்குவதற்காக இறைவன் நந்தியைச் சற்று விலகியிருக்குமாறு அருள் செய்த தலம்.
ஏயர்கோன்
கலிக்காமர், சுந்தரருடன்
வந்து தரிசித்த தலம்.
சுந்தரர் பால் கோபங்கொண்ட விறன்மிண்ட
நாயனார் (இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து) வழிபட்ட சிறப்புடைய தலம்.
திரு நாளைப் போவாரின் (நந்தனார்)
ஊரான ஆதனூர் இத்தலத்திற்குப் பக்கத்தில் 5 கி.மீ. -ல் உள்ளது. உள்சுற்றில் இடப்பால் நந்தனார்
திருவுருவம் உள்ளது.
இங்குள்ள நந்தி
(திருநாளைப்போவாருக்காக வழிவிட்டு) சற்று விலகியுள்ளது.
இங்குள்ள சோமாஸ்கந்தர் - பெரிய
திருமேனி இத்தலத்திற்கு உரிய தனிச்சிறப்பு - தரிசிக்கத்தக்கது.
சூரியன், அக்கினி வழிபட்ட லிங்கங்கள் கோவிலுள்
உள்ளன.
தலப்
பதிகங்கள் சலவைக் கல்லில் பதிக்கப்பெற்றுள்ளது.
நடராச சபையில் உள்ள நடராச வடிவம்
கலையழகு வாய்ந்தது; இப்பெருமான்
பாதத்தில் தேவர் ஒருவர் அமர்ந்து தன் நான்கு கரங்களாலும் பஞ்சமுக வாத்யத்தை
அடித்து இசை எழுப்புகின்றதைத் தரிசித்து இன்புறலாம்.
சுவாமி சந்நிதிக்கு முன்புள்ள இரு
துவாரபாலகர்களுள் தென்புறம் உள்ள வடிவம் சற்றுத் தலையைச் சாய்த்து நந்தியை
விலகியிருக்குமாறு கட்டளையிடுவதுபோலக் காட்சி தருவது கண்டு மகிழத்தக்கது.
மூலவர் சுயம்பு மூர்த்தி-மண்புற்று; இதன் மீது சார்த்தப்பட்டிருக்கும்
குவளைக்குத்தான் நாடொறும் அபிஷேகம் நடைபெறுகின்றது.
மூவர் திருப்பதிகங்கள் பளிங்குக்
கற்களில் பதிக்கப் பெற்றுள்ளன.
தேரடியில் நின்று தரிசித்த
நந்தனாருக்கு, அத்தேரடியைப்
புதுப்பித்துக் கோவில் கட்டப் பெற்றுள்ளன. கல்வெட்டில் இவ்விறைவன், 'சிவலோகமுடைய நாயனார் ' என்று குறிக்கப் பெறுகின்றார்.
இத்தலத்துக் கல்வெட்டுக்களில்
இறைவனுடைய திருமஞ்சனத்திற்கும், திருப்பள்ளியெழுச்சிக்கும், பூமாலைகள் கட்டிச் சார்த்துதற்கும்
நிலம் விடப்பட்ட செய்திகள் குறிக்கப் பெற்றுள்ளன.
இத்தலத்திற்குப் பக்கத்தில் ஏயர்
கோனின் அவதாரத் தலமாகிய 'பெருமங்கலம்
' உள்ளது.
தொடர்புக்கு
:-94867 17634.
இக்கோயிலுக்கு
அருகில் உள்ள 14 கோவில்கள்:-
I. வைத்தீஸ்வரன்கோயில்
to தென்திருமுல்லைவாசல்
1. வைத்தீஸ்வரன்
கோவில் - வைத்தியநாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
நவக்கிரக
தலங்களில் செவ்வாய் ஸ்தலம்.
2. திருகோலக்கா
- சப்தபுரீசுவரர் திருக்கோவில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
வைத்தீஸ்வரன்
கோவிலிருந்து 6 கி.மீ
தொலைவில் உள்ளது.
3. சீர்காழி
- சட்டைநாதர் திருக்கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
திருகோலக்கா
வில் இருந்து 1.5 கி.மீ
தொலைவில் உள்ளது.
4. திருக்குருகாவூர்
- வெள்ளடையீசுவரர் திருக்கோயில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
சீர்காழியிலிருந்து
6 கி.மீ
தொலைவில் உள்ளது.
5. தென்
திருமுல்லைவாசல் - முல்லைவன நாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
திருக்குருகாவூரிலிருந்து
9 கி.மீ
தொலைவில் உள்ளது.
II. வைத்தீஸ்வரன்
கோவில் to பல்லவனீச்சுரம்
1. திருநின்றியூர்
– லட்சுமிபுரீசுவரர்
திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
வைத்தீஸ்வரன்கோயிலில்
இருந்து 7 கி.மீ
தொலைவில் உள்ளது.
2. குறுமானக்குடி
(திருக்கண்ணார் கோவில்) – கண்ணாயிரநாதர்
திருக்கோவில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
திருநின்றியூரிலிருந்து
8 கி.மீ
தொலைவில் உள்ளது.
3. கீழைத்திருக்காட்டுப்பள்ளி
- ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
குறுமானக்குடியிலிருந்து
11 கி.மீ
தொலைவில் உள்ளது.
4. திருவெண்காடு
- சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில் (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
நவக்கிரக
தலங்களில் புதன் ஸ்தலம்.
கீழைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து
2 கி.மீ
தொலைவில் உள்ளது.
5. திருசாய்க்காடு
(சாயாவனம்) - சாயாவனேஸ்வரர் திருக்கோவில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
திருவெண்காட்டிலிருந்து
4 கி.மீ
தொலைவில் உள்ளது.
6. பல்லவனீச்சுரம்
- பல்லவனேஸ்வரர் திருக்கோவில் (NCN010)
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
திருசாய்க்காட்டிலிருந்து
1 கி.மீ
தொலைவில் உள்ளது.
III. வைத்தீஸ்வரன்
கோவில் to திருக்குரக்காவல்
1. திருப்புன்கூர்
- சிவலோகநாதர் திருக்கோயில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
* * * (பதிவில்
காணும் கோவில்)
வைத்தீஸ்வரன்கோவிலில்
இருந்து 5 கி.மீ
தொலைவில் உள்ளது.
2. மேலநல்லூர்
- மஹாதேவர் திருக்கோவில்
(நந்தனார்
அவதார ஸ்தலம்)
திருப்புன்கூரிலிருந்து
5 கி.மீ
தொலைவில் உள்ளது.
3. தலைஞாயிறு
(திருகருப்பறியலூர்) – குற்றம்
பொறுத்தநாதர் திருக்கோவில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
மேல
நல்லூரிலிருந்து 8 கி.மீ
தொலைவில் உள்ளது.
4. திருக்குரக்காவல்
- குந்தள நாதர் திருக்கோவில்
(தேவாரப்பாடல்
பெற்ற தலம்)
தலைஞாயிறு
தலத்தில் இருந்து 5 கி.மீ
தொலைவில் உள்ளது.
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் -
1. முந்தி நின்ற வினைக (1.27);
அப்பர்
- 1. பிறவாதே தோன்றிய (6.11);
சுந்தரர் -
1. அந்த ணாளன் உன் (7.55);
பாடல்கள் : அப்பர் -
காவார் சடைமுடியர் (6.17.8),
புலங்கள் (6.22.6),
புன்கூரார் (6.51.11),
கையுலாம் (6.59.3),
பொழிலானைப் (6.60.10),
புலிவலம் (6.70.11);
சுந்தரர் -
மைகொள் கண்டன் (7.12.10);
கபிலதேவ நாயனார் -
புலர்ந்தால்யான் (11.23.74) சிவபெருமான் திருவந்தாதி;
பட்டினத்துப் பிள்ளையார் - நண்ணிப் பரவும் (11.30.62) திருஏகம்பமுடையார்
திருவந்தாதி;
நம்பியாண்டார் நம்பி -
பொன்னம் பலத்துறை (11.33.54) கோயில்
திருப்பண்ணியர் விருத்தம்;
சேக்கிழார் -
தேன் ஆர்க்கும் (12.05.115) தடுத்தாட்கொண்ட
புராணம்,
திருப் புன்கூர்ச் (12.18.16 & 17) திருநாளைப்போவார்
நாயனார் புராணம்,
நீடு திரு
நின்றியூரின் (12.28.287) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம்,
ஆண்ட அரசு எழுந்து
அருளக் (12.21.189) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்,
இருவரும் எழுந்து (12.29.7,153 &
406) ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.
·
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
திருஞான சம்பந்தர் பாடிய பதிகம்
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி
நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்தம்
இல்லா அடிக ளவர்போலுங் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
மூவ ராய
முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
ஆவ
ரென்னும் அடிக ளவர்போலும் ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.
திருநாவுக்கரசர் பாடிய பதிகம்
பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப்
பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்
துறவாதே
கட்டறுத்த சோதி யானைத் தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் றன்னைத்
திறமாய
எத்திசையுந் தானே யாகித் திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நிறமா
மொளியானை நீடூ ரானை நீதனே னென்னேநான் நினையா வாறே..
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய பதிகம்
அந்த
ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாக
வந்த
காலன்தன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை
நீஎனை நமன்றமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தை
யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே..
நந்தனார் திரைப்படத்தில் தண்டபாணி
தேசிகர் பாடிய
'என்
அப்பன் அல்லவா' பாடல்.
https://www.youtube.com/watch?v=mOOyGuIrEjw
'காண
வேண்டாமோ' பாடல்.
https://www.youtube.com/watch?v=jcDVrX0g8t4
'பிறவா
வரம் தாரும்' பாடல்.
https://www.youtube.com/watch?v=ynTaIjmCUSM
|