Fwd: Amritha Vahini - Sri Lalita Navaratnamalai

1 view
Skip to first unread message

Bala Janakiraman

unread,
Jul 8, 2016, 11:18:27 PM7/8/16
to Nallu...@yahoogroups.com, iyappa_...@googlegroups.com
---------- Forwarded message ----------
From: "K.N.RAMESH" <knra...@gmail.com>
Date: Jul 9, 2016 7:52 AM
Subject: Amritha Vahini - Sri Lalita Navaratnamalai
To:
Cc:

Courtesy:sri.Varagooran Narayanan

https://www.youtube.com/watch?v=MIHqVHfpO7M&feature=share

ஸ்ரீ லலிதா நவரத்னமாலை திருப்பதிகம்
அகத்திய மகா முனிவரால் அருளி இயற்றியது...
(ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள் குரலில் அனுபவியுங்கள்)

காப்பு

ஆக்கும் தொழில் ஐந் தரனாற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேச்வரிபால்
சேர்க்கும் நவரத்தினமாலையினைக்
காக்கும் கண நாயக வாரணமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நினையெனில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் பயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நீலம்

மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவற்றளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

முத்து

முத்தே வரும் முத்தொழிலாற் றிடவே
முன்னின்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவர்சினியே சரணம்
தத்தேறிய நான் தனயன் தாய்நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு ததிக்கிணை வாழ்வு அடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பவளம்

அந்தி மயங்கிய வான விதானம்
அன்னை நடம்செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம்பவளம் பொழி பாரோ
தேம்பொழிலாம் இது செய்தவ யாரோ
எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுத்தாள்
மந்திரவேத மயப் பொருளானாள்
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

மாணிக்கம்

காணக் கிடையாக் கதியானவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலிவானவளே
புனையக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகதம்

மரகதவடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
ச்ருதி ஜதிலயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழுமம்
அவரருள் பெறஅருளமுதே சரணம்
வரநவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தியெனத்
திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான்நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விலாச வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவீ சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே

வைடூரியம்

வலையொத்த வினை கலையொத்தமனம்
மருளப் பறையாறொலி யொத்தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலைவற் றசைவற்று அநுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூர்யமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

பயன்:

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்ன மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய்த் திகழ்வார் அவரே
ஜெய சிவரமணீ குருகுஹ ஜனனீ
ஜெய மனவனஹரிணீ
ஜெயஓம் ஸ்ரீ மாதா மாதா ஜெய ஜெய ஜெகன்மாதா
மாதா ஜெயஓம் ஸ்ரீ மாதா மாதா ஜெய ஜெய ஜெகன்மாதா சரணம் சரணம்....!!!!!

--
Kindly visit http://amrithavarshini.proboards.com/ for reading more articles.
 
எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே
தாயுமானவர் [பராபரக்கண்ணி – 221]
---
You received this message because you are subscribed to the Google Groups "Amritha Vahini" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to amrithavahin...@googlegroups.com.
To post to this group, send email to amrith...@googlegroups.com.
Visit this group at https://groups.google.com/group/amrithavahini.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages