இந்த வார பாரதி & சிலப்பதிகார அமர்வுகள் - அக்டோபர் 31

2 views
Skip to first unread message

Mahesh Jayaraman

unread,
Oct 28, 2015, 3:59:43 AM10/28/15
to kambaraamayanam

இந்த வாரம் முதல் சிலப்பதிகார முற்றோதலை தொடங்குகின்றோம்.வகுப்பு விவரங்கள் கீழே.


பாரதி பயிலரங்கம்:
அமர்வு#15
நாள்: அக்டோபர் 31 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி முதல் 5.30 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்


சிலப்பதிகார முற்றோதல்: 
அமர்வு#1
நாள்: அக்டோபர் 31 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 5.30 மணி முதல் 7.00 மணிவரை
இடம்: சொக்கனின் அலுவலகம்

rajam

unread,
Oct 29, 2015, 5:12:50 PM10/29/15
to Mahesh Jayaraman, kambaraamayanam
தகவலுக்கு மிக்க நன்றி, மகேஷ்.

அன்புநண்பர்களே, வணக்கம். 

சிலப்பதிகார முற்றோதலைத் தொடங்கவிருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி.

முந்தைய கம்பராமாயண முற்றோதலில் என் மூக்கை நுழைத்தது-போல இங்கே செய்யமாட்டேன் என்று உறுதிகூறுகிறேன். ;-)

++++++++++

கடந்த பல நாட்களாக மனதில் மிகவும் நெருடல் — 'யான் என்ன தவறு செய்தேன்' என்று நினைத்து நினைத்துச் சோர்வடைந்தேன். இறுதியில் எனக்குத் தோன்றிய எண்ணம்: ‘சரி, இது அவர்கள்வீட்டுக் கலியாணம். இதை அவர்கள் எப்படிச் செய்தால் என்ன? எனக்கென்ன பாடு?’

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. தியேட்டருக்குப் போய்ப் படம் பார்த்தது எப்போ என்பதுவும் மறந்துபோச்சு. என்னிடம் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை. எப்போவாவது YouTube-இல் சில துணுக்குகள் பார்ப்பதோடு சரி. 

உங்களில் பலரும் திரைப்படங்களை விமரிசிப்பது இல்லையா? அதே-போலவே நானும் உங்கள் காணொலிகளை விமரிசித்தேன் — குறைகளை மட்டுமா சுட்டினேன்? உங்கள் செயல்பாடுகளின் கடுமையையும் திறமையையும் எவ்வளவு உணர்ந்து பாராட்டினேன்; அதெல்லாம் உங்களுக்குப் புலப்படவில்லை என்பது தெளிவாகிறது. வருத்தமே.

கம்பனிலேயே பாருங்களேன் — சீதையைத் தவிர அழகிய பெண் வேறு யாருமில்லை என்ற நோக்கில் அமைக்கப்பட்ட காவியத்தில் அரக்கியரை எவ்வளவு கோரமாக வடித்திருக்கிறார்! அட, அரக்கியர் பிறந்த ஊர்/நாடு/நிலம் அப்படி. அதுக்காக? இது ஒரு மக்கள் காவியமா?

இந்த மாதிரி … மரபுவழியே நம் மூளையில் திணிக்கப்பட்ட 'ஒருசார் பார்வை’ கருத்துகள் இன்றும் நம் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதை அறிந்து வருந்துகிறேன்.

++++++++++ 

சிலப்பதிகார மூலச்செய்யுளை எனக்குக் கிடைத்த பல பிரதிகளின் அடிப்படையாக நோக்கி, என் சொல்லாராய்ச்சிக்காக என்று பிரித்தெடுத்து ஒரு வடிவமைத்தேன். அதை இங்கே காணலாம்: http://letsgrammar.org/classical.html

அதோடு, இந்தப் பக்கத்தில் (http://letsgrammar.org/classical.html) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற பகுதியையும் பார்க்கவும்: http://letsgrammar.org/didactic.html

குறிப்பாக ஆசாரக்கோவை என்ற பகுதியைப் பார்க்கவும்: http://letsgrammar.org/AcArakkOvai_tamil.pdf

++++++++++  

இங்கே அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப்பேரவை விழாக்களில் பங்கேற்கும் விருந்தினராக ஹரியை அழைக்கவேண்டும் என்று சில ஆண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன். செல்வன் திருமூலநாதனைத் திருக்குறள் அவதானியாக அழைக்க விருப்பம். அதற்கேற்ற வகையில் செயலாளருக்கு என் கருத்து சென்றுகொண்டேயிருக்கும். 

பேரவை விழாவின் செயலாளர் குழுவுக்குப் பரிந்துரைக்க நல்லதொரு காணொலி எனக்கு வேண்டும். 

Oh yeah, definitely! காமிராமுன் யாரும் மூக்கை நோண்டக்கூடாது, காதைக் குடையக்கூடாது, கொட்டாவி விடக்கூடாது, கைக்குட்டை மறைக்காமல் தும்மக்கூடாது, காமிராமுன் நடந்து காணலை மறைக்கக்கூடாது, செல்ஃபோன் பயன்படுத்தக்கூடாது, மொச்சுத்தீனி தின்னக்கூடாது (தேத்தண்ணி/காப்பி தவிர), … இன்னும் இன்ன பிற உலகளாவிய நுணுக்கங்கள் தேவை.

உங்களுக்காக ஒரு சேதி …

கடந்த ஃபெட்னா (FeTNA; Federation of Tamil Associations of North America) 2015 மாநாட்டில் … மிக மிக அருமையான அழகான கவியரங்கம் நிகழ்ந்தது. ஆனால் … ஒரு நெருடல் … தலைவர் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டு … பிற பங்காளிகளிகளின் நேரத்தையும் குறைத்ததோடன்றி … கவிதையரங்குக்குப் பின்வரவிருந்த சிறுவர் நிகழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். ஆனாலும், கவிதையரங்குக்குப்பின் அவருக்கும் பிற கவிஞர்களுக்கும் சிறப்புச் செய்ய வந்த விழா அமைப்பாளரிடம் … “ம***ர்” என்று சொல்லி மேடையை விட்டு நீங்கிவிட்டதாகக் கேள்வி.

இதன் பாடத்தை அவரவர்கள் மொழிபெயர்த்துக்கொள்ளவும்.

++++++++++ 

அன்புடன்,
ராஜம்



--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.

Hari Krishnan

unread,
Oct 29, 2015, 10:13:16 PM10/29/15
to rajam, Mahesh Jayaraman, kambaraamayanam
2015-10-30 2:42 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
உங்களில் பலரும் திரைப்படங்களை விமரிசிப்பது இல்லையா? அதே-போலவே நானும் உங்கள் காணொலிகளை விமரிசித்தேன் — குறைகளை மட்டுமா சுட்டினேன்? உங்கள் செயல்பாடுகளின் கடுமையையும் திறமையையும் எவ்வளவு உணர்ந்து பாராட்டினேன்; அதெல்லாம் உங்களுக்குப் புலப்படவில்லை என்பது தெளிவாகிறது. வருத்தமே.


அன்புள்ள அக்காவுக்கு,

இந்தச் செய்தி எனக்குத்தான் என்பதை அறிவேன்.  திரைப்படத்தை விமரிசிப்பதும் இந்தக் காணொலியை விமரிசிப்பதும் ஒன்றாகாது.  அது தொழில்முறையில், கண்டு களிப்பதற்காக, பொருட்செலவில், தொழில்முறை நடிகர்களை வைத்துக் கொண்டு, தொழில் முறை இயக்குநர், தொழில்முறை கேமராமேன் அனைவரும் ஒன்றாகச் செயல்பட்டு டிக்கெட் அடிப்படையில் செய்யப்படும் காட்சி.

இது நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து உரையாடிக் கொண்டு படிக்கின்ற நிகழ்ச்சி.  இதில் எந்தக் கட்டுப்பாட்டுக்கும் இடமில்லை.  இது வகுப்பறையுமில்லை.  நாங்கள் படிப்பதைப் பதிவுசெய்து வைத்தால் பயன்படுத்துபவர் பயன்படுத்திக் கொள்ளட்டும் என்ற நோக்கத்தோடு செய்யப்படும் ஒரு பதிவு.  இதில் குறைகள் இருக்கத்தான் செய்யும்.  ஒவ்வொரு முறையும் புதிதாக வருபவர்களுக்கு விதிமுறைகள் கொடுத்து 'இதற்கெல்லாம் கட்டுப்பட்டால்தான் இதில் பங்கேற்க முடியும்' என்று யாரையும் வற்புறுத்த முடியாது.  வற்புறுத்தினால், யாரும் வரப்போவதில்லை.  நாங்கள் சரியான முறையில் வளர்க்கப்படாத இந்தியர்கள்.  எங்களுக்கு இவ்வளவு பண்பாடுதான் தெரியும்.  இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்.  இங்கே நாற்காலி ஓசையிடும்.  எங்களால் அவற்றுக்குத் தேங்காயெண்ணெய் போடச் சொல்லி யாரையும் சொல்லவும் முடியாது, எங்களால் அதைச் செய்யவும் முடியாது.  வெளியில் ஓசை கேட்ககத்தான் செய்யும்.  நேரம் கழித்தும் சிலர் வரத்தான் செய்வார்கள்.  அவர்கள் அமர்வதற்காக நாற்காலிகளை இழுத்துக் கொண்டு வரத்தான் வேண்டியிருக்கும்.  உள்ளே நுழையும்போதே கேமராவுக்கு முன்னால் குனிந்து வா, ஜடாயுவைப் போல நடந்து கொள் என்று யாரையும் சொல்ல முடியாது.  என் பொறுப்பில் நடைபெறும்வரை யாருடைய போக்கிலும் குறுக்கிட மாட்டேன்.  யாருக்கும் நடத்தை கற்றுக் கொடுக்க முனைய மாட்டேன்.  என் வளர்ப்பு அப்படி.  அறுபத்திரண்டு வருடம் இப்படிப் பண்பற்றவனாக வளர்ந்துவிட்டேன்.  இனிமேல் மாற்றிக் கொள்வது சாத்தியமில்லை.

எனவே இது திரைப்பட விமரிசனமில்லை என்பதைச் சுட்ட விரும்புகிறேன்.  எங்களைப் பாராட்டத்தான் வேண்டுமென்பதில்லை.  குறை சுட்டிக் காட்டுவதில் எந்தத் தவறுமில்லை.  குறை-நிறைகளைச் சுட்டும்போது சமமாக எடுத்துக் கொள்ள ஓரளவுக்குத் தெரிந்து கொண்டிருக்கிறோம்.  கூச்சப்படும் அளவுக்குப் பாராட்டிய சமயங்களில் கூச்சத்தால் பதில் சொல்லமுடியவில்லை.  பாராட்டுகளுக்கு எப்போதும் நன்றியுடையேம்.  ஆயினும் குறைகளைச் சுட்டும்போது பயன்படுத்தப்படும் சொற்கள் எனக்கு வலி ஏற்படுத்தாமல் இருக்கலாம்.  மற்றவர்கள் அனைவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.  உங்களுடைய சொற்களில் எத்தனை கடுமை தொனிக்கிறது என்பதை இங்கே ஒவ்வொரு முறையும் என்னிடம் சொல்கிறார்கள்.  யாருக்கும் வலிக்கத்தான் செய்யும்.  கடுமையான சொற்பிரயோகத்தைத் தவிர்த்தும் நல்லுரைகளைச் சொல்ல முடியும் என்றும் உங்களுக்குத் தெரியும்.  முற்றோதல் முடியும்போது புலவர் திரு ராமமூர்த்தி உங்களுடைய பெயரைச் சொல்லி நன்றி தெரிவித்திருக்கிறார்: https://www.youtube.com/watch?v=eq0ZfOIE5vs

உங்களுடைய பங்களிப்புக்கு என்றும் நன்றியுடையோம்.  ஆனால் அதற்காக எந்தக் கட்டுப்பாட்டையும் குழுவின்மேல் சுமத்தமுடியாது.  இது அவரவர் சுதந்திரம்.  இது தொழில்முறையில் நடத்தப்படும் டாக் ஷோவோ அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியோ அன்று.  இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும் உரையாடல், விவாதம் எல்லாம் பிறருக்குப் பயன்படும் என்ற நோக்கத்தில் பதியப்படுகிறது.  இந்தக் கட்டுப்பாடுகளை மேற்கொண்டுதான் ஆகவேண்டுமென்றால் அங்கே யாரும் கூடவே போவதில்லை.   இங்கே இந்த அமர்வுகள் இப்படித்தான் நடக்கும்.  குழுவின் சம்மதம் இருக்கும் வரை பதிவுகளும் இப்படித்தான் தொடரும்.  இதில் ஒரு மாற்றமுமில்லை. 

