276 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் - 019 - திருநின்றியூர் அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்

4 views
Skip to first unread message

Vanakkam Subbu

unread,
Sep 21, 2023, 3:59:55 AM9/21/23
to thatha patty

அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்
திருநின்றியூர், நாகப்பட்டினம் மாவட்டம்

  

image.png

 

சுவாமி : மகாலட்சுமீசர், லக்ஷ்மிபுரீஸ்வரர், மகாலட்சுமி நாதர்.

அம்பாள் : லோகநாயகி.

மூர்த்தி : செல்வப் பிள்ளையார், சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி.

தீர்த்தம் : நீலதீர்த்தம் (மகாலக்ஷ்மி தீர்த்தம் எனவும் அழைக்கப் பெறும்).

தலவிருட்சம் : விளாமரம்.

தலச்சிறப்பு : தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டுக் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள  இத்தலம் 19 ஆவது சிவத்தலமாகும்.  மூவர் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் திருநின்றியூர்  லக்ஷ்மிபுரீசுவரர் திருக்கோவிலும் ஒன்று.

இத்தலம் 3 நிலைகளைக் கொண்ட இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது.  கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் விசாலமான முற்றவெளி உள்ளது.   கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தியும், கொடிமரத்து விநாயகரும் உள்ளது.  

வெளிப்  பிராகாரத்தில் செல்வப் பிள்ளையார் சந்நிதி அமைந்துள்ளது.  அடுத்து பரசுராமர் வழிபட்ட  சிவலிங்கம், வள்ளி, தெய்வானையுடன் வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் சுப்பிரமணியர், நால்வர், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி அடுத்து பைரவர்,  சந்திரன் ஒரே சந்நிதியில் உள்ளனர்.  துவார விநாயகர், தண்டபாணி, துவார பாலகர்களை வழிபட்டு,  உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி, வலது புறம் அம்பாள் சந்நிதி உள்ளது.


இக்கோவிலைச் சுற்றி மூன்று குளங்கள் இருப்பது விசேஷம். இத்தலத்துத் தீர்த்தத்தை "நீலமலர்  பொய்கை” என்று சம்பந்தர் தனது பதிகத்தில் பாடியுள்ளார்.  முன்னொரு காலத்தில் இத்தலம் கோச்செங்கணான் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்றாக விளங்கியது.  நூறு ஆண்டுகளுக்கு முன்  நகரத்தார் திருப்பணி செய்யும் போது இப்போதுள்ள அமைப்பில் கோவிலை மாற்றிக் கட்டியதாக  கூறப்பெறுகிறது.  தீப்பந்தம் திரி நின்ற ஊர் ஆனதால் இத்தலம் திரி நின்ற ஊர் என்ற பெயர் பெற்று  தற்போது மருவி திருநின்றியூர் என்று அழைக்கப் பெறுகிறது.

விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷ்மி இக்கோவிலில் சிவபெருமானை வழிபட்டதால், மூலவர் மஹாலக்ஷ்மீஸ்வரர் அல்லது லட்சுமிபுரீஸ்வரர் என்று அழைக்கப்பெறுகிறார். லக்ஷ்மி இங்கு வந்ததும் இந்த இடத்தில் சில காலம் தங்கியிருந்தாள்.  லட்சுமியின் மற்றொரு பெயர் "திரு" அல்லது "ஸ்ரீ", எனவே அந்த இடம் திரு-நிந்திர-ஊர் (லட்சுமி தங்கியிருந்த இடம்) என்று அழைக்கப் பெறுகிறது.

