கீழக்கரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா! தமிழக அரசின் முடிவுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி வரவேற்பு!!
இது குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் பி.எஸ்.ஐ. கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கீழக்கரையினை தனி தாலுகாவாக செயல்படுத்த கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பிறகும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கீழக்கரையினை தலைமையிடமாக கொண்டு புதியதோர் தாலுகா உருவாக்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுகளாக எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.
அதன் பலனாக இராமநாதபுரம் மற்றும் கடலாடி வட்டங்களை சீரமைத்து கீழக்கரையினை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
தமிழக அரசின் இம்முடிவிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
--
மேலும் விபரங்களுக்கு,
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம்
செல் : 9655809510 / 9944863014
Email : sdpiwes...@gmail.com
Website: www.sdpitamilnadu.org
படியுங்கள் ! பரப்புங்கள்!!
அரசியலின் புதிய பாதை
மாதம் இருமுறை அரசியல் எழுச்சி இதழ்