Fwd: ஹரியின் நூல்கள் வெளியீடு

17 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Feb 2, 2016, 9:48:45 PM2/2/16
to santhavasantham, kambaraamayanam, தமிழ் மன்றம், vallamai, Madhura Bharati, Veeraraghavan P., Prashanth Sancruth, Vignesh Harikrishnan, Sankar Venkatraman, Balaswaminathan .K, Madhavan Aravamuthan, Padmavathy Harikrishnan, Ramanan Isaikkavi
நண்பர்களுக்கு,

பாஞ்சாலி சபத உரை வெளிவந்துவிட்டது.  இதுகுறித்து ரமணன் அனுப்பியிருக்கும் கடிதத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

---------- Forwarded message ----------
From: tavenkateswaran <tavenka...@gmail.com>
Date: 2016-02-02 21:50 GMT+05:30
Subject: ஹரியின் நூல்கள் வெளியீடு
To: IsaiKKaviRamanan <isaikkav...@googlegroups.com>


வணக்கம் நண்பர்களே!

ஊத்தைச் சடலத்தை, உட்கார்ந் தெழுந்திருந்தால்
வேர்த்திரைத்து வீழுகின்ற வெற்றுடலைப் - பார்த்து
ஹரிகிருஷ்ணன் என்றே அழைக்குநிலை கண்டால்
சிரிக்கத்தான் தோன்றும் சிறிது!

என்று வேதாந்தமாகச் சுய எள்ளல் செய்துகொள்ளும் என் ஆருயிர் நண்பன் ஹரிகிருஷ்ணன்.

இதோ இப்போது நடந்தது போலவே இருக்கிறது....

ஏரிக்கரையோரமாக நெடுந்தொலைவு நடந்து வந்து, ஒரு வயலுக்கு அருகில் குடியிருந்த என்னை வந்து சந்திப்பான். “வாடா புலவா!” என்று அவனை அழைப்பேன். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போதே “அனுமன் அந்தாதி” “கெளமார சதகம்” என்றெல்லாம் எழுதித் தள்ளி விட்டான்.

யாப்பு அவனை இறுக்கவில்லை. குழந்தை தன் பாட்டுக்குத் தவழ்ந்தும் துள்ளியும் விளையாடும் கூடமாகவே அவனுக்கு இலக்கணம் இருந்தது. பாரதியைப் போல அவனுக்கு மரபு ஆளுமையும், தாகூரைப் போல ஒரு சங்கீத விடுதலையும் அவனுக்குப் பிறவியிலேயே வாய்த்துவிட்டது.

எனக்கு இலக்கணம் சொல்லித்தரப் பாடாய்ப் படுவான்! அவன் முயற்சியை இன்றுவரை அவன் கைவிடவில்லை. நானோ தேறவே இல்லை.

அவன் மாறவே இல்லை. நான் திருந்தவே இல்லை.

நாங்கள் பள்ளியிலும், கல்லூரியிலும், நங்கை நல்லூரிலும் கழித்த பொழுதுகள் பொன்னானவை. அதிர்ந்து பேசத் தெரியாதவன். பொய்மை என்பது அவன் ரசாயனத்தி்லேயே கிடையாது. ரொம்பப் படிப்பான். எனக்கு மூச்சுத் திணறும்.

நாகநந்தியிடம் அவன் கற்றது போல் வேறு யாரும் கற்கவில்லை. இன்று வாழும் தமிழறிஞர்களில் என் நண்பனும் ஒருவன் என்பதில் எனக்கு மிகவும் கர்வமுண்டு.

காசு பண்ணவோ. காசு கேட்கவோ சற்றும் தெரியாத என் ஹரிக்கு உரிய மரியாதையை நாமல்லவோ தரவேண்டும்? இதோ அதற்கொரு பொன்னான வாய்ப்பு.

அவனுடைய அற்புதமான இரண்டு நூல்களைக் கிழக்கு பதிப்பகம் வெளிக் கொணர்கிறார்கள்:

பாஞ்சாலி சபதத்திற்கு உரை
அனுமன், வார்ப்பும் வனப்பும் (மறுபதிப்பு)
இரண்டு நூல்களும் சேர்ந்து ரூ 725.

