ஆதிசேடனது நாகமணி ஒளி வீசியதாலும் (இதனை சாய் - ஒளி என்பர்.) இப்பெயர் பெற்றது.
இறைவர் திருப்பெயர்: சாயாவனேஸ்வரர், அமுதேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: குயிலினும் நன்மொழியம்மை.
தல விருட்சம் | – | கோரை |
தீர்த்தம் : காவிரி, ஐராவத தீர்த்தம்.
வழிபட்டோர்:உபமன்யு முனிவர், இந்திரன், ஐராவதம், இந்திரனின் தாயார், ஆதிசேடன், சம்பந்தர், அப்பர், ஐயடிகள் காடவர்கோன்,
இயற்பகை நாயனார், சேக்கிழார் முதலியோர்
புராணப் பெயர் | – | திருச்சாய்க்காடு, மேலையூர் |
ஊர் | – | சாயாவனம் |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் |
காசிக்குச் சமமான சிறப்புள்ள ஆறு தலங்களுள் ஒன்று. மற்றவை 1. திருவெண்காடு, 2. மயிலாடுதுறை, 3. திருவிடைமருதூர், 4. திருவையாறு 5. திருவாஞ்சியம் . சோழர் கால கல்வெட்டுகள் பத்தும், பாண்டியரது மூன்றும் ஆக பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன.
கோச்செங்கணாரின் மாடக் கோவிலாகும். காலை 7 மணி முதல் 12 மணி வரை,மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். தொடர்புக்கு :- 04364 - 260 151. இயற்பகை நாயனார் வழிபட்டு முக்தி பெற்ற தலம். இயற்பகை நாயனாரின் திருவுருவச் சிலை திருக்கோயில் வளாகத்தில் உள்ளது.
இந்திரன் தாயார் தினமும் இத்தலத்தைப் பூஜித்து வந்தனர். அவரது துயர் நீக்க, இந்திரன் இத் திருமேனியைத் தேவலோகம் கொண்டுபோக எண்ணித் தோண்ட, இச் சிவலிங்கமோ, பாதாளம் வரை சென்றிருந்தமையால், அவரை மீண்டும் அங்கேயே எழுந்தருளச் செய்தான். அவ்வடு இன்றும் உள்ளது.
திருமுறைப் பாடல்கள் :
பதிகங்கள் : தேவாரப்பதிகம் தோடுலா மலர்கள் தூவித்தொழதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்சென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் செல்லும் அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன்மாளச் சாய்க்காடு மேவினாரே. –திருநாவுக்கரசர் திருவிழா:சித்திரை பௌர்ணமியில் தொடங்கி இந்திர விழா 21 நாட்கள் நடைபெறுகிறது. ஆடி அமாவாசையில் அன்னம்பலிப்பு. சித்திரை, வைகாசி மாதங்களில் இயற்பகை நாயனார் பெயரில் தண்ணீர்ப்பந்தல். மார்கழியில் இயற்பகை நாயனாருக்கு 5 நாள் விழா. அதில் நான்காம் நாள் அவருக்கு இறைவன் காட்சி கொடுக்கும் ஐதீகம். தினமும் 4 காலப் பூஜைகள் நடைபெறுகின்றன. அருகாமையிலுள்ள தலங்கள்: திருநின்றியூர், கீழையூர் ( திருக்கடைமுடி ), பூம்புகார் ( பல்லவனீசம் ), புஞ்சை, குறுமாணக்குடி ஆகியன. பிரார்த்தனை: எதிரி பயம் இருப்பவர்கள் வில்லேந்திய வேலவரை வழிபட்டு நலம் பெறலாம். நேர்த்திக்கடன்: வேண்டுகோள்நிறைவேறியவர்கள்இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டுசெய்து, புத்தாடைஅணிவித்து, சிறப்புபூசைகள் செய்து நேர்த்திக்கடன்செலுத்துகின்றனர். அருட்பா: பாய்க்காடு கின்ற வொரு பச்சைமுகில் |
https://www.youtube.com/watch?v=E8YIhHh78EI
https://www.youtube.com/watch?v=_q4SnkZJkdM
வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரதமணித் திருநாடு!
வணக்கம் சுப்பு
Vanakkam Subbu