வாலிநோக்கம்: பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக கட்டப்பட்ட மஸ்ஜிதே அம்மார் இறையில்லம் திறப்பு விழா!
இராமநாதபுரம்: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சர்வ சிக்ஷா கிராமம் (முழுமையான கல்வி கிராமம்) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட முகவை மாவட்டம் வாலிநோக்கம் காலனியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக இறையில்லம் ஒன்று கட்டிக்கொடுக்கப்பட்டது. இதன் திறப்பு விழா கடந்த 8.8.2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
மஸ்ஜிதே அம்மார் நிர்வாக கமிட்டி தலைவர் ஜனாப் H. ஹபீப் நவாஸ் கான் அவர்கள் விழாவுக்கு தலைமை தாங்கினார். ஜனாப் M. செய்யது ஹாலிது அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஜனாப் ஜெ. முஹம்மது ரஸீன், ஜனாப் எஸ்.ஹெச். அகமது முகைதீன், ஜனாப் டி.ஏ.எம். ஜமீர், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப் பி. அப்துல் ஹமீது, ஜனாப் எம்.கே. முஹம்மது ஷரீஃப், ஜனாப் ஏ. அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாஈல் அவர்கள் இறையில்லத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப் ஏ. ஹாலித் முஹம்மது, முன்னாள் ஆண்கள் அறிவகம் முதல்வர் ஜனாப் எம். அன்சாரி பைஜி, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில துணைத் தலைவர் மெளலவி அல்ஹாஃபிழ் மீரான் முஹைய்யதீன் அன்வாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக மஸ்ஜிதே அம்மார் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஜனாப் எஸ். பரக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Thanks & Regards.