 
கம்பனிலேயே பாருங்களேன் — சீதையைத் தவிர அழகிய பெண் வேறு யாருமில்லை என்ற நோக்கில் அமைக்கப்பட்ட காவியத்தில் அரக்கியரை எவ்வளவு கோரமாக வடித்திருக்கிறார்! அட, அரக்கியர் பிறந்த ஊர்/நாடு/நிலம் அப்படி. அதுக்காக? இது ஒரு மக்கள் காவியமா?

இது உங்கள் பார்வையாக இருந்தால் சந்தோஷம்.  பாரடைஸ் லாஸ்டில் சாத்தான் எப்படிப் படைக்கப்பட்டுள்ளான்?  பைபிளில் சாத்தான் அழகனா?  கிங் லியரில், டெம்பஸ்டில் என்று எந்தப் படைப்பை எடுத்துக் கொண்டாலும் அதில் கோர சொரூபிகள் என்று ஒரு பிரிவினர் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சீதையைத் தவிர அழகிய பெண்ணே இல்லை என்பது தவறான பார்வை.  மன்னிக்கவும்.  தாரையின் அழகையும் கோசலையின் முதுமையழகையும் அவ்வளவு ஏன், கைகேயியின் கொடுக்கைப் போன்ற அழகையும், மண்டோதரி, தானியமாலி என்று பல அரக்கியர்களுடைய அழகையும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.  இராவணனே பேரழகன்.  இந்திரசித்தன் முருகனைப் போன்ற அழகன்.  இதில் தாடகை போன்ற சிலரை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த அரக்கியருமே அப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்வது ஏற்க முடியாத ஒன்று.  இவர்களையெல்லாம் கண்ணெடுத்தும் பார்க்க முடியவில்லை என்பது பார்வையின் பிழை.  கம்பனுடைய பிழையன்று.

இந்த மாதிரி … மரபுவழியே நம் மூளையில் திணிக்கப்பட்ட 'ஒருசார் பார்வை’ கருத்துகள் இன்றும் நம் இளைய தலைமுறையை வழிப்படுத்துவதை அறிந்து வருந்துகிறேன்.

இது யாருக்காகச் சொல்லப்படுவது என்பதை அறியேன்.  யார் யார் அழகர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கள், அழகற்றவர்களாக இருந்தும் அறிவு நிறைந்தவர்களாகப் படைக்கப்பட்டிருக்கிறார்கன் என்பதையெல்லாம் ஓரளவுக்கு நன்றாகவே அறிவோம்.  ஒருசார் பார்வை (நானோ?) இளைய தலைமுறையை (குழுவோ?) வழி நடத்துவது வருத்தத்தைத் தருகிறது என்றால், அதற்கு நான் எதுவும் செய்யமுடியாத நிலையில் இருப்பதற்கு வருந்துகிறேன்.  இது இப்படித்தான் தொடரும் என்பதைச் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

++++++++++ 

சிலப்பதிகார மூலச்செய்யுளை எனக்குக் கிடைத்த பல பிரதிகளின் அடிப்படையாக நோக்கி, என் சொல்லாராய்ச்சிக்காக என்று பிரித்தெடுத்து ஒரு வடிவமைத்தேன். அதை இங்கே காணலாம்: http://letsgrammar.org/classical.html

அதோடு, இந்தப் பக்கத்தில் (http://letsgrammar.org/classical.html) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற பகுதியையும் பார்க்கவும்: http://letsgrammar.org/didactic.html

குறிப்பாக ஆசாரக்கோவை என்ற பகுதியைப் பார்க்கவும்: http://letsgrammar.org/AcArakkOvai_tamil.pdf


இவை அனைத்துமே குழுவுக்கும் பிறருக்கும் பயனுள்ள விஷயங்கள்.  அவர்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்வார்கள்.

 
++++++++++  

இங்கே அமெரிக்காவில் நடக்கும் தமிழ்ப்பேரவை விழாக்களில் பங்கேற்கும் விருந்தினராக ஹரியை அழைக்கவேண்டும் என்று சில ஆண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன். செல்வன் திருமூலநாதனைத் திருக்குறள் அவதானியாக அழைக்க விருப்பம். அதற்கேற்ற வகையில் செயலாளருக்கு என் கருத்து சென்றுகொண்டேயிருக்கும்.


