33வது ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் தமிழ் புத்தகங்கள்!
2014ம் ஆண்டுக்கான ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 05.11.14 புதன் கிழமை அன்று கோலாகலமாகத் துவங்கியது. 05.11.14 முதல் 15.11.14
59 நாடுகளிலிருந்து 1256 நூல் வெளியீட்டகங்கள் பங்குபெறும் இந்தப் பிரம்மாண்ட கண்காட்சியில் பல்வேறு மொழிகளில் நூல்கள் இட்ம் பெறுகின்றன. இதில் தமிழ் நூல்களும் இடம் பெறுகின்றன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
பல்வேறு தலைப்புகளில் நல்ல பல தமிழ் நூல்கள் இடம் பெறும் ஸ்டால்
ஹால் எண் : 5, ஸ்டால் எண் : L 46
தேஜஸ் பப்ளிகேஷன்ஸ்
Hall No : 5, Stall No : L 46
Thejas Publications
Sharjah Expo Centre, Al Tawoon Area, Sharjah
இது தவிர தினமும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பிரபல எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி, சமையல் கலைகளை விளக்கும் நிகழ்ச்சி, சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சி என்று அரங்கம் களை கட்டுகிறது.
இந்த வார விடுமுறையையும், அடுத்த வார விடுமுறையையும் குடும்பத்துடன் சென்று அங்கே பயனுள்ளதாக கழிக்கலாம்.
அனைவரும் வாருங்கள்!
அறிவமுதம் பருகுங்கள்!!
ஹால் எண் 5ல் உள்ள ஸ்டால் எண் L 46க்கு வருகை தாருங்கள்!!!