Re: ஹைதராபாத் கம்பர் விழா அழைப்பு

2 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Jan 30, 2016, 6:22:09 AM1/30/16
to santhavasantham, vallamai, isaikkav...@googlegroups.com, kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, Veeraraghavan P., Badri Seshadri, Haran Prasanna

சென்னையில் 13, 14 ஆகிய இரு தினங்களிலும் பாஞ்சாலி சபத உரை (பதிப்பகத்தார் வைத்திருக்கும் பெயரை இதுவரையில் அறியேன்.  உரை மட்டுமே இல்லாமல் பல அம்சங்களைத் தழுவியிருக்கும் இந்நூலுக்கான பெயரைச் சூட்டும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்துவிட்டேன்.) வெளியீடும், அனுமன்:வார்ப்பும் வனப்பும் புத்தகத்தின் மறுவெளியீட்டு நிகழ்வும் நடைபெறுகின்றன.  இரண்டு நிகழ்ச்சிகளும் என் இனிய நண்பன் இசைக்கவி ரமணனுடைய ஏற்பாடு.  (தற்செயலாக இது எங்கள் நட்பின் ஐம்பதாவது வருடம்.  1966ம் ஆண்டு ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, தென் கிளையில் தொடங்கிய நட்பு).  முதல் நாள் நிகழ்ச்சி வியாசர்பாடியில் அவனுடய சொற்பொழிவின் போதும், அடுத்த நாள் நிகழ்ச்சி சென்னை மைலாப்பூரில் அவனுடைய தந்தை--நானும் அவரை அப்பா என்றுதான் அழைத்துக் கொண்டிருந்தேன்--அமரர் அனந்தராம சேஷன் அவர்களுடைய நினைவாக நடைபெறும் சேஷன் சம்மான் நிகழ்ச்சியில் நடைபெறுகிறது. (on February 14, 2016 at ARKAY Convention Centre, atop SHAHS, Luz, Mylapore, Chennai.) இது குறித்து ரமணன் அனுப்பியிருக்கும் மடலைக் கீழே தந்திருக்கிறேன்.  புத்தகம் வெளிவருவதற்கு முன்னாலேயே பலர் முன்பதிவு செய்து, முன்தொகைச் செலுத்தியிருப்பதாக ரமணன் இன்று காலை சொன்னான்.  இதற்கு மேல் எங்கள் நட்பைப் பற்றிப் பேச எனக்குக் கூசுகிறது.  

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு


ஆகவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.  கீழே இருப்பது ரமணனுடைய அழைப்புக் கடிதம்.  



Vanakkam.

As you know, we have instituted an award "Seshan Sanman" honouring the memory of our father Sri T.V. Anantaramaseshan, who was called TVA by his peers.

TVA taught Economics in Loyola College, Chennai from 1954 to 1963, wrote hundreds of Editorials and managed the Education and Books Review page for The Hindu from 1963 to 1986, and wrote for News Today and Malai Chudar subsequently.

A spontaneous poet who could converse fluently in Sanskrit, he composed several hymns on various deities. An authority on temple vaastu, he played a pivotal role in the Kumbabhishekam of several temples in India and abroad.

Though English was his forte, he wrote three brilliant books in Tamil -- explanation of Dasa Maha Vidya, commentaries on Subrahmanya Sahasranama and Siva Sahasranama.

A renowned astrologer and a mantra upasaka, he provided counsel to scores of people who thronged him.

After a brief illness and a major surgery, this great man who never got his due but never even noticed it, merged into his favourite deity Kanyakumari on November 22, 2010 when he was 87.

Since last year, we have decided to convene a modest function to honour a couple of people who have made a rich contribution in their chosen fields.

Last year, we honoured Villu Paattu exponent Sri Subbu Arumugham and Sri Umanath who writes exclusively for children.

This year, we intend presenting the Seshan Sanman award to the legendary scholar Professor M. Vaithilingam and Sri T.R. Jawahar of News Today.

Marabin Maindan Sri Muthaiah, who had a lively association with our father has been so gracious to come and deliver a special address.

We will also be releasing "Hanuman - Vaarppum Vanappum" and Commentary on Paanchaali Sabatam,- two brilliant books(published by Kizakku Pathippagam) written by my friend for 50 years Sri Harikrishnan, who is a remarkable scholar in Tamil and English.

This time, the function will be held on Appa's 93rd birth anniversary, on February 14, 2016 at ARKAY Convention Centre, atop SHAHS, Luz, Mylapore, Chennai.

I join my mother Savithri, brothers - in - law Sri A. Subramaniam (Singapore) Sri S. Thyagarajan, sisters Lalitha Mony (Canada) Malathi and Bhuvana in cordially welcoming you for this function.

I will surely remind you!

Love,
Ramanan



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Jan 30, 2016, 6:46:38 AM1/30/16
to kambaraamayanam


கவிமாமணி இளையவன் ஹைதராபாதில் பல ஆண்டுகளாக 'நிறை இலக்கிய வட்டம்' நடத்தி வருகிறார்.  இளையவன் கையால் தொடப்பட்டு வளரும் இளம் கவிஞர்கள், பேச்சாளர்கள் மிகப்பலர்.  இப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில் நானும் இருக்கிறேன்.  என்னுடைய 17வது வயதில் பாரதி கலைக்கழகத்தில் நான் கவிதை படிக்கக் காரணமாக இருந்தவர் கவிமாமணி இளையவன்.  

இம்முறை வரும் ஃபிப்ரவரி 7ம் தேதி ஐந்தாவது ஆண்டு கம்பர் விழாவை நிறை அமைப்பு நடத்துகிறது.  முழுநாள் விழா.  அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்.

நாளின் இறுதி நிகழ்ச்சியாக பட்டிமண்டபமொன்று நடைபெறுகிறது.  'கம்ப காவிய மேன்மைக்குப் பெரிதும் காரணம் வால்மீகியின் கொடையே, வழிநூலின் நடையே என்று தலைப்பு.  இந்தப் பட்டிமண்டபத்துக்கு நான் நடுவராக இருக்கிறேன்.  ஹைதராபாதில் இருப்பவர்கள், கலந்துகொள்ள முடிந்தவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Inline images 1

Inline images 2

Inline images 3


Inline images 5
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

rajam

unread,
Jan 30, 2016, 1:54:29 PM1/30/16
to Hari Krishnan, vallamai, isaikkav...@googlegroups.com, kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, Veeraraghavan P., Badri Seshadri, Haran Prasanna
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நூல்களின் வெளியீட்டு விழா சிறப்பாக நடைந்தேற என் மனமார்ந்த வாழ்த்து! இந்த நூல்கள் விரைவிலேயே இனப்பெருக்கம் செய்து ‘குட்டிபோடவும்’ என் ஆசி!

அன்புடன்,
ராஜம்


--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply all
Reply to author
Forward
0 new messages