Re: அசோகவனம்

5 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Nov 10, 2015, 10:16:47 PM11/10/15
to santhavasantham, Thirumulanathan D, kambaraamayanam

2015-11-11 7:03 GMT+05:30 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>:
நண்பர்களே! அசோகவனத்தில் சீதை எவ்வளவு காலம் இருந்தாள் என்பதற்கான குறிப்பு எங்கேனும் உள்ளதா?

நேரடியான குறிப்பு இல்லாவிட்டாலும் மறைமுகக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன.  முற்றோதல் சமயத்தில் காலக்குறிப்புகளைத் தொகுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  முற்றோதல் குழுவைச் சேர்ந்த சோடசஅவதானி திருமூலநாதன் இதைச் செய்திருக்கிறார்.  சூரிய உதய, அத்தமன விவரங்களைக் கம்பன் சொல்வதையெல்லாம் கிட்கிந்தா காண்டம் தொடங்கி, கவனமாகக் குறித்துச் செய்திருப்பது இது.

  • கிட்கிந்தா காண்டத்தின் கால அளவு 10 மாதம் (இதில் நான்கு மாதம் கார்காலப் படலம்)
  • யுத்தகாண்டத்தில் போர்முடியும் வரையிலான கால அளவு 19 நாட்கள். கிட்கிந்தையிலிருந்து படைநகர்வு நிகழ்ந்தபின் வீடணன் அடைக்கலம் முதல்நாளில் நிகழ்கிறது. அதன்பின் வருணனை நோக்கி இராமபிரானின் நோன்பு 7 நாட்கள். சேதுபந்தனம் 3 நாட்கள். கடல்தாண்டியபின் சுவேலமலையில் ஒருநாள். அதன்பிறகு போர் 7 நாட்கள். 1+7+3+1+7 என மொத்தம் 19 நாட்கள்
  • இடையில் சுந்தர காண்டம் ஒருநாள்.

இதை வைத்துக் கொண்டு கணக்கிட்டால்:

  • சுந்தர காண்டத்தில் பிராட்டி 'இங்கே இன்னும் ஒரு திங்கள் இருப்பேன்' என்று சொல்கிறாள்.
  • இராவணன் பிராட்டிக்குக் கொடுத்த அவகாசம் ஒரு வருடம்
  • ஆகவே, அனுமன் பிராட்டியைக் கண்ட சமயத்தில் பதினோராவது மாதம் தொடங்கியிருக்கிறது
  • சீதையைக் கண்ட அதே தினத்தின் மாலையில் இராமனிடத்தில் அனுமன் செய்தியைச் சொல்கிறான்
  • மேலே சொல்லப்பட்டுள்ள 19 நாள் கணக்கோடு வானர சேனை கிட்கிந்தையிலிருந்து புறப்பட்டு கடலை வந்தடைய எடுத்துக் கொண்ட 12 நாட்களைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.  எனவே 19+12=31 நாட்கள் (பிராட்டி சொன்ன ஒரு திங்கள் கெடு இராவண வதத்தோடு முடிவடைகிறது)
எனவே, அசோகவனத்தில் பிராட்டி இருந்தது பன்னிரண்டு மாதங்கள்.  இந்தச் செய்தி முன்னரேயே அனுமானிக்கப்பட்ட ஒன்றென்றாலும், கம்பனுடைய அகச்சான்றுகளை வைத்துக் கொண்டு கணக்கிட்டுள்ள அவதானி திருமூலநாதன் பாராட்டுக்குரியவர்.  26 வயதாகிறது.  பெங்களூருவில் Indian Institute of Scienceல் பி எச்டி செய்துகொண்டிருக்கிறார்.  சந்தவசந்தக் கவிஞர்கள் இந்த இளைஞரை ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் இந்த மடலில் கொடுக்கப்பட்டுள்ள திருமூலநாதனுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் சேர்த்துத் தங்கள் மடலை அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் முற்றோதல் மலர் மின்பதிப்பாக வெளிவருகிறது.  இந்த விவரங்களடங்கிய கட்டுரையை மலரில் திருமூலநாதன் எழுதியிருக்கிறார். மலர் வெளிவந்ததும் அனுப்புகிறோம்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 10, 2015, 11:50:17 PM11/10/15
to santhavasantham, Thirumulanathan D, kambaraamayanam
வாழ்த்துக்கள் திரு திருமூலநாதன். தங்களைப்போன்ற இளைஞரின் தமிழ் இலக்கிய ஆர்வம் நம்பிக்கையளிக்கிறது. மகிழ்ச்சி! நெறிப்படுத்தி ஆர்வத்தை மேலும் வளர்த்துக்கொள்ள உதவுகிற நண்பர் திரு ஹரிகி அவர்களுக்கு நன்றி.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2015-11-11 8:46 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் இந்த மடலில் கொடுக்கப்பட்டுள்ள திருமூலநாதனுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் சேர்த்துத் தங்கள் மடலை அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

விரைவில் முற்றோதல் மலர் மின்பதிப்பாக வெளிவருகிறது.  இந்த விவரங்களடங்கிய கட்டுரையை மலரில் திருமூலநாதன் எழுதியிருக்கிறார். மலர் வெளிவந்ததும் அனுப்புகிறோம்.

நன்றி.

