Begin forwarded message:Subject: Re: [தமிழ் மன்றம்] Re: பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்From: rajam <ra...@earthlink.net>Date: September 15, 2015 at 5:52:31 PM PDTCc: vallamai <vall...@googlegroups.com>, Madhura Bharati <madhura...@gmail.com>, Ramanan Isaikkavi <tavenka...@gmail.com>, S Ravi <s.r...@alicongroup.co.in>, crazy mohan <crazy...@gmail.com>, rugan arya <rugana...@gmail.com>, Naga Chokkanathan <ncho...@gmail.com>, Kannan S <music...@gmail.com>Reply-To: tamil...@googlegroups.comஹ்க்க்கும் க்கும் (அதாவது இருமல், செருமல் எல்லாம்) … முதல் பதிவைக் கேட்கத்தொடங்கியிருக்கிறேன் (அமர்வு 133:1/4).அதென்ன அவ்ளோ பெரிய பீடிகை?!!!உணர்வுள்ள பெண்ணாகப் பிறந்த ஒருத்தி சீதையின் அக்னிப்பிரவேசத்தை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டாள் என்றால் அவளை முதலில் பிடித்துத் தீயில்கூடத் தள்ளவேண்டாம்; சும்மா … சுடுசெங்கல்லைக் கையிலும் தலையிலும் ஏந்தி இராமர் கோயிலை 10 முறை வலம்வரச்செய்தாலே போதும்.அந்த ராமனுடைய திட்டுதலைப் பற்றி இந்தக் குழு எப்படி அலசப்போகிறது என்று பார்த்துக் கேட்க ஆவலுடையேன்.இன்றைக்கு ஓரிரண்டு பதிவாவது பார்த்துக்கேட்க முடியும் என்று நினைக்கிறேன்.பாவம், மகா பாவம் அந்தச் சீதை.இவண்,ராஜம்On Sep 13, 2015, at 12:16 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:அன்பர்களே,முற்றோதல் அதன் முடிவுக் கட்டத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. நேற்று (12.09.2015) அக்னி பிரவேச காட்சியைத் தொடங்கி, சீதை அக்னியை வலம் வரும் கட்டத்தில் நிறுத்தியிருக்கிறோம்.இந்தக் கட்டத்தைப் பற்றிய பல பேச்சுகள் பொய்யே என்பதைக் குழுவினரால் உணர முடிந்தது. நீங்களும் காணவேண்டும் என்பதற்காக இத்துடன் அனுப்பி வைக்கிறோம்.இன்னும் இரண்டு-மூன்று நாட்களில் (குழு இல்லாமல்) தனிப்பட்ட முறையில் ஹரி கிருஷ்ணன் என்ற விதத்தில் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பைத் தரமுடியும் என்று நம்புகிறேன். விநாயக சதுர்த்தி வரையில் பொறுத்திருக்கவும். செய்தியுடன் வருகிறேன்.
பகுதி 1
https://www.youtube.com/watch?v=RQLZdtr2QCU
பகுதி 2
https://www.youtube.com/watch?v=_FOWGEDrB5I
பகுதி 3
https://www.youtube.com/watch?v=K86iIAZvJV4
பகுதி 4
https://www.youtube.com/watch?v=thBoTiJ4mFk--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
For more options, visit https://groups.google.com/d/optout.
நீங்கள் உட்கார்ந்திருக்கும் அறையில் குளுகுளுப்பான் (air conditionar), விசிறி வகை (hand fan or electric fan) ஒன்றும் இருக்கக்கூடாது. அன்றொருநாள் ஒரு நண்பர் ‘ஏசி'யைப் போடுமாறு கேட்டது பதிவாகியிருக்கிறது! என் கண்ணிலிருந்து தப்பவில்லை!
--
You received this message because you are subscribed to the Google Groups "kambaraamayanam" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to kambaraamayan...@googlegroups.com.
To post to this group, send email to kambara...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/kambaraamayanam.
