///'பகுதி என்று உளது, யாதினும் பழையது, பயந்தவிகுதியால் வந்த விளைவு, மற்று அதற்குமேல் நின்ற
புகுதி,///
இப்போதுதான் இந்தப் பழைய கணக்குமுறையை இலக்கியத்தில் பார்க்கிறேன்! முற்றோதல் குழுவுக்கு மிக்க நன்றி!
பகுதி, விகுதி, புகுதி … அருமையான கருத்துப் பகிர்வு.
சற்றே நினைத்துப்பார்க்கவும்.
பகுதி (numerator)
விகுதி (denominator)
புகுதி (remainder)
கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்குகளில் “சொச்சம்” என்று நாம் கற்றதை இங்கே "புகுதி (remainder)” என்று பார்க்கிறோம்!! ஏன் அது" புகுதி?" அந்தச் சொச்சம் இல்லாமல் அடுத்த கணக்கு நடக்காது. எனவே அடுத்த கணக்கில் புகும் அது “புகுதி.” என்ன அழகான வழக்காறு! அதை இழந்துவிட்டோமே.
அடுத்து ...
ப்ரக்ருதி, புருடன் — dynamic, inert; சிவன் சக்தி frozen state … அப்புறம்? [திரு ஜடாயு சொல்லி முடிக்குமுன் குறுக்கீடு. :-( ]
இங்கே IT ஆட்கள் இருப்பதால் துணிந்து சொல்கிறேன் … இந்த ‘புருடன், ப்ரக்ருதி’ கருதுகோளை (concept-ஐ) Object Oriented Language ஆட்கள் கடன்வாங்கியிருப்பது புரியும்.
For example, Toyota is a brand name. Corolla, Camry, Rav4 … என்பதெல்லாம் ‘instances’ or ‘tokens’ of the brand name Toyota. Numerous Corollas, Cmary-s, Rav4-s may be generated, and each on of them would be a விக்ருதி.
அதேபோல்தான் … புருடன் is a brand name, ப்ரக்ருதி is an instance of that brand. விக்ருதி is the further division within a ப்ரக்ருதி. அதுதான் “விகாரப்பாடு."
இதையே பண்டை இலக்கணங்களில் தொகை, வகை, விரி எனத் தொடங்கி … தொகை, தொகைவகை, தொகைவிரி, வகை, வகைவிரி, விரி என்று சொல்லி விசாரிப்பார்கள்.
இப்படிப் புரிந்துகொள்வது எனக்கு உதவுகிறது.
நன்றியுடன்,
ராஜம்