திருநக்ஷத்ரம் : ஐப்பசியில்
திருமூலம்
அவதார ஸ்தலம் : ஆழ்வார் திருநகரி
ஆசார்யன் : திருவாய்மொழிப் பிள்ளை
சிஷ்யர்கள் : அஷ்டதிக் கஜங்கள் : பொன்னடிக்கால் ஜீயர்
,கோவில் அண்ணன் , பத்தங்கி பரவஸ்து
பட்டர்பிரான் ஜீயர், திருவேங்கட ஜீயர், எறும்பியப்பா , அப்பிள்ளை , அப்பிள்ளார்
, பிரதிவாதி பயங்கரம் அண்ணா. நவ ரத்தினங்கள் : சேனை முதலியாண்டான்
நாயனார், சடகோப தாசர் (நாலூர் சிற்றாத்தான்), கந்தாடை போரேற்று நாயன், ஏட்டூர் சிங்கராசாரியார்,
கந்தாடை அண்ணப்பன், கந்தாடை திருகோபுரத்து
நாயனார், கந்தாடை நாரணப்பை , கந்தாடை
தோழப்பரப்பை, கந்தாடை அழைத்து வாழ்வித்த பெருமாள். மணவாள
மாமுநிகளுக்குப் பல திருவம்சங்களிலிருந்தும், திருமாளிகை யிலிருந்தும்
மற்றும் திவ்ய தேசங்களில் இருந்தும் மேலும் பல சிஷ்யர்கள் இருந்தார்கள்.
பரமபதித்த இடம் : திருவரங்கம்
அருளிச் செய்தவை : தேவராஜ மங்களம்,
யதிராஜ விம்சதி, உபதேச ரத்தினமாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி , ஆர்த்தி பிரபந்தம்.
வ்யாக்யானங்கள் : முமுக்ஷுப்படி,
தத்வத்ரயம், ஸ்ரீ வசன பூஷணம் , ஆசார்ய ஹ்ருதயம் , பெரியாழ்வார் திருமொழி
(பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானங்களிலிருந்து
கரையானுக்கு இரையான பகுதிக்கு மட்டும்) , இராமானுச நூற்றந்தாதி .
ப்ரமாண திரட்டு (ஒரு கிரந்தத்தைச்
சார்ந்த அனைத்து சுலோகங்கள் மற்றும் சாஸ்த்ர வாக்கியங்களைத் திரட்டுதல்) : ஈடு 36000
படி, ஞான ஸாரம், ப்ரமேய
ஸாரம் , தத்வ த்ரயம் , ஸ்ரீ வசன
பூஷணம்.
நூல்
|
காலம்
|
குறிப்பு
|
ஆறாயிரப்படி
|
பொ.ஊ. 12ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
|
இராமானுசர் எழுதச் சொன்னார்
|
ஒன்பதினாயிரப்படி
|
பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டு
|
நம்பிள்ளை இதனைக் காவேரியில் போக விட்டுப் புதிதாக எழுதிக்
கொடுத்தார்
|
பன்னீராயிப்படி
|
பொ.ஊ. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம்
|
வாதிகேசரி - அழகிய மணவாளப் பெருமாள் ஜீயர், பெரியவாச்சான் பிள்ளையின் சீடர்
|
இருபத்து நாலாயிரப்படி
|
பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டின் இறுதி
|
நம்பிள்ளை கட்டளையிட்டதன் பேரில் எழுதினார்
|
முப்பத்தாறாயிரப்படி என்னும் ஈடு
|
பொ.ஊ. 13ஆம் நூற்றாண்டின் இறுதி
|
நம்பிள்ளை அருளால் வடக்கு திருவீதி பிள்ளை எழுதியது.
|
· இந்த ஐந்தில் நம்பிள்ளை சொல்ல திருவீதிப்பிள்ளை எழுதிய உரைக்கு மட்டும் 'ஈடு' என்னும் சிறப்பு அடைமொழி உண்டு.
·
இவற்றில்
'ஈடு'
என்னும் சொல் செய்யுளுக்கு ஈடாக எழுதப்பெற்றுள்ள உரை என்பதனைக்
குறிக்கும்.
இவற்றில் ‘படி’ என்னும்
சொல் ஓலையில் எழுதப் பள்ள எழுத்தெண்ணிக்கைப் படிவத்தைக் குறிக்கும்.
ஆழ்வார்திருநகரியிலே திகழக்கிடந்தான்
திருநாவீறுடையபிரான் ஸ்ரீரங்க நாச்சியார் தம்பதிக்கு, ஆதிசேஷன்
திருவவதாரமாகவும் அனைத்துலகும் வாழப்பிறந்த யதிராஜர் புனரவதாரமாகவும் ஜனித்த வள்ளல் அழகிய
மணவாளப் பெருமாள் நாயனார். அழகிய மணவாள மாமுனிகள், ரம்யாஜாமாத்ரூ முனி, காந்தோபயந்த்ரூ முனி, ரம்யாஜாமாத்ரூ யோகி, வரவரமுனி, யதீந்த்ர ப்ரவணர், இராமானுசன் பொன்னடி, ஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்திரர்,
பெரிய ஜீயர், சுந்தர ஜாமாத்ரு முனி, மற்றும் பல திருநாமங்களால் இவர் அறியப்படுகிறார் .