On Sep 15, 2015, at 6:43 PM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:
தேவைங்கறதனாலதான் அந்த பீடிகை.கல்லூரியில் சிலப்பதிகார கொலைக்களக் காதை நடத்தறப்ப எங்க ஆசிரியர் (இவர் நான் சொல்ற நாகநந்தி இல்ல, இன்னொருத்தர்)
பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண்
கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய
நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வரஅப்படின்னு படிக்கறப்ப (அவர் பர்க்லி சிகரெட் பிரியர்) ஓஹோ அந்தத் தெருவுல எல்லாரும் பீடி கையா இருப்பாங்களோன்னு உள்ள புகுந்தது நினைவுக்கு வருது. சுடுசெங்கல்லை இல்ல. சுத்த அக்கினியையே விரலிடுக்குல ஏந்தறாங்க இல்ல? அதான். :)
சும்மா … சுடுசெங்கல்லைக் கையிலும் தலையிலும் ஏந்தி இராமர் கோயிலை 10 முறை வலம்வரச்செய்தாலே போதும்.
அந்தம்மாவ எப்ப ராமர் தீயில் இறங்கச் சொன்னார்?
இராமர் கோயிலை வலம் வந்திருக்கணும்னா, இலக்குவன் சிதையடுக்கினதுக்கும் மொதல்ல இலங்கைல இராமர் கோயில் கட்டிட்டு அப்பறமா சிதையடுக்கியிருக்கணும். பாவமில்லியா இலக்குவன்?
2001லன்னு நினைக்கறேன். ஒங்க ஊர்ல முதல் கம்பன் விழா நடந்துச்சு. மணி (நம்ம மணிவண்ணன்தான்) என்னை அந்த விழாவுக்காக அக்னிப் பிரவேசத்தப் பத்தி ஒரு கட்டுரை எழுதச் சொன்னார். ரொம்ப நீளமா வருமேன்னு தயங்கினேன். எவ்வளவு நீளமானாலும் சரின்னு சொன்னார். கனலை எரித்த கற்பின் கனலின்னு அந்தக் கட்டுரை இணையத்துல பிரபலம். ஆனா பெரியவங்க பார்வை ஏழைங்க மேல விழாது போல இருக்கு. ம்? (ஜேகேன்னு சொல்வாங்க. ஜஸ்ட் கிடிங்.)
பாவம், மகா பாவம் அந்தச் சீதை.
நான் எப்ப இல்லன்னு சொன்னேன்? ஆம்பள பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கு. அதையும் கொஞ்சம் ஏறெடுத்துப் பாருங்கப்பான்னுதான் சொல்றேன். என் கருத்துகளை உங்கள் மேல் திணிக்க விரும்பவில்லை. I will show you the pointers, come to your own conclusions என்று தெளிவாகவே இரண்டு மூன்றுமுறை சொல்லியிருக்கிறேனே.இராமன் சீதை மேல எப்ப சந்தேகப்பட்டான்? (இந்த ஒரு காட்சில சில வார்த்தைகள் அப்படி இருக்கலாம். காட்டுல பொறந்த லவகுசர்களை பன்னெண்டு வருஷம் கழிச்சுப் பாக்கறப்ப, இவங்க என் பசங்கதான், எனக்கு நல்லா தெரியும்னு அவங்க கையப் பிடிச்சிட்டுப் போயி ஜனங்க முன்னால ஏன் சொல்லணும்? கற்புலதான் சந்தேகமிருக்கறதா சொல்லிக்கறீங்களே. இவங்க யாருன்னே எனக்குத் தெரியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே?இராமனும் துளியூண்டு பாவம்தான். இருந்தாலும் இந்த கட்டத்தில் பேசும் வார்த்தைகளின் சூடு (மூணு நாலே பாட்டுன்னாலும்) தாங்க முடியலன்னு சொல்லியிருக்கேனே..
சீதை மட்டுமில்ல. பொருள் சொல்ற இக்கட்டுல அகப்பட்டுகிட்ட நானுங்கூட பாவம்தான்.
--அன்புடன்,
ஹரிகி.நட்பும் சுற்றமும் நலமே என்பதைமட்டும் கேட்க வாணி அருள்கவே.God bless all of us. May we hear from everyone in our life that they are good and prosperous.--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tamilmanram...@googlegroups.com.
To post to this group, send email to tamil...@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/tamilmanram.