பிப்ரவரி 13 ஆம் தேதி, குருசந்திரா திருமண மாளிகையில் (டாக்டர் அம்பேத்கர் கலைக்கல்லூரி எதிரில், மஹாகவி பாரதி நகர், வியாசர்பாடி, சென்னை) மாலை 6,00 மணிக்கு வாருங்கள்.

அப்படியே,

பிப்ரவரி 14 ஆம் தேதி ARKAY Convention Centre (atop SHAHS, Luz Corner, Mylapore, Chennai) மாலை 5.30க்கெல்லாம் வந்து விடுங்கள்.

ஹரியின் நூல்களை வெளியிட்டு மகிழ்வோம். அங்கேயே நூல்களை வாங்கினால் விலையில் கணிசமான தள்ளுபடியும் உண்டு!!

14 ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு. எம். முரளி அவர்கள், ஹரிக்கு “நல்லோர் விருது” வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.

என் இனிய நண்பனை, அற்புதக் கவிஞனை, தமிழ் அறிஞனை, மற்றவர் நலமன்றி வேறேதும் நாடாத நல்லவனை வாழ்த்துவோம் வாருங்கள்!

அன்புடன்,
ரமணன்




2016-02-03 8:11 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-02-02 21:50 GMT+05:30 tavenkateswaran <tavenka...@gmail.com>:

ஹரியின் நூல்களை வெளியிட்டு மகிழ்வோம். அங்கேயே நூல்களை வாங்கினால் விலையில் கணிசமான தள்ளுபடியும் உண்டு!!

14 ஆம் தேதி ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் திரு. எம். முரளி அவர்கள், ஹரிக்கு “நல்லோர் விருது” வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்


எனதில்லை உனதென்றே அர்ப்பணித்தேன் - இனி
உனதருள் உன்செயல் உன்கடனே

என்று வீரராகவனின் வரிகளைக் கடன்வாங்கிச் சமர்ப்பிக்கிறேன்.

பாஞ்சாலி சபதம் வந்துவிட்டதா?  இந்தக் கடிதத்தில் இப்போதுதான் பார்க்கிறேன்.  பதினைந்து வருட உழைப்பு.  கனிந்துவிட்டது.  சொற்பொருள், யாப்பிலக்கணக் குறிப்பு, வியாச பாரதத்தில் எந்தப் பகுதியைப் பாடலாக்கியிருக்கிறான் என்று ஒவ்வொரு பாடலுக்கும் அடியில் வியாசபாரதத்தில் சம இட மேற்கோள் (கும்பகோணம் பதிப்பு, சில இடங்களில் கிஸாரி மோகன் கங்கூலி மொழிபெயர்ப்பையும் சேர்த்து), சொல்லப்பட்டுள்ள பாத்திரங்கள்--வாலிகன், சித்திரசேனன், புருமித்திரன் போன்றவர்கள்--யார் எவர் என்ற விளக்கம் எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறேன்.  இந்த முயற்சியில் துணைநின்ற ஒவ்வொருவருக்கும் நன்றி.

என் நண்பனுக்கு நன்றி சொல்லும் வழக்கமில்லை.  இரண்டுதுளி ஆனந்தக் கண்ணீரை மட்டும் தருகிறேன்.  நன்றி ரமணா.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
anuman vaarppum vanappum.jpg
Panjali sapatham.jpg

என். சொக்கன்

unread,
Feb 2, 2016, 11:30:53 PM2/2/16
to வல்லமை, santhav...@googlegroups.com, kambara...@googlegroups.com, tamil...@googlegroups.com, madhura...@gmail.com, peev...@hotmail.com, prashb...@gmail.com, vignesh.ha...@gmail.com, sankar...@gmail.com, balaswam...@hotmail.com, amadh...@yahoo.com, ph_kr...@yahoo.co.in, tavenka...@gmail.com
வாழ்த்துகள் அண்ணா!

