பெரிய நம்பியின் மகள் அத்துழாய் தன் மாமியாரிடம் ஆற்றுக்குக் குளிக்கச் செல்ல ஒரு ஆள் துணைக்கு வேண்டும் எனக் கேட்க மாமியாரும் உன் பிறந்தகத்தில் இருந்து சீதன வெள்ளாட்டி (வேலைக்காரி) கொண்டு வரச் சொல்லு என்றாள். அத்துழாயும் தன் தந்தை பெரிய நம்பியிடம் கேட்டாள். பெரிய நம்பி நாம் எம்பெருமானாரையே சார்ந்துள்ளோம் என்று சொல்ல இவளும் எம்பெருமானாரைக் கேட்டாள்.
எம்பெருமான் தன் சிஷ்யர்களிடையே சுற்றிப்பார்த்து அவரது கண்கள் ஆண்டானிடம் நிற்க, அவரை அத்துழாயுடன் செல்லப் பணிக்க அவரும் குருவின் ஆணையை மகிழ்ச்சியுடன் ஏற்று அவளைப் பின் தொடர்ந்து சென்றார். வைணவப் பெரியோர்களில் மிகவும் புகழத்தக்க முதலியாண்டான் கிபி 1027 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தில் சென்னை அடுத்த பூந்தமல்லிக்கு அருகில் பச்சைவர்ணபுரம் (தற்போதைய நசரத்பேட்டை எனும் ஊரில் அனந்தநாராயண தீட்சிதர் மற்றும் நாச்சியாரம்மாள் (இராமானுசரின் தங்கை) எனும் தம்பதிக்கு மகனாக பிறந்தார்."தாசரதி" எனும் இயற்பெயருடைய இவர் வைணவ குருவான இராமானுசரின் மருமகன் ஆவார். ஸ்ரீராமானுஜர் சன்யாசம் பெற்றுக் கொண்டவுடன் அவரை அடிபணிந்து அவருடைய சீடரானார். பின்னாளில் *'சீடர்கள் அனைவருக்கும் இவரே முதல்வராயிருந்தபடியால் முதலியாண்டான் என்று அழைக்கப் பெற்றார்,
ஆண்டானும் அவளுக்கு எல்லா உதவிகளும் தினசரி செய்து கொண்டிருக்கும் வேளையில் அத்துழாயின் மாமியார் வீட்டில் உள்ளவர்களுக்கு, இவ்வளவு உயர்ந்த பண்டிதர், ராமானுஜரின் சிஷ்யர்களின் தலைவரான ஆண்டான் சாதாரண வீட்டுப் பணியாளராக இருப்பது வருத்தமாய் இருந்ததால் ஆண்டானிடம் வேலையை நிறுத்தச் சொன்னார்கள். ஆண்டான் அதற்கு, எம்பெருமானாரின் கட்டளை, இதை நிறைவேற்றுவேன் என்றார். அவர்கள் உடனே பெரிய நம்பியிடம் சென்று முறையிட்டார்கள். பெரிய நம்பியும் அவர்களை எம்பெருமானாரிடம் அனுப்ப, அவரும் நீங்கள் உதவி கேட்டதால் அனுப்பினோம் வேண்டாம் என்றால் ஆண்டானைத் திருப்பி அனுப்பி விடுங்கள் என்றார். அவர்கள் குற்றத்தை உணர்ந்து ஆண்டானைப் பணி செய்வதை நிறுத்தச் சொன்னர்கள். பெரிய நம்பி, எம்பெருமானார், ஆண்டான் மற்றும் அத்துழாய் இவர்களின் மேன்மையை அறிந்து மன்னிப்புக் கேட்டார்கள், பிறகு அத்துழாயை அன்போடும் பரிவோடும் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஆண்டான் எவ்வளவு உயர்ந்தவர் என்றும், ஆசார்யனின் வாக்குக்குக் கட்டுப்படுகிறார் என்றும் தெரிய வருகிறது. இதிலிருந்து எம்பெருமானாரின் திருவடித் தாமரைகளுக்கு அடியவர்களாக இருப்பவர்கள் நற்குணங்களுக்கு இருப்பிடமாக இருத்தல் வேண்டும் என்பதை உணரலாம். அதற்கு ஆண்டான் ஒரு எடுத்துக்காட்டு.
இப்படி, தமது கல்வியின் மேன்மையை, சீடர்களின் முதன்மையைக் கருதாமல் குருவின் கட்டளையை நிறைவேற்றுதலே முதன்மை என்று கருதி வெள்ளாட்டி ஆனேனோ ஆண்டானைப் போல என்று மணவாள மா முனியிடம் திருவல்லிக் கேணி அம்மாள் கேட்கிறாள்.
திருநக்ஷத்ரம் : சித்திரை, புனர்பூஸம்
அவதார ஸ்தலம் : பேட்டை (நசரத் பேட்டை)
ஆசார்யன்: எம்பெருமானார்
பரமபதித்த இடம்: ஸ்ரீரங்கம்
முதலியாண்டான் அருளிச்செய்தவை: தாடீ பஞ்சகம், ரஹஸ்ய த்ரயம் (எங்கும் கிடைப்பது இல்லை)
ராமானுஜன் பொன்னடி, யதிராஜ பாதுகா, ஸ்ரீவைஷ்ணவ தாஸர் , திருமருமார்பன் என்றும் அழைக்கப் கிறார். இவர் முதலியாண்டான் என்று மிகவும் பிரசித்தமாய் அறியப் பெற்றார் (ஸ்ரீவைஷ்ணவர்களின் தலைவர்). மற்றும் எம்பெருமானாரின் திருவடித் தாமரை (யதிராஜ பாதுகா), எம்பெருமானாரின் த்ரிதண்டம் என இவர் அறியப் பெறுகிறார். குறிப்பு: ஆழ்வானும் ஆண்டானும் எம்பெருமானாருக்கு மிகவும் நெருக்கமுடையவர்கள், பிரிக்க முடியாதவர்கள். எம்பெருமானாரின் த்ரிதண்டம் முதலியாண்டானும், ஜல பவித்ரம் (த்ரிதண்டதில் இணைக்கப்பட்டுள்ள கொடி) கூரத்தாழ்வானும் ஆவார்கள்.
வாழி திருநாமம் :
https://www.youtube.com/watch?v=krIaPtcivmY
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu