காரைக்குடி கம்பன் கழக அழைப்பு

3 views
Skip to first unread message

Hari Krishnan

unread,
Dec 17, 2015, 10:31:23 PM12/17/15
to kambaraamayanam, Mahesh Jayaraman, Jataayu, sethu raman, Thirumulanathan D, Shylaja, Naga Chokkanathan
காரைக்குடி கம்பன் கழகத்துக்கு வந்திருந்து முற்றோதலின் ஒரு பகுதியை நடத்த முடியுமா என்று கேட்டிருக்கிறார்கள்.  கம்பராமாயணம் ஃபேஸ்புக் குழுமத்தில் பார்க்கவும்.  அவர்களுடைய கேள்வியும் என்னுடைய பதிலும் கீழே:

திரு பழனியப்பன் முத்தப்பன் அவர்கள்:
-------------------------------------------------
தாங்கள் தங்கள் நண்பர்களுடன் காரைக்குடி மண்ணிற்கு வர இயலுமா. காரைக்குடி கம்பன் கழகம் வழியாகத் தங்களை அழைக்க முயலுகிறோம். காரைக்குடியில் கம்பராமாயண முற்றோதலை நிகழ்வின் ஒரு பகுதியை நடத்தலாம்.
-------------------------------------------------

நான்:
-------------------------------------------------
அழைப்புக்கு மிக்க நன்றி. ஒரு நாள் நிகழ்ச்சியாகத்தானே? முற்றோதலின் ஒரு பகுதி என்பதற்கு அதுதானே பொருள்? இது குழு முழுவதும்--அல்லது குழுவில் சிலர்--தங்கள் சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறதல்லவா? இது குறித்து அன்பர்களைக் கருத்துத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
-------------------------------------------------


இது ஒருபுறமிருக்க, இந்த டிசம்பர் மாத தென்றல் இதழில் சொக்கனுடைய பேட்டி வெளிவந்திருக்கிறது.  அன்பர்களுடைய பார்வைக்கு:

http://tamilonline.com/thendral/article.aspx?aid=10495

தென்றல் ஆன்லைனில் இதைப் படிக்க, உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 
Reply all
Reply to author
Forward
0 new messages