பாஞ்சாலி தன்சபதம், பார்த்தன் கொடியிருக்கும்
ஆஞ்சனே யன்வனப்பு அத்தனையும் வாஞ்சையொடு
காகிதத்தில் கொட்டிக் கவினழகாய்த் தந்தீரே,
பாகினிமைச் சொல்லால் பதித்து

Thirumulanathan D

unread,
Feb 4, 2016, 12:10:47 PM2/4/16
to kambaraamayanam
//ஊத்தைச் சடலத்தை, உட்கார்ந் தெழுந்திருந்தால்

வேர்த்திரைத்து வீழுகின்ற வெற்றுடலைப் - பார்த்து
ஹரிகிருஷ்ணன் என்றே அழைக்குநிலை கண்டால்

சிரிக்கத்தான் தோன்றும் சிறிது!//

என்ன சார் இது? இவ்வளவு சிறிய வயதில் பட்டினத்தடிகள் போலப் பாடல் எழுதுகிறீரே? இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பலகோடி சாதனைகள் புரியவேண்டியவர் இப்படியெல்லாம் பாடல்கள் எழுதலாமா?

பைந்தமிழ்க் கம்பனின் பாக்களுக்கோர் நல்லுரையை
வந்தனையோ டாக்கினார் வை.மு.கோ - அந்த‌
உரைவல்லார் தம்வரிசை ஓங்கிடவே வந்த‌
ஹரிகிருஷ்ணன் வாழ்கபல் லாண்டு.

இளம் உரையாசிரியரை வாழ்த்த எனக்கு வயதிருக்கிறதல்லவா?

--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Feb 4, 2016, 9:34:55 PM2/4/16
to Thirumulanathan D, kambaraamayanam, Ramanan Isaikkavi

2016-02-04 22:40 GMT+05:30 Thirumulanathan D <thirumu...@gmail.com>:
//ஊத்தைச் சடலத்தை, உட்கார்ந் தெழுந்திருந்தால்
வேர்த்திரைத்து வீழுகின்ற வெற்றுடலைப் - பார்த்து
ஹரிகிருஷ்ணன் என்றே அழைக்குநிலை கண்டால்

சிரிக்கத்தான் தோன்றும் சிறிது!//

என்ன சார் இது? இவ்வளவு சிறிய வயதில் பட்டினத்தடிகள் போலப் பாடல் எழுதுகிறீரே? இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பலகோடி சாதனைகள் புரியவேண்டியவர் இப்படியெல்லாம் பாடல்கள் எழுதலாமா?

அடடா திருமூலா!  அதெல்லாம் இந்தச் சின்னவயசுல எழுதினது இல்லப்பா!  எனக்கு ஒருகாலத்துல இந்த... பதினேழு பதினெட்டு வயசு... இந்த மாதிரியான வயசு இருந்தப்ப எழுதினது.  ம்க்கும்.  நான் எழுதினதை என்னைவிட ரமணன்தான் அதிகம் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறார்.  

அந்தக் கிழட்டு வயசுல இந்த சித்தர் பாடல்கள் படிச்சிட்டிருந்தேன்.  அழுகணிச் சித்தர் பாட்டுல 

ஊத்தைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை 
மாற்றிப்பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் 
ஊத்தைச் சடலம் விட்டே - என் கண்ணம்மா 
உன் பாதம் சேரேனோ?"

அப்படின்னு வரும்.  அதைப் பத்தி ரொம்ப யோசிப்பேன்.  இப்பவும்கூட இந்தப் பகுதி மனசுக்குள்ள சுழன்றுகிட்டே இருக்கும்.  இப்பல்லாம்னா--அதான் நமக்கு வயசு ரிவர்ஸ் க்ரோத்தானே--பாரதிக்கு முன்னால இவரு கண்ணம்மா சொல்லிட்டாரு.. இன்னும் யாரெல்லாம் சொல்லியிருக்காங்கன்னு யோசிச்சிட்டிருப்பேன்.  அந்தக் காலத்துல அழுகணிச் சித்தர் வேஷம் போட்டப்ப எழுதினது அது.

பைந்தமிழ்க் கம்பனின் பாக்களுக்கோர் நல்லுரையை
வந்தனையோ டாக்கினார் வை.மு.கோ - அந்த‌
உரைவல்லார் தம்வரிசை ஓங்கிடவே வந்த‌
ஹரிகிருஷ்ணன் வாழ்கபல் லாண்டு.
 

இளம் உரையாசிரியரை வாழ்த்த எனக்கு வயதிருக்கிறதல்லவா?

பாட்டு நல்லாருக்கு.  டேங்க்ஸ்.  அதான் வயதிருக்கா இல்லையா பேச்ச எடுத்தாலே எனக்கு புர்ர்ருன்னு வரும்னு தெரியுந்தானே.  கிகிகி...


