------------------------------------------------------------------------------------
தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசல் தலைமை இமாம் ஆகவும்
மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் இமாம் ஆகவும்
பணியாற்றிய மார்க்க அறிஞர் மெளலவி ரஃபீஉத்தீன் பாகவி
அவர்கள் இன்று (13-08-2013) காலை கோலாலம்பூரில்
வபாத்தானார் (இன்னா லில்லாஹி...) என்ற செய்தி
பெருத்த துயரத்தைத் தமிழ்கூறு ந்ல்லுலகில் நிறைத்தது.
அமைதியின் இருப்பிடமாகத் திகழ்ந்த மெளலானாவின் உயிர்
உறக்கத்திலேயே அமைதியாகப் பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
தெளிந்த ஞானம், தீர்க்கமான தொலைநோக்கு, பரந்த அறிவு,
செறிந்த சிந்தனை, நேர்கொண்ட பேச்சு, உறுதியான
கொள்கைப் பிடிப்பு, ஆழமான நட்பு, நேசம் மணக்கும் பண்பு
முதலியவற்றின் சொந்தக்காரரான மெளலவி ரஃபீஉத்தீன்
எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர். அவரது உள்ளொளிப்
பயணம் காலமெலாம் நிலைத்து அவர் புகழ் பரப்பும். இஸ்லாமிய
வெற்றிடத்தை அவரது மறைவு ஏற்படுத்தியுள்ளது.
அன்னாரது மறைவின் துயரில் தமிழ் நாடு முஸ்லிம் தொண்டு
இயக்கம், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம், இனிய
திசைகள் மாத இதழ் பங்கேற்கின்றன.
மெளலானாவின் மறுமை நல் வாழ்விற்காக இருகரமேந்தி
இறைஞ்சுவோம்.
பேராசிரியர்-டாக்டர்
சேமுமு. முகமதலி.