பாஞ்சாலி சபத உரை வெளியீடும் அனுமன் வார்ப்பும் வனப்பும் மறுபதிப்பும்

7 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Feb 22, 2016, 7:24:29 AM2/22/16
to santhavasantham, vallamai, தமிழ் மன்றம், தமிழ் சிறகுகள், kambaraamayanam, Madhura Bharati, Ramanan Isaikkavi, S Ravi, crazy mohan, Achu Krishna, Seethaalakshmi Subramanian, Badri Seshadri, Haran Prasanna
இந்தமுறை புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி இரண்டு இடங்களில் அபாரமாக நடந்து முடிந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.  சென்னை வியாசர்பாடியில் இசைக்கவி ரமணன் தன்னுடைய சொற்பொழிவோடு சேர்த்தும், அடுத்தநாள் நடந்த சேஷன் சம்மான் என்ற அவனுடைய தந்தையார் நினைவு நிகழ்ச்சியிலும் நடத்தி, அவனும் மனம்குளிர்ந்து என்னையும் மகிழ்வித்தான்.  

இந்த நிகழ்வுகளில் வியாசர்பாடியில் நடந்தனவற்றின் பதிவுகளை இத்துடன் இணைத்திருக்கிறேன்.


அடுத்ததாக 21ம் தேதியன்று பெங்களூருவில் எங்களுடைய முற்றோதல் குழு இந்த நிகழ்வை மறுமுறையும் நடத்தவேண்டும் என்று விரும்பியது.  மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து, குத்துவிளக்கேற்றி, நடனநிகழ்ச்சியோடு தொடங்கி அமர்க்களப்படுத்திவிட்டார்கள்.

தமிழ்நாட்டு மகளிரின் ஸங்கீதம் என்ற தலைப்பில் பாரதி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறான்.  அதில்:

"பெண்களுக்குத் தாளஞானம் ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் சிரமமென்றும் இயற்கையிலே அவர்களுக்கு "லயவுணர்ச்சி"கொஞ்சம் குறைவென்றும் சிலர் தப்பாக நினைக்கிறார்கள். பெண்கள் குதித்துப் பாடும்போது பாருங்கள் 'டணீர், டணீர்' என்று எப்படித் தாளம் விழுகிறது."

என்று குறிப்பிடுகிறான்.

சொக்கனுடைய மகள் குழந்தை நங்கை ஆடும்போது எனக்கு இந்த வாசகங்கள்தான் நினைவுக்கு வந்தன.  கேட்டுப் பாருங்கள்.  கேளுங்கள், பாருங்கள் என்றேன்.  டணீர் டணீரென்றுதான் தாளம் விழுகிறது.    இதைவிட அதிகமாக என்னை கௌரவிக்க முடியாது.  குழந்தைக்கு சுத்திப் போடச் சொன்னேன்.  முதல்நாள் இரவு எட்டரை மணிக்குமேல் திடீரென்று தீர்மானித்து மறுநாள் காலை பத்து மணிக்கு ஆடியிருக்கிறது குழந்தை.

இதையடுத்து ஜடாயு பாஞ்சாலி சபத உரையைக் குறித்து மிக விரிவான சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார்.  சொக்கன் அனுமன்:வார்ப்பும் வனப்பும் புத்தகத்துக்கும் தனக்கும் உண்டான உறவுமுறையைப் பற்றியும் அதனால் ஏற்பட்ட 'பாதிப்பை'ப் பற்றியும் சொன்னார்.  என்னுடைய ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் நடந்தது.  அத்தனையும் இணைப்பிலிருக்கிறது.

நிகழ்ச்சி முடியும் சமயத்தில் எனக்கு ஹைபோக்ளைசீமியா அறிகுறிகள் தோன்றிவிட்டன.  'இன்னும் அரைமணிநேரத்துக்குள் சாப்பிட்டாக வேண்டுமே.. எப்படிச் சமாளிக்க போகிறேன்' என்று நினைத்துக் கொண்டும் அருகில் எந்த உணவுவிடுதி இருக்கிறதென்றும் யோசித்துக் கொண்டிருந்தால், ஷைலஜா, 'அண்ணா, வந்து சாப்பிடுங்கோ' என்று அழைக்கிறார்.  அவர் இப்படி முழுசாப்பாட்டையும் கொண்டுவந்திருப்பது எனக்குத் தெரியாது.  அன்றைக்கு அவர்தான் என்னுடைய அன்னலட்சுமி, பத்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஹைபோக்ளைசீமியாவின் பாதிப்பை அனுபவிக்காமல் காப்பாற்றிய தேவதை.  எல்லா நலமும் பெருகி வாழ்க.

எல்லோருக்கும் நன்றி.  குறிப்பாக, பதிப்பே காணப்போவதில்லை என்று நினைத்துக் கொண்டிருந்த பாஞ்சாலி சபத உரையைக் கொண்டு வந்த பத்ரிக்கும் ப்ரசன்னாவுக்கும்.  


https://www.youtube.com/watch?v=F2ODiRkzUkU வியாசர்பாடி நிகழ்ச்சிக்கு திரு குருமூர்த்தி வரவேற்கிறார்.

https://www.youtube.com/watch?v=E4iDD10QGHE ரமணன் உரையும் என் ஏற்பும்

https://www.youtube.com/watch?v=7qSLPOyov0s  பெங்களூரு நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றலும் குழந்தை நங்கையின் நடனமும்.

https://www.youtube.com/watch?v=xkMgX6Qv9xg சொக்கன் அறிமுக உரை, ஜடாயுவின் பாஞ்சாலி சபத உரை பற்றிய பேச்சு

https://www.youtube.com/watch?v=vXsuBvxPvcU அனுமன்:வார்ப்பும் வனப்பும் பற்றி என் சொக்கன்

https://www.youtube.com/watch?v=-mXJbqy-PFw  என்னுடைய ஏற்புரை

https://www.youtube.com/watch?v=yYSx-1RTTrM  கலந்துரையாடல்

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Reply all
Reply to author
Forward
0 new messages