டிசம்பர் 28 திருச்சியில்
சமுதாயத்தைஓரணியில் கூட்டுவோம்!
2013 டிசம்பர் 28 சனிக்கிழமை!
திருச்சி அண்ணாநகர் உழவர் சந்தை மைதானத்தில் மஹல்லாஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநில மாநாடு!
அன்று மதியம் 3மணி அளவில் திருச்சி மாநகராட்சிக்குஅருகில் இருந்து புறப்படும் இளம்பிறை எழுச்சிப் பேரணி, மாலை5 மணியளவில் மாநாட்டுத் திடலை அடையும்!
மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாட்டில் தமிழகத்தில்உள்ள மஸ்ஜிதுகளை மையமாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் பன்னிரண்டாயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், நாட்டாண்மைகள், முத்தவல்லிகள், படேல்சாஹிபுகள், தலைவர்கள், செயலாளர்கள் என்று முஸ்லிம்சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!
மஸ்ஜிதுகளிலும் மதரஸாகளிலும் மார்க்க ஞானப்பிரகாசத்தின் ஒளிவிளக்குகளான மௌலானாகள், மௌலவிஆலிம்கள், முப்திகள் என்று சன்மார்க்க ஞான சூரியன்கள்மாநாட்டில் ஒளிசிந்துகிறார்கள்.
உலமாகள் கூடும் இடங்களில் உமராகள் என்றுள்ள சமுதாயப்பிரமுகர்கள், புரவலர்கள், காவலர்கள், கல்விச் செல்வர்கள்,வணிகக் கோமான்கள், தொழில்துறைச் சீமான்கள் என்றுபிரபலமாயுள்ள சமுதாயச் சான்றோர்கள் பலரும் மாநாட்டில்பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள்!
பல்லாயிரக்கணக்கில் படைபோல் திரண்டு எழும் இளம்பிறை இளைஞர்களும், மாணவமணிகளும், தொழிலாளர் கூட்டமும் நிறைந்திருக்கும் மாநாட்டில், முஸ்லிம் லீகின் தலைவர்களும்,தொண்டர்களும், மூத்த முன்னோடிகளும் கலந்திருக்கும்மாநாட்டில், இலட்சக் கணக்கில் கூடியிருக்கும் சமுதாயசமுத்திரத்தின் மத்தியில்
பதினைந்து முன்மாதிரிபதினைந்து முன்மாதிரிபதினைந்து முன்மாதிரிபதினைந்து முன்மாதிரிபதினைந்து முன்மாதிரி
மஹல்லாஜமாஅத்துகளுக்கு விருதுகள் வழங்கியும் பாராட்டுப் பத்திரங்கள்வாசித்தளித்தும் வரலாறு படைக்க இருக்கிறோம்.
கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் அவர்களின் கனவும்,சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் அவர்களின் இலட்சியமும்,அல்லாமா அமானி ஹள்ரத், அல்லாமா அப்துல் ஹமீது பாகவிஹள்ரத், அல்லாமா உத்தமபாளையம் எஸ்.எஸ்.முகமது அப்துல்காதர் பாகவி ஹள்ரத், மார்க்கமேதை அபுல் ஹசன் சாதலிஹள்ரத், மார்க்கச் சட்டஞானி நெல்லை கலீலுர் ரஹ்மான் ஹள்ரத்,மணிமொழி மௌலானா கலீலுர் ரஹ்மான் ஹஜ்ரத், மார்க்கக்களஞ்சியம் அபுஸ் ஸஊது ஹள்ரத், பெரியகுளம் மார்க்கக் கடல்சர்புதீன் ஹள்ரத், சன்மார்க்க சண்டமாருதம் ஷம்சுல் ஹுதாஹள்ரத், கடையநல்லூர் அறிவுமேதை யூசுப் அன்சாரி ஹள்ரத்,அய்யம்பேட்டை ஆலிம் சூரியன் தாஜுதீன் ஹள்ரத் போன்றமேன்மக்களின் நோக்கங்களும் ஒருசேர நிறைவேறப் போகும்மாநாடாகத் திருச்சி மாநாடு திகழப் போகிறது!
இந்தத் திருப்புமுனை மாநாட்டுக்கு வரவேற்புக் குழுஉறுப்பினர் ஆவது வரலாற்றுச் சிறப்புக்குரிய காரியமல்லவா?
உறுப்பினர் கட்டணம் ரூபாய் ஆயிரம் மட்டும்தானே!மாவட்டந்தோறும் குறைந்தது நூறு பிரதான உறுப்பினர் களாவதுவரவேற்புக் குழுவில் சேர வேண்டுமல்லவா? இதுவரை நூறு பேர் கூட பெயர்கள் அனுப்பவில்லை!
ஓரிரு நாட்களிலேயே தேவைப்பட்ட மாவட்டந்தோறும் நூறு உறுப்பினர் என்னும் இலக்கை எட்ட வேண்டும்!
அதற்கு அனைவரின்ஒத்துழைப்பும் ஆதரவும் உடனடியாக கிட்ட வேண்டும்!
உங்கள் ஆதரவை நம்பித்தான் இ.யூ.முஸ்லிம் லீக் இவ்வளவுகாலமும் எவ்வளவோ செய்து வருகிறது!
டிசம்பர் 28 மாநாடு, இதுவரை முஸ்லிம் லீக் நடத்திய எல்லாமாநாடுகளிலும் முதன்மையானது! இதுபோன்று இதுவரைஎங்கும் நடந்ததில்லை! என்பதை நிலை நாட்டுவோம்!சமுதாயத்தை ஓரணியில் கூட்டுவோம்! ஜனநாயகத்தில்சமுதாயத்தின் பெருமையை உயர்த்திக் காட்டுவோம்!
-கே.எம்.கே.-
கும்பகோணம் சாதிக்
ஊடகத்துறை செயலாளர்