இது எனக்குப் புரியவில்லை. “தன்னாலே தன்குலத்துக்குப் பேர் கெட்டுப்போச்சே” “இஷ்வாகு குலத்துக்கும் பேர் கெட்டுப்போச்சு, ஜனகமகாராஜாவோட பேரும் கெட்டுப்போச்சு” … “இப்பொ பேர் கெட்டுப்போகலெ, இந்த மாசு துடைத்துவிட்டது” என்ற திருப்தி சீதைக்கு. இதை ஒரு சொற்பொருள் முரணாகத்தான் கம்பன் கொண்டுவந்து வைத்திருப்பதாக ஹரி சொன்னார்.
தன்னுடைய மாசெல்லாம், தன்னாலே ஏற்பட்ட களங்கமெல்லாம் தீர்ந்துவிட்டதாகச் சீதை நினைத்ததாகவும் விளக்கம் சொல்லப்பட்டது.
என் கேள்வி: சீதையினால் ஏற்பட்ட களங்கம்/மாசு என்ன? அது எப்படி யாரால் துடைக்கப்பட்டது?
++++++++++அமர்வு 133, பதிவு 2 முடிவில்.ஆமா, இந்த மனுசன் தான் இருந்த இடத்தை விட்டு அகலாமல் வீடணனை அனுப்பிச் சீதையைக் கூட்டிக்கொண்டுவா, அதுவும் … “சீரோடும்” என்று சொல்வானேன்?சரி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் — தேவியை மக்கள் நல்ல கோலத்தில் பார்க்க விரும்புவார்கள் என்றுதான் அப்படியே உருகி உருகி மனத்தில் ஏகப்பட்ட குழப்பதோடு புழுங்கிப்புழுங்கிக் கலங்கிச் சொன்னான் என்று. ஆனாலும் தேவியை அவள் இருந்த கோலத்தில் பார்த்தால்தானே மக்களுக்கு உண்மை புலப்படும்? பிறகு மக்களுக்கு ஒரு சந்தேகமும் வர வாய்ப்பில்லை. அவர்களுக்காக என்று அவளை மீண்டும் அவன் தண்டிக்கவேண்டியதில்லை. ஆனால் கதை இப்போது இருக்கும் வகையில் ஓடியிருக்காது, ராஜாராமனுக்காகவே கதை அமைந்திருக்க முடியாது!!
ஆனாலும் … அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்த நொடியிலேயே வீடணனுடன் தானும் ஓடிப்போய் அவளப் பார்த்துவிட்டுப் பிறகல்லவோ மக்கள் கண்ணில் அவளைக் காட்டவேண்டும்? ‘கண்ணின் அருமணியே இத்தனைக்காலம் எப்படியிருந்தாய்’ என்று அவளை ஆர அணைத்துத் தேற்றிய பிறகல்லவோ பிறர்கண்ணில் அவளை எந்தக்கோலத்தில் காட்டலாம் என்று நினைத்திருக்கவேண்டும்? கொஞ்சம்கூடக் காதல் கனிவு இல்லாத தன் வீரத்தின்மேல் காதல்கொண்ட, ‘தான்மை’ மிகுந்தவனாகத் தோன்றுகிறான் ராமன். தனக்காகவா மக்களுக்காகவா அவள் கோலம்?
Very poor and pathetic characterization.
Will continue once I hear the rest of the recordings.அன்புடன்,ராஜம்
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.
On Sep 17, 2015, at 9:10 AM, Hari Krishnan <hari.har...@gmail.com> wrote:2015-09-17 20:34 GMT+05:30 rajam <ra...@earthlink.net>:இது எனக்குப் புரியவில்லை. “தன்னாலே தன்குலத்துக்குப் பேர் கெட்டுப்போச்சே” “இஷ்வாகு குலத்துக்கும் பேர் கெட்டுப்போச்சு, ஜனகமகாராஜாவோட பேரும் கெட்டுப்போச்சு” … “இப்பொ பேர் கெட்டுப்போகலெ, இந்த மாசு துடைத்துவிட்டது” என்ற திருப்தி சீதைக்கு. இதை ஒரு சொற்பொருள் முரணாகத்தான் கம்பன் கொண்டுவந்து வைத்திருப்பதாக ஹரி சொன்னார்.
:)
தன்னுடைய மாசெல்லாம், தன்னாலே ஏற்பட்ட களங்கமெல்லாம் தீர்ந்துவிட்டதாகச் சீதை நினைத்ததாகவும் விளக்கம் சொல்லப்பட்டது.இதென்னத்துக்கு இந்த பேசிவ் வாய்ஸ்? நாந்தானே சொன்னேன். சொல்லப்பட்டதுன்னா?
என் கேள்வி: சீதையினால் ஏற்பட்ட களங்கம்/மாசு என்ன? அது எப்படி யாரால் துடைக்கப்பட்டது?தான் அறிந்தோ அறியாமலோ தன் சக்திக்கு உட்பட்டதான சூழலாக இல்லாத போதும் (வான்மீகத்தில் இதை வி-வஸா என்ற சொல்லால் மூன்று இடங்களில் மூன்று முறை விளக்கமளித்திருக்கிறாள்) இராவணனிடத்தில் சிறைப்பட்டது தனக்கு ஏற்பட்ட களங்கமாகக் கருதுவதாகக் கவிஞர்கள் சொல்கிறார்கள்.
கவிஞர்கள் சொல்ற பேசிக் அஸம்ஷன்ஸை ஏத்துக் கொண்டாதான் கதைப் போக்க உணர முடியும். இதை உங்களுக்காகச் சொல்லவில்லை. சபை நடுவில் கேட்டிருப்பதாலே பொதுவாக மற்றவர்கள் இதை உணரவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன். ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு ஏழு...இந்த வரிசைய ஒத்துகிட்டாதான் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் நாலும் எட்டு. ஹெக்ஸ்ல இந்தக் கணக்கு செல்லுமா? அங்க வேற அஸம்ஷன்.. வேற அமைப்பு. மறுபடியும். இது அக்காவுக்காகச் சொல்லப்படுவதில்லை.இந்தக் களங்கத்தை இராமன் இராணவணனோடு யுத்தம் செய்து கொன்றதன் மூலம் துடைத்திருப்பதாக சீதை நம்புவது கவிஞர்கள் சொல்வது.
எல்லை நீத்த உலகங்கள் யாவும், என்
சொல்லினால் சுடுவேன்; அது, தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று, வீசினேன்.என்னாலயும் முடியும். ஆனா அவன்வந்துதான் என்னை விடுவிக்கணும்.அந்தப் பக்கத்துல இராமன் கிட்கிந்தா காண்டம் நாடவிட்ட படலத்துல அனுமனுக்கு அடையாளம் சொல்றப்ப சொல்றான்:
வரை செய் தாள் வில் இறுத்தவன், அ(ம்) மா முனியொடும்
விரசினான் அல்லனேல், விடுவல் யான் உயிர்" எனா,
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்; அஃது எலாம் உணர, நீ உரைசெய்வாய்.இது நீலமாலை தன்னிடம் வந்து ஒருத்தன் வில்லை உடைச்சிட்டான்னு சொன்னப்ப சீதை தன் மனத்துக்குள் நினைத்துக் கொண்டது. பக்கத்திலிருந்த நீலமாலைக்கே தெரியாது. இராமன் சீதைக்கு நேர்ந்த இந்த மாதிரியான ஒரு மன நிகழ்வை அனுமனிடம் எப்படிச் சொன்னான்?இப்பதான் அடையாளம் சொல்லிக் கொண்டிருக்கிறான். இன்னும் தேடிக்கொண்டு அனுமன் கிளம்பக்கூட இல்லை. இப்போதே, அவன் வாக்கிலிருந்தே
கரை செயா வேலையின் பெரிய கற்பினள் தெரிந்து
உரைசெய்தாள்அப்படின்னு சான்றிதழ் வந்தாச்சு. இதை சந்தேகம்னு நீங்க சொன்னா எப்படின்னு நீங்கதான் சொல்லணும்.
