"எதுவுமே வேண்டாம்!..
எந்த பாகவதா கிட்டயும் அபசாரப் படாம, நீ அவாளோட அபிமானத்துல ஒதுங்கி இரு!..
அதுவே ஒன்னக் கரை சேர்க்கும் அம்மணி.."
.....என்று பெரிய ஜீயர், திருவல்லிக்கேணி அம்மையாரைப் பார்த்து, தற்பொழுது ஒரு வார்த்தை சொன்னதும்,
அம்மையார் விரக்தியாகச் சிரித்தாள்...
"ஸ்வாமி... பாகவத அபசாரம் படாம இருக்கணும்னு அடியேனுக்குத் தெரியறது..
ஆனா, அடியேன் இதுவரையிலும் அப்படி நடந்துண்டு இருக்கேனாங்கறது சந்தேகமாத்தான் இருக்கு!..
அப்படியே ஒரு வேளை அபசாரப் பட்டிருந்தாலும், ஒடனே அவாகிட்ட மன்னிப்பு கேட்டுக்கற பக்குவமாவது எனக்கு இருந்துருக்கானு யோசிக்கச்சே,
எனக்கு அதுக்கான விடை தெரியல!..
ஸ்வாமி... அடியேன் என்ன,
"உலகாரியனோ என்றுரைத்தேனோ தோழப்பரைப் போலே?.."
....என்று ஒரு கேள்வியை ஜீயரிடம் வைத்துவிட்டு, வெகு சகஜமாய் மேலே தொடர்ந்தாள்..
"முதலியாண்டான் ஸ்வாமிகளோட திருப்பேரனான "கந்தாடைத் தோழப்பர்", தம்மோட குலப்பெருமைக்கு ஏத்த மாதிரி மஹா வித்வானா இருந்தார்..
இவர் ஶ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திலேயும் ரொம்ப ஊற்றத்தோட இருந்தார்..
அவர் காலத்திலே, அதே ஶ்ரீரங்கத்துல, "நம்பிள்ளை"னு ஒரு மஹனீயர், ஆசார்யபதம் நிர்வஹிச்சுண்டிருந்தார்..
ரொம்பவும் "நா வண்மை"யும், குணபூர்த்தியும் கொண்டவர்கறதால, இவர் கிட்ட எப்பவும் வித்வான்களோட கும்பல் நெறய இருக்கும்..
ஆனா, குலப்பெருமை, அறிவு எல்லாம் நெறய இருந்தாலும், தோழப்பரத் தேடி வரவா ரொம்பவும் கொஞ்சம் பேர்தான் இருந்தா..
அதனால, அசூயைக்கு ஆட்பட்ட தோழப்பர், ஒரு சமயம், நம்பிள்ளைய கடுஞ்சொற்களால ஏசிட்டார்..
....இந்த மாதிரி தகாத வார்த்தைகளால நம்பிள்ளையத் தோழப்பர் ஏசின விஷயம்,
அவரோட பார்யாளுக்கும் (மனைவி) எட்டிடுத்து..
தோழப்பர பார்த்த மாத்திரத்தில், நம்பிள்ளை
நாத்தழுதழுக்க,
"அடியேன்...
பெருங்குலத் தோன்றலான முதலியாண்டானோட திருப்பேரனாரோட மனசு ஆதங்கப்படும்படி நடந்துண்ட அடியேனுக்கு,
ஒம்ம வாசல் தவிர வேறு புகல் இல்லை!.."
என்று வருத்தத்தோடே விண்ணப்பித்தார்..
நம்பிள்ளையோட இந்த குணபூர்த்தியக் கண்டு, தோழப்பர்
ரொம்பவும் வெட்கிப் போய், அவரோட திருவடிகள்ல தெண்டனிட்டு,
இவரை அநுவர்த்திப்பதாகப் புறப்பட்டு வந்து நிற்கிற தோழப்பரும் பிள்ளை கண்வளர்ந்தருளுகிற தைந்யத்தையும் கண்டு, அவருடைய நைச்யமான வார்த்தைகளையும் கேட்டு
இன்னிக்கு அடியேன் தம்மிடத்தில ரொம்பவும் அபசாரப் பட்டுட்டேன்..
அடியேனோட பிழைய, க்ருபையோட தேவரீர் பொறுத்தருளணும்.."னு வேண்டினார்..
உடனே நம்பிள்ளை, தோழப்பரை அணைத்துச் சமாதானம் பண்ணினார்..
பிள்ளையை வாரி எடுத்தணைத்துக்கட்டிக்கொண்டு ‘இத்தனை நாளும் நீர் சிறிது பேருக்கு ஆசார்யர் என்றிருந்தேன்; இப்போது லோகத்துக்கெல்லாம் நீரே ஆசார்யராகைக்கு ப்ராப்தர் என்றறிந்தேன் என்று"தேவரீர்தான் இந்த உலகத்துக்கெல்லாம் ஒரு ஆசார்யரா இருக்கத்
தகுந்தவர்..
‘லோகாசார்யர்’ என்று தோழப்பர் உகந்து பிள்ளைக்கு திருநாமம் சாற்றி, தம்முடைய திருமாளிகைக்குள்ளே கொண்டுபுக்கு, தாமும் பிள்ளையை அநேகமாக அநுவர்த்தித்து அவர் திருவுள்ளத்தையும் நன்றாக உகப்பித்துத் தமக்கு வேண்டும் அர்த்த விஶேஷங்களெல்லாம் பிள்ளை திருவடிகளிலே கேட்டுக்கொண்டு தோழப்பரும் மிகவும் க்ருதார்த்தரானார்
அதுலேந்து நம்பிள்ளைக்கு, "லோகாசாரியர்",
"உலகாரியன்" னு பெயர் நெலச்சு நின்னுது..
.....சொல்லுங்கோ ஸ்வாமி...
இவா ரெண்டு பேர்கிட்டயும் இருக்கற குணபூர்த்தியில ஒரு துளியாவது அடியேன் கிட்ட இருக்கா?..
அஹங்காரம் இல்லாம இருக்கறவாதானே ஸ்வாமி, ஒரு பாகவதரோட நிழல்ல ஒதுங்க ஆசப்படுவா!..
அடியேன் இதுக்கெல்லாம் ஒரு "விதி விலக்கு" ஸ்வாமி.."
.....என்று நெகிழ்ச்சியோடு பேசி, திருவல்லிக்கேணி அம்மையார் தலை குனிந்தாள்..
(வளரும்..)
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu