கைத்துறுதுறுப்பு உசுப்புகிறது. நேரமின்மை பொருட்டு … ஒரே ஒரு குறிப்பு மட்டும் இப்போது.
‘வன்னம்’ vs. ‘வர்ணம்’ பற்றிய உரையாடலை ரசித்தேன்.
சம்ஸ்க்ருத/செங்கிருத மொழி இலக்கணப்படி, ஒரு சொல்லில் ‘ரகர’மும் ‘னகர’மும் அடுத்தடுத்து வந்தால் … அதாவது ஒரே அசையில் ‘ரகர'த்தை அடுத்து ‘னகரம்' வந்தாலோ அல்லது முற்பட்ட அசையில் “ர்” வந்து அதையடுத்த அசையில் ‘னகரம்’ வந்தாலோ அந்த ‘னகரம்’ வளைநா-ஒலியான (retroflex sound) 'ணகர’மாகத்தான் இருக்கும்.
அதனால்தான் … கிருஷ்ணன், கர்ணன், துரோணன், பர்ணசாலை போன்ற சொற்களைப் பார்க்கிறோம். இவற்றில் உள்ள “ண்” தமிழில் “ன்” என்று மாறும்போது அந்த ‘ரகரமும்’ ‘னகரம்’ ஆகிவிடுகிறது: கன்னன், பன்னசாலை … என. ‘கிருஷ்ணன்’ என்ற சொல்லைத் தமிழாக்கும்போது அந்த “ஷ்” குறுக்கிடுகிறது. முதலில் அதை “ட்” என்று ஆக்குவதால் நமக்குக் கிடைப்பது: கிருட்டினன்
இதெல்லாம் macro இல்லாத காலத்தில் நம் தமிழ்மூளை எவ்வளவு நன்றாக/ஒழுங்காகச் செயலாற்றியிருக்கிறது என்பதுக்குச் சான்று!
சரி, போய் என் கேட்பைத் தொடருகிறேன்.
[கம்பராமாயண அமர்வு 134-இன் பதிவுகளை இனிமேல்தான் கேட்கவேண்டும். அப்போது வரும் என் வேண்டாத கேள்விகள் … நுங்கள் ஹரியண்ணாவை நோக்கி! ;-) ;-) ;-) ]
பகடி நிற்க.
நும் தொண்டு தொடர என் அன்பும் ஆசியும்.
ராஜம்