Assalamu
Alaikkum...
இன்று குரோம்பேட்டை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிந்திய தொழுகையை நான் நிறைவு செய்த பின்னர் ஜமாஅத் நிர்வாகிகளுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த காவல் நிலைய அலுவலர் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதை கவனிக்க நேர்ந்தது. இது எனக்கு வித்தியாசமாகப் பட்டதால் இது குறித்து நிர்வாகிகளிடம் பேசினேன்.அப்போது,
”தமிழகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே பள்ளிவாசல்கள்,கோவில்கள்,கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவற்றிற்கு முன்னெச்சரிக்கையாக-
1.வணக்கத்தலங்களுக்கு புதிய மனிதர்கள் வருகையை கவனத்தில் கொள்ளவேண்டும்,
2.சந்தேகத்திற்கிடமான நபர்கள் வருகை குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு செல் பேசியில் தெரிவிக்க வேண்டும்,
3.புதிய -சந்தேகத்திற்கிடமான- மனிதர்களை நம் சமுதாயத்தவர்தானே என்ற எண்ணத்தில் இரவில் தங்க அனுமதிக்கக் கூடாது.
4.வணக்கத்தலங்களின் நிர்வாகிகளின் செல்பேசி எண்களும் அருகண்மையில் உள்ள காவல் அலுவர்களின் எண்களும் பரஸ்பரம் தெரிவித்துக்கொள்ளவேண்டும்-
என்பன போன்ற அறிவுறுத்தல்கள் செய்யப்பட்டுவருகின்றன.
வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கும் கூட இவ்வாறான செய்திப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது;அவர்களுடனும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கையாக,முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை உயர் அலுவர்களுக்கு ஆதாரத்துடன் தெரிவிக்கவே புகைப்படங்கள் எடுக்கப்படுகின்றன”
என்று காவல் துறை சார்பாக கூறப்பட்ட விவரங்களை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Yours,
Yembal
Thajammul Mohammad