மிக்க நன்றி

9 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Sep 15, 2016, 9:10:56 PM9/15/16
to santhavasantham, vallamai, mintamil, தமிழ் மன்றம், isaikkav...@googlegroups.com, Madhurabharati, Ramanan, Veeraraghavan P., Jataayu, Naga Chokkanathan, kambaraamayanam, rajam

வணக்கம். செய்தி கேள்விப்பட்டு தொலைபேசியில் அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. மதுரபாரதி எழுதியிருப்பதாக அறிந்தேன்.  நான் மடல்களைப் பார்க்கவில்லை. இன்னும் பத்து நாளுக்குப் பார்க்கவும் முடியாது.

கம்பராமாயணக் குழுவினர் மைசூருக்கு வந்திருந்தனர். அனைவருக்கும் நன்றி.

முந்தாநாள் தகனம். நேற்று காலை என் மகனுக்காகவே பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் காவேரியில் ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு அருகில் காவிரி - கபிலை சங்கமத்தில் அஸ்தி கரைப்பு என்று எனக்கு அவன் செய்ய வேண்டியதையெல்லாம் அவனுக்கு நான் செய்து முடித்தேன்.

This is not you. Be strong என்று இளையவன் தேற்றுகிறான் . முயல்கிறேன்.

மும்பையிலிருந்து இதற்காகவே என்னைத் தேடிக் கொண்டு வந்தான் போலிருக்கிறது.

நிறைய சொல்ல நினைத்தாலும் இப்போது முடியவில்லை. கைப்பேசியில் எழுதுவதாலும் மனநிலையாலும் இதற்குமேல் சொல்ல முடியவில்லை.  மரணப் பதிவு, சான்று, தினப்படி காரியம் என்று பல வேலைகள் இருக்கின்றன. 27ம் தேதி வரையில் நிறைய பணிகள் உள்ளன. அதன் பிறகு வருகிறேன். அதுவரை மன்னிக்கவும்.

வல்லக்கோட்டை முருகன் துணை.

Reply all
Reply to author
Forward
0 new messages