https://www.youtube.com/watch?v=KuCorRPTq9w Class 1 Part 4
இரண்டாம் வகுப்பின் பதிவுகள் இங்கே:
இம்முறை ஒரு மணி நேரம் பதிவான நிலையில்,
ஹேண்டிகேமின் நினைவகம் நிரம்பிவிட்டது. அதனால் தொடர்ந்து பதிவு செய்ய
முடியவில்லை. இப்போது ஹேண்டிகேமை முற்றாக ஃபார்மாட் செய்துவிட்டேன்.
அடுத்த வகுப்பிலிருந்து முழுப் பதிவுகளும் கிடைக்கும் ஆனால், பங்குபெறும்
ஆர்வலர்கள், வாரம் ஒருமுறைதான் செய்வதனால், இரண்டு மணி நேரத்துக்கு பதிலாக
மூன்று மணிநேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். எட்டு
மணிநேரம் என்றாலும் ஒதுக்கத் தயார் என்று சொல்லியிருக்கிறேன்.
சுவையை அனுபவித்துவிட்டால், கம்பனால் என்ன செய்ய
முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டு. கலந்து கொள்ள
முடியாதவர்களுக்காகத்தான் இந்தப் பதிவுகள். முதல் வகுப்பின் பதிவுக்குக்
கிடைத்திருக்கும் பார்வைகள் திகைப்பை ஏற்படுத்துகின்றன. எண்ணிக்கை
ஏறியவண்ணம் இருக்கிறது. வகுப்பில் கலந்து கொள்பவர்கள் அனைவரும்
கம்பராமாயணம் முழுத் தொகுதியும் வாங்குவதற்குச் சென்ற வாரம்
முடிவெடுத்திருக்கிறார்கள்.
வரவேற்பு, நான் எதிர்பாராத அளவுக்கு இருக்கிறது. ஏதோ ன்னால் இயன்றது. முளைக்கும் நிலத்தில் விதையைத் தூவிக் கொண்டிருக்கிறேன்.
யாராலெல்லாம் முடியுமோ அவர்களெல்லாம், அவரவர் வலைப்பூக்களில் இந்த சுட்டிகளுக்குத் தொடுப்பு தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
(சொக்கன், வகுப்புக்கு வருபவர்களுக்கு இந்தக் கடிதத்தை அனுப்பி உதவவும்.)
--
அன்புடன்,
ஹரிகி.
நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.