இந்திய அரசியலை நமதாக்குவோம்!தேசத்தை பொதுவாக்குவோம்!!மாபெரும் பொதுக்கூட்டம்
Date : 23/01/2015Time : 7.30 PMPlace : Al Musalla Tower - Bur DubaiLocation : Near Al Fahidi Metro StationLand Mark : Near York International Hotelஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இந்தியாவின் வரலாற்றை புரட்டினால் புழுதி படிந்த பக்கங்களுக்கு சொந்தக்காரர்கள் முஸ்லிம்கள்.
ஆட்சியில், கட்டமைப்பில், கல்வியில், பொருளாதாரத்தில், சமூக நீதியில், சமத்துவத்தில், சகோதரத்துவத்தில் இந்திய மக்களை வளர்த்தெடுத்தது முஸ்லிம்கள்.அதற்கு சாட்சிகளாய் தடயங்கள் பல இந்திய தரணியில் தவழ்கின்றது.இந்தியா என்னும் கட்டிடத்தின் தூண்களில் முஸ்லிம்களின் இரத்தமும் சதையும் பின்னிப் பிணைந்திருக்கின்றன.
ஆனால் சங்கப் பரிவாரங்களின் சதிச் செயல்களாலும், அரசியல் கட்சிகளின் துரோகத்தாலும் வரலாற்றுக்கு சொந்தக்காரர்களான முஸ்லிம்கள். இன்று வரலாற்றிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர்.மண்ணின் மைந்தர்கள் இன்று மூன்றாம் தரக் குடிமக்களாக மாறிப் போன அவலம். ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டதை உணராததன் விளைவு...
சாக்கடைகள் பெருக்கெடுத்து ஓடும் கூவ நதிக்கரைகள் முஸ்லிம்கள் வாழும் இடங்கள்.தீவிரவாதமும், பயங்கரவாதமும் முஸ்லிம் சமூகத்தின் அடையாளங்களாக திணிக்கப்பட்டுள்ளது.பசியும், பயமும் முஸ்லிம் சமூகத்தின் சொத்தாக மாறிப் போனது.இந்நிலையை மாற்றிட...வரலாறு அறிந்து வரலாற்றை நமதாக்கிட...அரசியலை நமதாக்குவோம்! தேசத்தைப் பொதுவாக்குவோம்!!சிறப்புரை:B. அப்துல் ஹமீதுமாநிலப் பொதுச் செயலாளர், சோஷியல் டெமோக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாசிறப்பு அழைப்பாளர்:தாமரச்சேரி அஷ்ரஃப்(ஜனாதிபதி விருது பெற்ற சமூக ஆர்வலர்)அனைவரையும் அழைக்கிறது...இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி - தமிழ் நாடுதொடர்புக்கு - 055-877 4566மீடியா துறை.குறிப்பு : இத்துடன் தங்களுக்கான அழைப்பிதழும், Location Mapம் இணைக்கப்பட்டுள்ளன.