அந்த இடத்தின் பெயரைப் பற்றி இன்னொரு கதையும் உண்டு. 
திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ இராஜராஜ தேவர், 
சோழ மன்னன், சிவனை வழிபடுவதற்காக தினமும் சிதம்பரம் செல்வது வழக்கம். ஒருமுறை, அவர் கடந்து செல்லும் போது அனைத்து விளக்குகளும் அணைந்து போனதை அவர் கவனித்தார், பின்னர் அவர் அந்த இடத்தைக் கடந்ததும் தானாகவே மீண்டும் எரிந்தது.  வித்தியாசமாக, இது ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் செய்யப் பெற்றது. விசாரித்தபோது, ஒரு மேய்ப்பன் அவனிடம் ஒரு பசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தினமும் தன் பாலை ஊற்றுவதாகக் கூறினார். அந்த இடத்தைக் கடக்கும்போது விளக்குகள் அணைந்த நேரத்துடன் இந்த நேரம் துல்லியமாக ஒத்துப் போகிறது என்பதை மன்னன் உணர்ந்தான். அரசன் அந்த இடத்தை கோடரியால் தோண்டிய போது, இரத்தம் கசிய ஆரம்பித்தது, அவர்கள் அந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டார்கள், அதன் தலையில் காயம் இருந்தது (இது இன்றும் தெரியும் என்று கூறப்பெறுகிறது). இதனால் மனம் வருந்திய மன்னன் மன்னிப்பு வேண்டி இங்கு சிவனுக்கு ஆலயம் எழுப்பினான். அவர் அந்த இடத்தைக் கடந்து செல்லும்போது விளக்குகளின் திரிகள் (தமிழில் நிந்திரா) ஒளிர்வதை நிறுத்தியதால் இந்த இடத்திற்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்பெறுகிறது (இத்தலத்தின் சமஸ்கிருத பெயர் வர்த்தி-நிர்வபாணபுரம், அதாவது அதே விஷயம்). [குறிப்பு: புராணம் அதன் சொந்தச் சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், திரி-நிந்திர-ஊரின் இந்த சொற்பிறப்பியல் சற்று தொலைவில் உள்ளது! சமஸ்கிருதப் பெயர் பிற்கால இடைச்செருகலாக இருக்கலாம்.]

அனுஷம் நட்சத்திரத்தில்
 பிறந்தவர்கள் இந்தக் கோவிலில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகக் கருதப் பெறுகிறது சுவாரஸ்யமாக, சிவபெருமானை வழிபட பக்தர்கள் மாதுளை விதைகளை வழங்குகிறார்கள். 

அவரது தந்தை ஜமதக்னியின் அறிவுறுத்தலின் பேரில், பரசுராமர் தனது தாயார் ரேணுகாவின் தலையை வெட்டினார். பின்னர் அவர் மன்னிப்புக்காகச் சிவனை வழிபட்டார். (பழுவூர் மற்றும் முழையூர் உட்பட அவர் வழிபட்டதாகக் கூறப் பெறும் பல்வேறு கோவில்கள் உள்ளன). ஜமதக்னியும் தன் அவசர முடிவை உணர்ந்து, இங்குள்ள சிவனை வேண்டிக் கொண்டார். இறைவன் தந்தை மற்றும் மகன் இருவரையும் மன்னித்தார். இங்குள்ள சிவன் ஜமதக்னீஸ்வரர் (ஜமதக்னியால் நிறுவப்பட்ட லிங்கம்) என்றும் வணங்கப்பெறுகிறார். பரசுராமரால் நிறுவப்பட்ட மற்றொரு லிங்கமும் உள்ளது.

கோச்செங்க சோழனால் கட்டப்பட்ட 78 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும் , மேலும் இது ஒரு சோழர் கோவில் என்று கட்டிடக்கலையின் பெரும்பகுதி குறிப்பிடுகிறது ஒரு வித்தியாசமான நவக்கிரகம் அமைப்பில், சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்கிறார்கள்,


தல வரலாறு : பரசுராமர் தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவரின் ஆணைப்படி தனது தாயார் ரேணுகாவைக் கொன்றார்.  பின் தனது தந்தையிடம் அன்னையை உயிர்ப்பிக்கும் படி வரம் வேண்டி  தாயை உயிர்ப்பித்தார்.  தாயைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக இத்தல இறைவனை வழிபட்டு  தோஷம் நீங்கப் பெற்றார்.  ஜமதக்னி முனிவரும் தான் செய்த செயலுக்காக வருந்தி இத்தல  இறைவனை வழிபட்டார். பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராம லிங்கம் என்ற  திருநாமத்துடனும் ஜமதக்னி முனிவர் வழிபட்ட சிவன் ஜமதக்னீஸ்வரர் என்ற திரு நாமத்துடனும்  காட்சியளிக்கிறார்கள்.  அருகில் மகாவிஷ்ணுவின் சந்நிதியும் உள்ளது.     

இந்திரன், அகத்தியர், பரசுராமர், ஐராவதம், பசு,  சோழ மன்னன் அனைவரும் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றவர்கள் ஆவர்.

 இத்தலத்தில் மூலவர்  சுயம்பு லிங்கமாக உயர்ந்த பாணத்துடன் அருள்பாலிக்கிறார்.

 

இத்தலம் மூவர் தேவாரப் பாடலும் பெற்ற சிறப்புடையதாகும் இத்தலத்திற்கு அப்பர் பாடிய பதிகம் 1, திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் 1, சுந்தரர் பாடிய பதிகங்கள் 2 என 4 பதிகங்கள் உள்ளன. இவை தவிர மற்ற தலப் பதிகங்களிலும், பொது பதிகங்களிலும் இத்தலம் பற்றி குறிப்பிடப்  பெற்றுள்ளது. சுந்தரரின் இரண்டு பதிகங்களில் ஒன்றில் முதல் 7 பாடல்களே நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. 8, 9, 10 பாடல்கள் சிதைந்து போய் விட்டன.

இப்பதிகத்தின் முதல் பாடலில் சிலந்திக்கு அருள் செய்து மறுபிறப்பில் கோச்செங்கட் சோழனாக பிறக்க அருள் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

2-ஆவது பாடலில் 4900 பதிகங்கள் பாடிய திருநாவுக்கரசருக்கும், சண்டேசுர நாயனாருக்கும், கண்ணப்ப நாயனாருக்கும் அருள் செய்ததை குறிப்பிடுகிறார்.

3-ஆவது பாடலில் இத்தலத்தின் புராணத்தைக் குறிப்பிடுகிறார். பரசுராமர் தனக்குக் காட்சி கொடுத்தருளிய இறைவனுக்கு 300 வேதியர் சூழ, 340 வேலி நிலத்தைக் கொடுத்து திருநின்றியூர் என்று பெயரிட்டு பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவருக்குத் தன் திருவடியை அளித்த இறைவன் என்று குறிப்பிடுகிறார்.

4ஆவது பாடலில் பசு ஒன்று தன் மடியாகிய கலசத்திலிருந்து பாலைச் சொரிந்து வழிபட்டு இறைவன் திருவடியை அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

5-ஆவது பாடலில் இத்தலத்திலுள்ள இறைவனை இந்திரன் வழிபட அவனுக்கு வான நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை வழங்கியதையும், அகத்தியருக்கு பொதிய மலையில் வீற்றிருக்க அருள் புரிந்ததையும் குறிப்பிடுகிறார்.

7-ஆவது பாடலில் துர்வாசர் சாபத்தால் காட்டானையாகி திரிந்த தேவலோக யானை ஐராவதம் இறைவனை வழிபட அதற்கு முன்னை வடிவத்தையும் விண்ணுலகம் அடையும் பேற்றையும் வழங்கியதைக் குறிப்பிடுகிறா 

 

நடைதிறப்பு : காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை. 4.00 மணி முதல் – இரவு 7.30 மணி வரை.

திருவிழாக்கள் : ஆனித் திருமஞ்சனம், சிவராத்திரி, திருக்கார்த்திகை.

அருகிலுள்ள நகரம் : நாகப்பட்டினம் மாவட்டம்.

கோவில் முகவரி : அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில்,

குறுமாணக்குடி, திருநின்றியூர் & அஞ்சல் – 609 118 மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம்.


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! 

வாழிய பாரதமணித் திருநாடு!   

வணக்கம் சுப்பு

 Vanakkam Subbu

 zGgbcCHwTas05D3TEGRzfeJitXMuFdleP8uz97cCm3eLcDguXidhEufGaerGn9hH.gif

Reply all
Reply to author
Forward
0 new messages