உங்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்டுள்ளேன்.  ஹரியை விட்டுவிடுங்கள்.  புகழோ வருவாயோ பெயரோ இல்லாமல் 62 ஆண்டுகள் வாழ்ந்தாகிவிட்டது.  இனிமேலும் இப்படி வாழ முடியும்.  வாழ்வதில் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.  திருமூலநாதனைப் போன்றவர்களை அழைக்கச் சொல்லுங்கள்.  அதுபோதும்.  இளைய தலைமுறை வளர்வதில்தான் என்னுடைய நாட்டமும் ஆர்வமும் இருக்கிறது.  என்னை என்னுடைய குளைகளோடு ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும்.  கொள்ளாதவர்களைப் பற்றி வருத்தமில்லை. 

மற்றபடி, பதிவுகள் தொடரும்.  நாற்காலிகள் ஒலியெழுப்பும்.  அவரவர் குறுக்கே நடக்கத்தான் செய்வார்கள்.  இடையில் ஏதாவது உண்ணத்தான் செய்வார்கள்.  இவை விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை.  விமரிசிக்கத்தான் செய்வேன் என்றால் சம்மதமே.

மிக்க நன்றியும் அன்பும்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Hari Krishnan

unread,
Oct 29, 2015, 10:27:24 PM10/29/15
to rajam, Mahesh Jayaraman, kambaraamayanam
2015-10-30 2:42 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
மிக மிக அருமையான அழகான கவியரங்கம் நிகழ்ந்தது. ஆனால் … ஒரு நெருடல் … தலைவர் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டு … பிற பங்காளிகளிகளின் நேரத்தையும் குறைத்ததோடன்றி … கவிதையரங்குக்குப் பின்வரவிருந்த சிறுவர் நிகழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். ஆனாலும், கவிதையரங்குக்குப்பின் அவருக்கும் பிற கவிஞர்களுக்கும் சிறப்புச் செய்ய வந்த விழா அமைப்பாளரிடம் … “ம***ர்” என்று சொல்லி மேடையை விட்டு நீங்கிவிட்டதாகக் கேள்வி.

இது உங்களுக்கு வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம்.  எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று.  1971ல் தொடங்கி நானும் எத்தனையோ கவியரங்கங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.  தலைமையில் அமர்பவர்கள் இப்படி அட்டகாசம் செய்வது பழகிப் போன ஒன்று.  அண்மையில் இசைக்கவி ரமணன் ஒரு பெரிய அரங்கில் 'பரதன்' என்ற தலைப்பில் கவிதை படித்தான்.  இரண்டு மணிநேர நிகழ்ச்சி.  நான்கு கவிஞர்கள் படிக்க வேண்டும்.  தலைமை ஏற்றவரே ஒன்றரை மணிநேரம் மேடையைத் தன்வசம் வைத்துக் கொண்டார்.  அதன் பிறகு, ஒவ்வொருவருக்கும் 15 நிமிஷம் ஒதுக்கப்பட்டிருந்ததைக் குறைத்து, 'எல்லோரும் ஐந்து நிமிஷங்களுக்குள் முடித்துவிட வேண்டும்' என்று மற்றவர்களுக்குச் சொல்லப்பட்ட போது ரமணன், 'என் கவிதை படிக்கப்பட்டதாகக் கருதப்படட்டும்' என்று சொல்லிவிட்டு இறங்கிவிட்டான்.  பிறகு வருத்தம் தெரிவித்து அவனைப் படிக்கச் சொன்னார்கள்.  ஆறு நிமிஷத்தில் முடித்தான். 

இப்படி எனக்கும் பல அனுபவங்கள் உண்டு.  சுயப்பிரபாவங்களை வளர்க்க விரும்பவில்லை.  இப்படி மிகுந்த பொருட்செலவில் நடக்கும் நிகழ்ச்சிகளிலேயே தரக்குறைவானவை நடக்கின்றன.  இங்கே மட்டுமில்லை.  வெளிநாடுகளிலும் அப்படித்தான் (நான் சொல்வது தமிழ் நிகழ்ச்சிகளை).  ஃபிரான்ஸ் கம்பன் கழகத்தில் மிகுந்த பொருட்செலவில் நடத்தப்பட்ட, தொழில்முறையில் பதிவு செய்யப்பட்ட இந்த இரண்டரை மணிநேரப் பதிவைப் பார்க்கவும்: https://www.youtube.com/watch?v=rWBfgs9rQgc&spfreload=10

ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை.  விட்டுவிட்டு வேலை செய்கிறது.  இவ்வளவு செய்தவர்களுக்கு இன்னொரு ஒலிபெருக்கியை வைக்க முடியவில்லையா என்று கேட்பது எளிது.  ஏதோ பிரச்சினை.  செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.  இதற்காக அவர்களுக்குப் பாடம் எடுப்பது தேவையற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து.

Jataayu

unread,
Oct 30, 2015, 2:15:57 AM10/30/15
to Mahesh Jayaraman, kambaraamayanam
நண்பர்களுக்கு, 

சனிக்கிழமை மாலை இந்திரா நகரில் ச முருகபூபதியின் தமிழ் நவீன நாடகம் இருக்கிறது (இணைப்பில் பார்க்கவும்) அதற்கும் போக வேண்டும் என்று விருப்பம்.  எனவே  இந்த வகுப்பை  2 - 5 மணி என்று  மாற்ற முடியுமா? 

இந்த வாரம் என்று இல்லாமல்  பொதுவாகவே இப்படி மாற்றி விடலாம்.  மதிய நேரத்தில்  அமர்வை வைத்தால் வந்து போகும்போது போக்குவரத்து  நெரிசலும் குறைவாக இருக்கும். மாலை நேரத்தில் நகரத்தில் நகரத்தில் நடக்கும்  மற்ற கலை நிகழ்ச்சிகளுக்கு அல்லது கோயில்களுக்கு செல்லவும் முடியும். யோசியுங்கள்.  நன்றி. 

அன்புடன்,
ஜடாயு



--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
For more options, visit https://groups.google.com/d/optout.
Bangalore Invi Tamil.jpg

Mahesh Jayaraman

unread,
Oct 30, 2015, 8:26:32 AM10/30/15
to Jataayu, kambaraamayanam
எனக்கு ok. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அனைவருக்கும் வசதிப்படும் என்றால் 2-5 வைத்துக்கொள்ளலாம்.

Hari Krishnan

unread,
Oct 30, 2015, 8:28:24 AM10/30/15
to Mahesh Jayaraman, Jataayu, kambaraamayanam

2015-10-30 17:56 GMT+05:30 Mahesh Jayaraman <mahesh.ja...@gmail.com>:
எனக்கு ok. மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அனைவருக்கும் வசதிப்படும் என்றால் 2-5 வைத்துக்கொள்ளலாம்.

என்னைப்பற்றி எல்லோரும் அறிந்ததுதான்.  எந்த நேரத்தைத் தீர்மானிக்கிறீர்கள் என்பதை, நிகழ்ச்சி நடக்கும் நாள் காலைக்குள் சொன்னால் போதுமானது.

rajam

unread,
Oct 30, 2015, 12:44:21 PM10/30/15
to Hari Krishnan, Mahesh Jayaraman, kambaraamayanam, rawmu...@gmail.com
ஒரு கருத்து, ஒரு வேண்டுகோள்.  பாடம் எடுக்கிறேன் என்று நினைத்தாலும் சரி, கருத்தைப் பகிர்ந்துகொள்கிறேன் என்று நினைத்தாலும் சரி.

நெல்லை-மதுரையில் வீடு/பள்ளி/கல்லூரி ஆகியவற்றின் வளர்ப்பும் அமெரிக்கத் தனிவாழ்வும் என்னை இப்படியாக உருவாக்கியிருக்கின்றன. எனவே நுங்கள் பார்வையும் என் பார்வையும் ஒன்றுவதற்கு வாய்ப்புக் குறைவு என்பதை அறிவேன். எனவே என் மனதில் கலக்கமில்லை.

கருத்து
-----------
பிற நாடுகளில் எப்படியோ தெரியாது. இங்கே அமெரிக்காவில் நான் பார்த்ததைப் பகிர்ந்துகொள்கிறேன்.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) ஒவ்வோராண்டும் ஒரு மாநிலத்தில் விழா நடத்தும். அப்போது மிகப்பெரிய அரங்கைப் பொதுநிகழ்ச்சிகளுக்காகவும் அதைச் சுற்றியிருக்கும் கட்டிடங்களைத் தனித்தனியே நடக்கும் கருத்தரங்குகளுக்காகவும் வாடகைக்கு எடுப்பார்கள். மொத்தத்தில் … அரங்கு கட்டிடங்களின் வாடகை, விருந்தோம்பல், இன்ன பிறவற்றுக்காகும் செலவை என்னால் கற்பனைசெய்தும் பார்க்கவியலாது.

அந்தப் பொது அரங்கில் நடக்கும் நிகழ்ச்சிகள் மணித்துளி பிசகாமல் நடந்தால்தான் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகப் பலவிடங்களிலிருந்தும் வந்த எல்லாருக்கும் உரிய நேரம் கிடைக்கும். நான் பார்த்த அளவில் தமிழகத்திலிருந்து வந்த கவியரங்கத் தலைவரும் வேறு சிலரும் தவிர வேறு யாரும் தங்களுக்கென்று வரையறுக்கப்பட்ட காலவரையறையை மீறவில்லை. மட்டுறுத்துநர் பக்கத்திலிருந்து நேரம் பற்றிய குறிப்புச்சீட்டு அடிக்கடிக் கொடுக்கப்பட்டது; தலவைரை ஒத்திசைக்க முடியவில்லை. பிறகு இன்னொருவர் கவிதையைப் படித்துக்கொண்டே … போனபோது … நீங்கள் ஃபிரான்சில் நடந்ததாகச் சொன்ன அதே-போல ஒலிபெருக்கியின் பெருக்கும் தன்மை குறைந்துகொண்டே, இல்லையில்லை குறைக்கப்பட்டுக்கொண்டே வந்தது. இறுதியில் அவர் தனக்குத்தானே பேசிக்கொண்டமாதிரி மேடையில் ஒரு நிழலாகத்தோன்றினார்!

ஒலிபெருக்கியின் பெருக்கத்தைக் குறைப்பதும் நிறுத்துவதும் இங்கே கையாளப்படும் உத்தி. கருவியில் பிரச்சினை இல்லை! மேடையின் பின்புறத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் நிகழ்ச்சிகளின் தேவைக்காகச் செய்வது. ஒன்றுக்கு மேற்பட்ட ஒலிபெருக்கிகளை வைத்துக்கொண்டுதான் நிகழ்ச்சிகளைத் தொடங்குவார்கள். புது ஒலிபெருக்கி வாங்கத் தேவையில்லை. 

சரி, கவியரங்கின் தேவையற்ற நீட்சியினால் யாருக்கு இழப்பும் வருத்தமும்? வேறொரு மாநிலத்திலிருந்து வந்திருந்த 10~15 சிறுவர்கள் (கடைக்குட்டிக்கு 5 வயதுக்குமேல் இருக்காது) தங்கள் சிலம்பாட்டத்தை மேடையேற்ற முடியாமல் போனது. பல மாதங்களாய் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அந்தக் குழந்தைகளுக்கும் இழப்பும் வருத்தமும். மறுநாளைக்கு அந்தக் குழந்தைகளுக்கு ஒரு சில கணங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன.

இங்கே, நம்மூர் போல மணிக்கணக்காக ஓர் இடத்தை நமதாக வைத்துக்கொள்ள முடியாது. மாலையில்/இரவில் ஒரு குறிப்பிட்ட மணியளவில் மின்சாரம் நிறுத்தப்படும், கட்டிடக் கதவுகள் அடைக்கப்படும்.

காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைக்கான உணவுகளை அந்தந்த வேளைகளில் சுடச்சுடப் பரிமாறுவதற்காகத் தன்னார்வலர்கள் காத்துக்கொண்டிருக்கும் கட்டிடத்திலும் இந்தக் கட்டுப்பாடே.

இன்னின்ன வரையறையை ஏற்று நடந்தாலன்றி இங்கே தமிழர் நிலைக்கமுடியாது. நம் தமிழ் மேடையேறாது. It’s as simple as that.

++++++++++

வேண்டுகோள்
——————————
நீங்கள் எல்லாரும் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் உங்களுக்குள் பேசிக்கொண்டாலும் சரி … எனக்குக் கவலையில்லை. என் குறிக்கோள் — இங்கே அமெரிக்காவில் தமிழைத் தொடர்வதால் அதை வாழவைப்பது.

அடுத்த ஆண்டு நியூஜெர்சி (New Jersey) என்ற ஊரில் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA) தன் 29-ஆம் தமிழ்விழாவைக் கொண்டாடும். 

[இந்த ஆண்டின் விவரங்களை இங்கே பார்க்கவும்: http://www.fetna2015.org/#tamilvizhaஇந்த ஆண்டின் விழா எங்கள் ஊரில் நடந்தபடியால் எனக்கு அணுக்கமான நட்பு இருந்தது. ஹரி + குழுவை அழைக்கும்படிப் பரிந்துரைத்தேன்.  வெற்றி கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டுக்காக மீண்டும் பரிந்துரை செய்வேன்.]