Hari Krishnan

unread,
Nov 11, 2015, 12:09:33 AM11/11/15
to santhavasantham, Thirumulanathan D, kambaraamayanam
2015-11-11 8:46 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:
  • கிட்கிந்தா காண்டத்தின் கால அளவு 10 மாதம் (இதில் நான்கு மாதம் கார்காலப் படலம்)
  • யுத்தகாண்டத்தில் போர்முடியும் வரையிலான கால அளவு 19 நாட்கள். கிட்கிந்தையிலிருந்து படைநகர்வு நிகழ்ந்தபின் வீடணன் அடைக்கலம் முதல்நாளில் நிகழ்கிறது. அதன்பின் வருணனை நோக்கி இராமபிரானின் நோன்பு 7 நாட்கள். சேதுபந்தனம் 3 நாட்கள். கடல்தாண்டியபின் சுவேலமலையில் ஒருநாள். அதன்பிறகு போர் 7 நாட்கள். 1+7+3+1+7 என மொத்தம் 19 நாட்கள்
  • இடையில் சுந்தர காண்டம் ஒருநாள்.

இந்தக் கணக்கில் ஒருநாள் குறைத்துக் கொள்ளவேண்டும்.  முதலில் கவனிக்கவில்லை.

யுத்த காண்டத்தில் இராவண வதத்துக்குப் பிறகு சொல்லப்படும் யுத்த நாளெல்லை இது:

'இடை உவாவினில் சுவேலம் வந்து இறுத்து, எயில் இலங்கைப்

புடை அவாவுறச் சேனையை வளைப்பு உறப் போக்கி,

படை அவாவுறும் அரக்கர் தம் குலம் முற்றும் படுத்து,

கடை உவாவினில் இராவணன் தன்னையும் சுட்டு.  125

அட்டமியன்று சுவேலத்தில் வந்து இறங்கி, அன்றே 'எயில் இலங்கைப் புடை அவாவுறச் சேனையைப் போக்கி'.  எனவே, சுவேலமலையில் ஒருநாள் இல்லை.  சுவேல மலையில் வந்து இறங்கியதும், போர் தொடங்கியதும் ஒரே நாளில்.  (காலை வந்து இறங்கி, இரவு போர்தொடங்கி என்பது வைமுகோ உரை).  எனவே இது 18 நாட்கள்.

இந்தப் பதினெட்டோடு வானரப்படை கடலை அடைய எடுத்துக் கொண்டு 12 நாட்களைக் கூட்டினால் 18+12=30 நாள்.

Hari Krishnan

unread,
Nov 11, 2015, 9:29:56 AM11/11/15
to kambaraamayanam

---------- Forwarded message ----------
From: Lalitha & Suryanarayanan <lall...@gmail.com>
Date: 2015-11-11 17:28 GMT+05:30
Subject: Re: அசோகவனம்
To: santhav...@googlegroups.com
Cc: Thirumulanathan D <thirumu...@gmail.com>, kambaraamayanam <kambara...@googlegroups.com>

ஒன்பதொ டொன்றொடாறாம் அவதான மும்செய்யும்
           உயர்மூலர் நாமம் கொண்டார்
நன்றென ராமகாதை நடந்துசெல் நாள்களெல்லாம் 
           நமக்கென ஆய்வு செய்தே
இன்னருந் தவத்திருந்(து) இலங்கையாம் நகரில்அன்னை 
           இருந்தநாள் கணக்கைச் சொன்னார்
அன்பர்கள் நெஞ்சமந்த இருபத்தா றகவையாம்
            இளைஞரை வாழ்த்தும் நன்றே.

சிவ.சூரியநாராயணன்.
          
2015-11-11 8:46 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2015-11-11 7:03 GMT+05:30 Kavingar Jawaharlal <kavingar....@gmail.com>:
நண்பர்களே! அசோகவனத்தில் சீதை எவ்வளவு காலம் இருந்தாள் என்பதற்கான குறிப்பு எங்கேனும் உள்ளதா?

நேரடியான குறிப்பு இல்லாவிட்டாலும் மறைமுகக் குறிப்புகள் நிறைய இருக்கின்றன.  முற்றோதல் சமயத்தில் காலக்குறிப்புகளைத் தொகுக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.  முற்றோதல் குழுவைச் சேர்ந்த சோடசஅவதானி திருமூலநாதன் இதைச் செய்திருக்கிறார்.  சூரிய உதய, அத்தமன விவரங்களைக் கம்பன் சொல்வதையெல்லாம் கிட்கிந்தா காண்டம் தொடங்கி, 

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Nov 11, 2015, 9:30:16 AM11/11/15
to kambaraamayanam, Thirumulanathan D
---------- Forwarded message ----------
From: Subbaier Ramasami <elan...@gmail.com>
Date: 2015-11-11 19:50 GMT+05:30
Subject: Re: அசோகவனம்
To: சந்தவசந்தம் <santhav...@googlegroups.com>

காலக் கணக்கை அகச்சான்று
      காட்டித் தொகுத்துத் தந்துள்ள
மூல நாதன்   செயல் நன்று
      முயற்சி மேலும் தொடர்ந்திடுக
இலந்தை

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to santhavasanth...@googlegroups.com.
To post to this group, send email to santhav...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages