Family Get-Together Program - "Healthy Family Wealthy Future" (10.04.2015 Friday)

8 views
Skip to first unread message

M.S. Abdul Hameed

unread,
Apr 8, 2015, 4:26:39 AM4/8/15
to
Emirates India Fraternity Forum (EIFF)

நடத்தும்

“நலமான குடும்பம் வளமான எதிர்காலம்”
(Healthy Family Wealthy Future)
குடும்ப சங்கம நிகழ்ச்சி

நாள் : 10.04.2015 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 5 முதல் 9 மணி வரை
(குழந்தைகளுக்கான போட்டிகள்: மதியம் 3 முதல் 5 மணி வரை)
இடம் : இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல், அஜ்மான்

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

நல்லதொரு குடும்பம்! பல்கலைக் கழகம்!!

உங்கள் குடும்பத்தாரின் உடல் நலம் உங்கள் கையிலா? மருத்துவரின் கையிலா?

ஆரோக்கியமான அழகிய குடும்பம் அமைத்திட…

இன்பமயமான குடும்பம் என்ற இனிய கனவு நனவாகிட...

இதோ ஓர் அரிய வாய்ப்பு!


சிறப்புரையாற்றுபவர்கள்:

குடும்பப் பிணைப்பு”
பொறியாளர் தமீம் மன்சூர் B.E., MBA

“குடும்பத்தை ஆரோக்கியமாக மாற்றுவது எப்படி?”

டாக்டர் முஹம்மத் இஸ்மாயீல் B.P.T., M.Sc. (Senior Specialist Therapist, Rashid Hospital, Dubai)

“நலமான குடும்பம் வளமான எதிர்காலம்”
பொறியாளர் முஹம்மத் ஸாதிக் B.E., PMP, CIMA (London) (Project Manager, GTFS, Dubai)


ஆரோக்கியமான வாழ்வு குறித்த விழிப்புணர்வைப் பெறுவதற்காக அமீரகத்தில் நல்ல பல சமூகப் பணிகளைச் செய்து வரும் Emirates India Fraternity Forum (EIFF) வெகு சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள இந்த இனிய மாலை நிகழ்ச்சியில் அமீரகவாழ் குடும்பங்கள் திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேநீர்+இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் தனியாகப் பராமரிக்கப்படுவர். அவர்களுக்குத் தனியாகப் போட்டிகள் நடத்தி பயனுள்ள பரிசுகள் வழங்கப்படும்.

குழந்தைகளுக்கான போட்டிகள்
(மதியம் 3 முதல் மாலை 5 மணி வரை)

கிராஅத் போட்டிகள்: பிரிவு 1:  5 - 7 வயது வரை
                                         பிரிவு 2:  8 - 9 வயது வரை
வினாடி வினா போட்டி: 10 - 12 வயது வரை

போட்டிகளில் பங்கு பெற விரும்பும் குழந்தைகள் முற்கூட்டியே வந்து தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இது குடும்ப நிகழ்ச்சி என்பதால் தனிநபர்களுக்கு (Bachelors) அனுமதியில்லை.

நிகழ்ச்சியின் அழைப்பிதழும், நடைபெறும் இடத்தின் வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளன.


--
Thanks & Regards.

M.S. Abdul Hameed
Invitation.jpg
Route Map.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages