கிராமப்புற , அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறை வசதிகள் மற்றும் சுத்தமான குடிநீர் இல்லாமை கல்வி, ஆரோக்கியம் மற்றும் சமத்துவத்திற்கு பெரும் தடையாக உள்ளது. அரசு தரும் நிதி, போதுமானதாக இல்லாத காரணத்தால், கல்வி மரம் அறக்கட்டளை (https://www.kalvimaram.org) இந்த பிரச்சினைகளை, நாம் அனைவரின் உதவியோடு எதிர்கொள்ள முயற்சிக்கிறது
பெண்களின் கல்விக்கு தடைகளை உடைத்தல் :
கிராமப்புற அரசுப் பள்ளிகளில் முறையான கழிவறைகள் இல்லாதது, குறிப்பாக பெண் மாணவிகளின் பள்ளி வருகையை பாதிக்கிறது. மாதவிடாய் காலத்தில் பல பெண்கள் பள்ளிக்கு வருவதை தவிர்க்கின்றனர், இது கல்வி இடைநிற்றலுக்கு வழிவகுக்கிறது. அரசுப் பள்ளிகளில் சுத்தமான கழிவறைகளை உறுதி செய்வதன் மூலம் பெண்களின் கல்வியை மேம்படுத்த முடியும்.
மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்தல் :
மோசமான கழிவறை சுகாதாரம் மற்றும் சுத்தமற்ற குடிநீர் மாணவர்களிடையே சிறுநீரக பிரச்சினைகள் மற்றும் நீர் மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்துகிறது. கல்வி மரம் அறக்கட்டளை, பள்ளிகளில் நீர் சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவி, சுத்தமான குடிநீரை உறுதி செய்வதன் மூலம், இந்த நோய்களை குறைத்து, மாணவர்களின் கவனத்தையும் மனத் தெளிவையும் மேம்படுத்த முடியும்.
அரசுப் பள்ளிகளில் சுகாதார நெருக்கடி, நிதி பற்றாக்குறை மற்றும் தொடர் பராமரிப்பு குறைபாடுகளை கொண்டுள்ளது. கல்வி மரம் அறக்கட்டளை, சுகாதார விழிப்புணர்வு, கழிவறை சுகாதாரம் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளுக்கு உதவி வழங்குவதன் மூலம் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குதலில் உள்ள இடைவெளிகளை நிரப்ப முயல்கிறது.
மேலும் தகவலுக்கு மற்றும் ஆதரவளிக்க, https://www.kalvimaram.org ஐ பார்வையிடவும்.