- மணவாள மாமுனிகள் பிரதிவாதி பயங்கரம் அண்ணாவை
ஸ்ரீ பாஷ்ய ஆசார்யனாகவும், கோயில் கந்தாடை அண்ணன் மற்றும் சுத்த சத்வம் அண்ணனை பகவத் விஷய
ஆசார்யனாகவும் நியமித்தார். மேலும் கந்தாடை நாயனை ஈடு 36000 படிக்கு அரும்பதம் சாதிக்குமாறு நியமித்தார்.
- மணவாள மாமுனிகளிடமிருந்து திருவாய்மொழியின்
விசேஷ அர்த்தங்களைத் தான் எவ்வித இடையூறுகளும் இன்றிக் கேட்க வேண்டும் என்ற
ஏக்கமும் , மணவாள மாமுனிகளைத்
தனக்கு ஆசார்யனாகப் பெற வேண்டும் என்ற திருவுள்ளமும் பெரிய பெருமாளுக்கு
ஏற்பட, ஒரு பவித்ரோத்ஸவ சாற்றுமறை நன்னாளிலே, மங்களாசாசனம் செய்யத் திருப்பவித்ரோத்ஸவ மண்டபத்திற்கு எழுந்தருளிய
மணவாள மாமுனிகளை அங்கே எழுந்தருளியிருந்த நம்பெருமாள் அனைத்து
கைங்கர்ய பரர்கள் , ஜீயர் சுவாமிகள் போன்றோர்
முன்னிலையில் , ஈடு 36000த்தின்
வ்யாக்யானங்களைக் கொண்டு நம்மாழ்வாரின் திருவாய்மொழியின் அர்த்தங்களைத்
தனக்குக் காலக்ஷேபம் செய்ய வேண்டும் என்று நியமித்தார். இந்தக் காலக்ஷேபம்
எந்த விதமான இடையூறுகளும் இடைஞ்சல்களும் இன்றி நடக்க வேண்டும் என்றும்
உத்தரவிட்டார். இதனை மணவாள மாமுனிகள் பெருமிதத்தோடும் , இப் பணிக்குத் தன்னைப் பெரிய பெருமாள் தேர்ந்தெடுத்ததை மிக
நைச்யத்தோடும் (தன்னடக்கத்தோடும்) ஏற்று மகிழ்ந்தார்.
- இதனைத் தொடர்ந்து ,அடுத்த நாள் மணவாள மாமுனிகள்
பெரிய பெருமாள் ஸந்நிதி துவார பாலகர்களுக்கு வெளியில் அமைந்த பெரிய
திருமண்டபத்திற்கு எழுந்தருளுகையில், நம்பெருமாள்
தனது தேவிமார்களோடும், சேனை முதல்வரோடும், கருடனோடும், திருவானந்தாழ்வானோடும் மற்றுமான
ஆழ்வார் ஆசார்யர்கள் பரிவாரங்களோடும் காத்துக் கொண்டிருந்தார். இதனைக்
கண்டு நெகிழ்ந்த பெரிய ஜீயர் காலக்ஷேபத்தை ஈடு 36000 படி
வ்யாக்யானத்தை 6000 படி , 9000 படி
, 24000 படி, 12000 படி
உள்ளிட்ட மற்ற வ்யாக்யானங்களோடு தொடங்குகிறார். பாசுரங்களுக்குப்
பதபதார்த்தம் (சொல்) இது என்றும், சுருதி, ஸ்ரீபாஷ்யம், சுருதப்ரகாசிகை, ஸ்ரீ கீதாபாஷ்யம், ஸ்ரீ பாஞ்சராத்ரம்,
ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ விஷ்ணு புராணம்
போன்றவைகளின் அடிப்படையில் அர்த்தம் இது என்றும் மிக விசதமாக நெய்யிடை
நல்லதோர் சோறாய் சமைத்து சுமார் 10 மாத காலம்
சாதித்து வந்தார்.
- கடைசியில் ஆனித்
திருமஞ்சனத்தில் சாற்றுமுறை என்ற தேதியை
அடைகின்றனர்.
சாற்று முறை முடிந்ததும், நம்பெருமாள் அரங்கநாயகம்
என்ற சிறு குழந்தையாக உருவெடுத்து, மற்றவர்கள்
தடுத்து நிறுத்தும் போதும் கோஷ்டியின் முன்புறம் வருகிறார். அஞ்சலி முத்திரையை வைத்துக் கொண்டு, “ஸ்ரீசைல்ஈச தயாபத்திரம்”
என்று சொல்லத் தொடங்குகிறார், மேலும்
சொல்லும் போது “திபக்திஆதி குணாநவம்” என்றும், மேலும் சொல்லும்படி கேட்டால் “யத்இந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜமாத்ரம் முனிம்” என்றும் சொல்லிவிட்டு ஓடி விடுகிறார். சிஷ்யர்கள் ஸ்லோகத்தை பதிவு
செய்து குழந்தையை கோஷ்டிக்கு கொண்டு வரும்போது, பனை ஓலையில் இருந்து எதையும்
படிக்க முடியாமல் மீண்டும் ஓடிவிடுகிறார். நம்பெருமாளே தன் ஆச்சார்யருக்குத்
தாணிணியை வழங்குவதைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதை அனைவரும்
புரிந்து கொள்கிறார்கள்.
- இப்படி நம்பிள்ளையின் திருவாய்மொழி
36000 படி ஈட்டை மணவாள மா முனிகள் போல பெருக்கி
உள் அர்த்தங்களை அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை எனக்கில்லையே சுவாமி என்று சாதிக்கிறார் திருவல்லிக் கேணி பெண் பிள்ளை.
|