லோகநாதப் பெருமாள் கோவில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. மேலும் இது பஞ்சகிருஷ்ண தலங்களிலும் ஒன்றாகும்.

பெயர்: லோகநாதப் பெருமாள்
திருக்கோவில்:திருக்கண்ணங்குடி
மாவட்டம்: நாகப்பட்டினம் மாவட்டம்
கோவில் தகவல்கள்:
மூலவர்: லோகநாதர், சியாமளமேனி
பெருமாள் (விஷ்ணு)
உற்சவர்: தாமோதர நாரயணன்
தாயார்: லோகநாயகி (லட்சுமி)
உற்சவர் தாயார்: அரவிந்தவல்லி
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் : திருமங்கை ஆழ்வார்
விமானம்: உற்பலாவதகம்
தல விருட்சம்: மகிழம்
கல்வெட்டுகள்: உண்டு
மூலவர்: லோகநாதப் பெருமாள்
இவர் சியாமளமேனிப் பெருமாள்என்றும் அழைக்கப்படுகிறார். பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார்.
தீர்த்தங்கள்: ராவண புஷ்கரணி தீர்த்தம்,
பிரம்மா, கௌதமர், வசிட்டர், பிருகு, உபரிசரவசு, திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை நேரில் தரிசித்துள்ளனர்.
இங்கு மூலவரும் உற்சவரும் ஒரே மாதிரியாகக் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பாகும். இங்கு கருடாழ்வார் கைகளைக் கட்டிய நிலையில் உள்ளார்.
இத்தலத்தில் நடைபெறும் திருநீறணி விழா சிறப்பு வாய்ந்தது. இத்திருவிழாவில் பெருமாள் உட்பட அனைவரும் திருநீறு அணிகின்றனர். சைவ வைணவ சமய ஒற்றுமைக்கு சான்றாக இவ்விழா நடத்தப்படுகிறது.
கண்ண பெருமானின் விளையாட்டுக்கள் தான் எத்தனை எத்தனை? அவற்றில் ஒன்று நடந்த இடம் தான் திருக்கண்ணங்குடி. திருவாரூருக்கு 14 கிலோ மீட்டர் தொலைவில் சிக்கலுக்கும் கீவளூருக்குமிடையில் அறிவு என்னும் சிறிய ஊரில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் என்று இந்த ஐந்தும் கொண்டு மிகவும் அற்புதமாக அமைந்த ஸ்தலம் என்பதால் பஞ்ச பூத்ர ஸ்தலம் அல்லது பஞ்ச கிருஷ்ண சேத்திரம் என்று பெரிதும் போற்றப்படுகிறது.
ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் பக்த உலா மண்டபம், சோபன மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபமும் கொண்டு மூலவர் ஸ்ரீ லோகநாதப் பெருமாள், சியாமள மேனிப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தாயார் லோகநாயகி, உத்சவர் அரவிந்தவல்லி. தீர்த்தம்ராவண புஷ்கரணி. கோவிலுக்குள் எட்டு தீர்த்தக் கிணறு உண்டு. உற்சவர் தாமோதர பெருமாள். இடது கரத்தை இடுப்பில் வைத்துக் கொண்டு தரிசனம் தருகிறார். விமானம் உற்பலாவதகம். 'தல விருட்சம் மகிழமரம். காயா மகிழ்; உறங்காப்புளி; தோலா வழக்கு ஊறாக்கிணறு திருக்கண்ணங்குடி என்று என்று பல்வேறு அதிசயங்களை கொண்டு இத்தலம் விளங்குகிறது.
வசிஷ்டர், பெண்ணை கொண்டு கிருஷ்ணரை உருவமாக பிடித்து அது இளகாத வண்ணம் வைத்து பகவானை வணங்கி கொண்டிருந்தார். பகவான் கிருஷ்ணன், வசிஷ்டரை சோதிக்க ஒருநாள் தானே குழந்தையாக வந்து வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய் கிருஷ்ணனை உண்டு விட்டார். இதைக் கண்டு பதறி, குழந்தை கிருஷ்ணனை துரத்த அந்த குழந்தை இந்த கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பதுங்கியது. அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனை யார் என்று அறியாமல் கட்டிப் போட்டதால் இதற்கு திருக்கண்ணங்குடி என்று பெயர் வந்தது.
ஒரு சமயம் திருமங்கையாழ்வார் திருவரங்கம் கோயிலுக்கு திருப்பணி செய்யும் பொருட்டு நாகப்பட்டினத்திலிருந்து தங்கமயமான ஒரு புத்த விவரத்தை எடுத்து வந்தார். நள்ளிரவில் ஓய்வெடுக்க விரும்பிய பொழுது, இத்தலத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் புதைத்துவிட்டு நான் அயர்ந்து உறங்கினாலும் நீ உறங்க விடாமல் இந்த விவரத்தை பார்த்துக்கொள் என்று புளிய மரத்தைப் பார்த்து சொன்னார். புளிய மரமும், திருமங்கையாழ்வார் சொன்னபடி கேட்டு உறங்காமல் அந்த விவரத்தை காத்தது. அதனால் இன்றுவரை இங்குள்ள புளிய மரத்திற்கு 'உறங்காப் புளிய மரம்' என்ற பெயரும் உண்டு. இன்னொரு அதிசயம் இங்குள்ள கிணறுகளில் தண்ணீரை தென்படுவதில்லை. இந்த ஊரில் என்ன வழக்கு நடந்தாலும் அது இன்றுவரை முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில் ' திருநீர்' அணிந்துகொண்டு பெருமாள் காட்சியளிப்பது ஆச்சரியமான செய்தியாகும். கருடன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு தரிசனம் தருகிறார். தாயார் சன்னதியிலுள்ள மூலவரும், உற்சவரும் ஒரே ஜாடையில் இருப்பது, வேறு எந்தக் கோயிலிலும் காண முடியாத அதிசயம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.
பரம்பரை பரம்பரையாக வந்த சொத்துக்கள் கைவிட்டு போகாமல் இருப்பதற்கும் நம் குலமக்கள் வழி தவறி நடக்காமல் குடும்பப் பெருமையை நிலைநாட்டுவதற்கும் தெரியாத்தனமாக தவறுகள் செய்து வம்பில் மாட்டிக் கொண்டு அவர்களுக்கும், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாமல் தத்தளிப்போர்க்கும் கடன் சுமையால் வாடுபவர்களுக்கும் இந்த ஸதலம் நன்மையைச் செய்யும். இங்குள்ள பெருமாளை சேவித்து, அபிஷேகம் ஆராதனை செய்து வந்தால் போதும். பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பஞ்சாக பறந்துவிடும்.
| You tube link: |
https://www.youtube.com/watch?v=Hyr1s6t6veo
Shri. Velukkudi Krishnan's you tube link:
https://www.youtube.com/watch?v=RMbQN9Qtif0
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