சிறுவர்களுக்கான திருக்குறள் தேனீப்போட்டி மிகவும் பெருமையானது. இந்த ஆண்டில் முதல் இரண்டு பரிசுகளைத் தட்டிச்சென்ற சிறுமியர் இருவரும் 8 வயதுக்கும் இளையவர். எனக்கு ஆனந்தக்கண்ணீர் அடங்கவேயில்லை. 

இங்கே வளர்ந்துவரும் இளையதலைமுறைக்குச் செல்வன் திருமூலநாதன் மிகப்பெரிய உந்துதல் தர முடியும். ஆகவே அவரை வரவழைக்க முயல்வேன்.

பிற மக்களுக்கு அவரைப் பற்றித் தெரியாததால் பரிந்துரை செய்ய விரும்பும் எனக்கு நீங்கள் எல்லாரும் உதவ வேண்டும்.

ஒரு நல்ல திருக்குறள் அவதானிப்புக் காட்சியைப் பதிவுசெய்து எனக்கு அனுப்பவும். இப்போது அவசரமில்லை, ஆனால் சனவரி 2016 தொடங்கி விழாவுக்கான வேலைகளை மிகவும் மும்முரமாகத் தொடங்கிவிடுவார்கள்.

கவிதைப்போட்டி, குறும்படப்போட்டி, புகைப்படப்போட்டி, … என்று பலவகை நிகழ்ச்சிகள்.

என் உள்ளக்கிடக்கையைச் சொல்லிவிட்டேன். 

அன்பும் ஆசியும்,
ராஜம்




On Oct 29, 2015, at 7:27 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:


2015-10-30 2:42 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:
மிக மிக அருமையான அழகான கவியரங்கம் நிகழ்ந்தது. ஆனால் … ஒரு நெருடல் … தலைவர் தனக்கென ஒதுக்கப்பட்ட நேரத்துக்கும் மிக அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டு … பிற பங்காளிகளிகளின் நேரத்தையும் குறைத்ததோடன்றி … கவிதையரங்குக்குப் பின்வரவிருந்த சிறுவர் நிகழ்ச்சியையும் இல்லாமல் செய்துவிட்டார். ஆனாலும், கவிதையரங்குக்குப்பின் அவருக்கும் பிற கவிஞர்களுக்கும் சிறப்புச் செய்ய வந்த விழா அமைப்பாளரிடம் … “ம***ர்” என்று சொல்லி மேடையை விட்டு நீங்கிவிட்டதாகக் கேள்வி.

இது உங்களுக்கு வேண்டுமானால் புதிய செய்தியாக இருக்கலாம்.  எங்களுக்கு இது பழகிப் போன ஒன்று.  

<deleted for space>


ஒலிபெருக்கி வேலை செய்யவில்லை.  விட்டுவிட்டு வேலை செய்கிறது.  இவ்வளவு செய்தவர்களுக்கு இன்னொரு ஒலிபெருக்கியை வைக்க முடியவில்லையா என்று கேட்பது எளிது.  ஏதோ பிரச்சினை.  செய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.  இதற்காக அவர்களுக்குப் பாடம் எடுப்பது தேவையற்றது என்பது என் தனிப்பட்ட கருத்து.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Mahesh Jayaraman

unread,
Oct 30, 2015, 7:54:24 PM10/30/15
to rajam, Hari Krishnan, kambaraamayanam, Ramamoorthy Ramachandran
ராஜம் அம்மா,

//ஒரு நல்ல திருக்குறள் அவதானிப்புக் காட்சியைப் பதிவுசெய்து எனக்கு அனுப்பவும்.//

கண்டிப்பாக செய்கிறோம். ஹரி அண்ணாவும் பலமுறை திருமூலநாதனை வைத்து ஒரு நிகழ்ச்சி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுவும் ஒரு தூண்டுதலாக அமையட்டும்.


- மஹேஷ் ஜெயராமன்


Mahesh Jayaraman

unread,
Oct 31, 2015, 12:32:35 AM10/31/15
to kambaraamayanam
இந்த வார வகுப்பு திட்டமிடப்பட்டது போல் 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும்.
Reply all
Reply to author
Forward
0 new messages