ரமணா,

நல்லா ஞாபகப்படுத்தினப்பா.  இந்தத் திருமூலன் நம்ம கம்பராமியாண கோஷ்டி.  26 வயசு.  நாலுவயசுலேந்து அவதானம் பண்ணத் தொடங்கி இப்ப பதினாறு அவதானம் பண்றார்.  உம்புண்ணியத்துல எனக்கு அவதானி வாயால வாழ்த்து.  

வயசிருக்காமாமுல்ல!

Jataayu

unread,
Feb 5, 2016, 12:06:47 AM2/5/16
to Hari Krishnan, Thirumulanathan D, kambaraamayanam, Ramanan Isaikkavi
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஹரிகி. 

திருமூலன், உங்கள் வெண்பாவில்  கடைசி அடியில் "ஹரிக்ருஷ்ணன்" என்று இருந்தால் தான் தளைதட்டாமல் வெண்பா இலக்கணம் பொருந்திவரும் என்று நினைக்கிறேன். 



--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Thirumulanathan D

unread,
Feb 5, 2016, 12:21:04 AM2/5/16
to Jataayu, Hari Krishnan, kambaraamayanam, Ramanan Isaikkavi

இல்லை ஜடாயு, ஹரிகிருஷ்ணன் என்றிருந்தாலும் தளைதட்டாது.

"வந்த ஹரிகிருஷ்ணன் வாழ்கபல் லாண்டு"

வந்த:                       நேர்-நேர், தேமா
ஹரிகிருஷ்ணன்: நிரை-நிரை-நேர், கருவிளங்காய்
வாழ்கபல்:              நேர்-நிரை, கூவிளம்

மாமுன் நிரையும் காய்முன் நேரும் வெண்டளைகளே. "ஹரிக்ருஷ்ணன்" என்று மாற்றுவது நிரை-நிரை-நேர் என்பதை நிரை-நேர்-நேர் (புளிமாங்காய்) என மாற்றும். தளைகளில் வேறுபாடு எழாது.

ஹரிகிருஷ்ணன் சார்,

//எனக்கு அவதானி வாயால வாழ்த்து//
எத்தனையோ பெரியமனிதர்களால் வாழ்த்தப்பட்டவர் நீங்கள். உங்கள் மாணவனின் வாயால் வாழ்த்தப்பெறுவதா பெரிது? போகட்டும். :-)

Hari Krishnan

unread,
Feb 5, 2016, 12:31:53 AM2/5/16
to Jataayu, Thirumulanathan D, kambaraamayanam, Ramanan Isaikkavi
2016-02-05 10:36 GMT+05:30 Jataayu <jata...@gmail.com>:
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஹரிகி. 

நன்றி ஜடாயு. 

திருமூலன், உங்கள் வெண்பாவில்  கடைசி அடியில் "ஹரிக்ருஷ்ணன்" என்று இருந்தால் தான் தளைதட்டாமல் வெண்பா இலக்கணம் பொருந்திவரும் என்று நினைக்கிறேன். 


இரண்டுமே சரி.  ஹரிக்-ருஷ்-ணன் நிரைநேர்நேர் புளிமாங்காய்; ஹரி-கிருஷ்-ணன் நிரைநிரைநேர் கருவிளங்காய்.

Jataayu

unread,
Feb 5, 2016, 4:28:31 AM2/5/16
to Hari Krishnan, Thirumulanathan D, kambaraamayanam, Ramanan Isaikkavi
ஓ சரி, வெண்பாப் புலிகளுக்கு முன்  மியாவிட்ட இச்சிறு பூசையைப் பொறுத்தருள்க :) 

Sankar P

unread,
Feb 5, 2016, 4:39:10 AM2/5/16
to Jataayu, Hari Krishnan, Thirumulanathan D, kambaraamayanam, Ramanan Isaikkavi
http://www.avalokitam.com/ உதவக் கூடும்

5 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 2:58-ல், Jataayu
<jata...@gmail.com> எழுதியது:
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "kambaraamayanam" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to kambaraamayan...@googlegroups.com.
> To post to this group, send email to kambara...@googlegroups.com.
> Visit this group at https://groups.google.com/group/kambaraamayanam.
> For more options, visit https://groups.google.com/d/optout.



--
Sankar P
http://psankar.blogspot.com
Reply all
Reply to author
Forward
0 new messages