++++++++++அமர்வு 133, பதிவு 2 முடிவில்.ஆமா, இந்த மனுசன் தான் இருந்த இடத்தை விட்டு அகலாமல் வீடணனை அனுப்பிச் சீதையைக் கூட்டிக்கொண்டுவா, அதுவும் … “சீரோடும்” என்று சொல்வானேன்?சரி, உங்கள் விளக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன் — தேவியை மக்கள் நல்ல கோலத்தில் பார்க்க விரும்புவார்கள் என்றுதான் அப்படியே உருகி உருகி மனத்தில் ஏகப்பட்ட குழப்பதோடு புழுங்கிப்புழுங்கிக் கலங்கிச் சொன்னான் என்று. ஆனாலும் தேவியை அவள் இருந்த கோலத்தில் பார்த்தால்தானே மக்களுக்கு உண்மை புலப்படும்? பிறகு மக்களுக்கு ஒரு சந்தேகமும் வர வாய்ப்பில்லை. அவர்களுக்காக என்று அவளை மீண்டும் அவன் தண்டிக்கவேண்டியதில்லை. ஆனால் கதை இப்போது இருக்கும் வகையில் ஓடியிருக்காது, ராஜாராமனுக்காகவே கதை அமைந்திருக்க முடியாது!!நான் அப்படிச் சொல்லவில்லை. ஒலி சரியாகக் கேட்கவில்லையா?
இதை ராஜாராமனுக்காக ராஜாராமனே வடித்துக் கொண்டான் என்று நீங்கள் நினைத்தால் உங்களைத் தடுக்க நான் யார்?
பார்ப்பனி மருதியை பாங்கோர் இன்மையின்
யாப்பறை என்றே எண்ணினன் ஆகி
காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
"நீ வா" என்ன நேர் இழை கலங்கி
"மண் திணி ஞாலத்து மழை வளம் தரூஉம்
பெண்டிர் ஆயின் பிறர் நெஞ்சு புகாஅர்
புக்கேன் பிறன் உளம் புரி நூல் மார்பன்
முத் தீப் பேணும் முறை எனக்கு இல்" என
மா துயர் எவ்வமொடு மனைஅகம் புகாஅள்அப்படின்னு இதைவிட மோசமா கற்பை வலியுறுத்திருக்கற காப்பியத்த உயர்த்திப் பிடிக்கறது நானா? உயர்த்திப் பிடிக்கறவங்கதான் அதை ஏன் செய்யறாங்கன்னு சொல்லணும். இந்த இலக்கணப்படி பாத்தா, சீதைக்கே இது விலைபோகாது. பிறர் நெஞ்சு புகுந்தாயிற்று. அப்ப இது களங்கமா இல்ல களங்கமே இல்லியா?
மணிமேகலை என்ன சொல்லுது?ஆனாலும் … அவள் கிடைத்துவிட்டாள் என்று தெரிந்த நொடியிலேயே வீடணனுடன் தானும் ஓடிப்போய் அவளப் பார்த்துவிட்டுப் பிறகல்லவோ மக்கள் கண்ணில் அவளைக் காட்டவேண்டும்? ‘கண்ணின் அருமணியே இத்தனைக்காலம் எப்படியிருந்தாய்’ என்று அவளை ஆர அணைத்துத் தேற்றிய பிறகல்லவோ பிறர்கண்ணில் அவளை எந்தக்கோலத்தில் காட்டலாம் என்று நினைத்திருக்கவேண்டும்? கொஞ்சம்கூடக் காதல் கனிவு இல்லாத தன் வீரத்தின்மேல் காதல்கொண்ட, ‘தான்மை’ மிகுந்தவனாகத் தோன்றுகிறான் ராமன். தனக்காகவா மக்களுக்காகவா அவள் கோலம்?அது நீங்கள் புரிந்து கொள்வது. மன்னிக்கவும். I beg to differ. I can say with reasonable confidence that I have spent more than forty years in studying both epics and I have my conviction about my conclusion. நான் ராமனுக்காக வாதாட வேண்டியதில்லை. நான் அவன் வக்கீலில்லை. நிற்க அவனுக்கு வலுவிருப்பதால் நிற்கிறான். ஒவ்வொரு ராமர் கோவிலும் சாட்சி.Very poor and pathetic characterization.
வல் இயல் மறவர், தம் வடுவின் தீர்பவர்,
வெல்லினும் வெல்க, போர்; விளிந்து வீடுக;
இல் இயல் அறத்தை யான் இறந்து வாழ்ந்த பின்,
சொல்லிய என் பழி அவரைச் சுற்றுமோ?
--சுந்தரகாண்டம் உருக்காட்டுப் படலத்தில் சீதை.
சொல்லிய கவிப்பழி என்னைச் சுற்றுமோ!
இதைப் பொதுவில் வைத்து விவாதிப்பதால் ஒரு முன்னெச்சரிக்கைக் குறிப்பு. அவர்கள் என்னைப் பொதுவில் வைத்துக் கேட்டதால் நான் பொதுவில் விடை சொல்லவேண்டியதாயிற்று. இந்த விவாதம் திசைமாறியோ மாறாமலோ தொடருமானால், ஒவ்வொரு மடலையும் படித்து விடையிறுக்க எனக்கு இப்போது அவகாசமில்லை. ஏற்கெனவே இருக்கும் மொழிபெயர்ப்பு நெருக்கடிகளோடு அன்றாட திருப்புகழ் பக்கத்தையும் இழுத்துவிட்டுக் கொண்டிருக்கிறேன். படிப்பதற்கும் விளங்கிக் கொண்டு விளக்குதற்கும் கடலளவுக்கும் மேலே இருக்கிறது. ஒரு நாள் கூட நிறுத்த முடியாத, ஒவ்வொரு நாளும் எழுதியே ஆகவேண்டிய சூழல். எனக்குப் பிடித்திருக்கிறது. செய்கிறேன். விவாதங்களில் செலவிட எனக்கு நேரமில்லை என்று என் நிலையை சபைக்கு விளக்கியாக வேண்டியிருக்கிறது. மன்னித்தருளவும்.
சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறிபோதியால்' என்றனன்-புலவர் புந்தியான்.
Begin forwarded message:Subject: Re: [தமிழ் மன்றம்] பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்From: rajam <ra...@earthlink.net>Date: September 17, 2015 at 11:37:18 AM PDTCc: kambaraamayanam <kambara...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>, தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>To: Hari Krishnan <hari.har...@gmail.com>
மீண்டும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். திருப்புகழ் வேலையால் இங்கே என்னோடு வாக்காட ஹரிக்கு நேரம் இருக்காது. ஆனால் முற்றோதல் குழுவினர் யாராவது எழுதினால் மகிழ்வேன். விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை.
சரி, இங்கே பார்ப்போம்.1. 'யாது யான் இயம்புவது? உணர்வை ஈடு அறச்சேதியாநின்றது, உன் ஒழுக்கச் செய்தியால்;சாதியால்; அன்று எனின், தக்கது ஓர் நெறிபோதியால்' என்றனன்-புலவர் புந்தியான்.என்ற பாட்டில் ராமன் சொன்னது: ‘உன் ஒழுக்க நடவடிக்கையால் உணர்வை ஒப்பற்ற முறையில் சிதைத்தாய். நீ செத்துப்போ. அல்லது தகுந்த ஒரு நெறியில் போ’'ஒண்ணு நீ செத்துப்போ, இல்லே தகுந்த வேற ஒரு நெறியில் போ’ என்று சொன்னான். அந்த தகுந்த வேறு ஒரு நெறி என்ன என்பதை இங்கே உள்ளவர்கள் எனக்கு எடுத்து விளக்கினால் தெரிந்துகொள்வேன்.
2. இலக்குவனை நோக்கிச் சிதை வைக்கும்படிச் சீதை வேண்டியபோது தன் அண்ணனை நோக்குகிறான் இலக்குவன். அந்த அண்ணனும் கண்ணால் இசைவு கொடுக்கிறான்.இந்தச் சான்றுகள் போதாவா — சிதை தீப்புகுவதுக்கு ராமன் மறைமுகமாகப் பணித்தன் என்றும் இசைந்தான் என்றும் சொல்ல?
குழப்பத்துடன்,ராஜம்
Begin forwarded message:Subject: Re: [தமிழ் மன்றம்] பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதல்From: rajam <ra...@earthlink.net>
Date: September 17, 2015 at 8:16:28 PM PDTCc: தமிழ் மன்றம் <tamil...@googlegroups.com>, vallamai <vall...@googlegroups.com>, kambaraamayanam <kambara...@googlegroups.com>To: Hari Krishnan <hari.har...@gmail.com>