|
சத்குருவுடன் ஈஷா யோகா |
|
டிசம்பர் 17-18, 2016 |
|
|
நமஸ்காரம்,
சத்குரு அவர்கள் தன்னையுணர்ந்த ஞானியாக, யோகியாக மட்டுமல்லாமல், தொலைநோக்கு பார்வை கொண்ட நிகழ்காலத்தில் வாழும் ஒரு ஒப்பற்ற குருவாகத் திகழ்கிறார். ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக அணுகும் சத்குரு அவர்கள் வருகின்ற டிசம்பர் 17, 18 தேதிகளில், கோவை ஈஷா யோக மையத்தில் "சத்குருவுடன் ஈஷா யோகா" என்கிற யோக வகுப்பினை (தமிழில்) நடத்தவிருக்கிறார்.
ஆன்மீக சூழல்நிறைந்த ஈஷா மையத்தில், இந்த வகுப்பில் பங்கேற்பதன் மூலம், ஒரு மனிதருக்குள் அளப்பரிய பல சாத்தியங்கள் திறக்கின்றன. ஒரு ஞானமடைந்த குருவிடமிருந்து, ஆற்றல் வாய்ந்த யோகப் பயிற்சிக்கு தீட்சை பெறும் அரிய வாய்ப்பு இதன்மூலம் ஒருவருக்கு கிடைக்கிறது. சத்குரு அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட புனிதமான ஆதியோகி ஆலயத்தில் இந்நிகழ்ச்சி நடைபெறும். |
|
|
யோகா எனும் அற்புத கருவி! |
|
‘யோகா என்றால் உடலை வளைப்பதோ அல்லது ஒரு உடற்பயிற்சியோ அல்ல! யோகா, மிக உயர்ந்த ஒரு பரிமாணத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு அற்புத கருவி. யோகா ஒரு மனிதருடைய உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி நிலைகளில் அவருடைய முழுமையான நல்வாழ்விற்கு வழிவகுக்கிறது. |
|
சத்குரு வழங்கும் ஈஷா யோகா வகுப்புகளில் சக்திவாய்ந்த "ஷாம்பவி மஹாமுத்ரா" எனும் யோகப்பயிற்சி கற்றுத் தரப்படுகிறது. மிக மிக எளிமையான ஒரு பயிற்சி என்றாலும் இது ஒருவருக்கு கொடுக்கும் பலன்களும், தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் உடலில், மனதில் ஏற்படும் மாற்றங்களும் மகத்தானவை. |
|
ஷாம்பவி மஹாமுத்ரா பயிற்சி செய்வதால் உண்டாகும் பலன்கள்! |
|
- உற்பத்தி திறன் & செயல்திறன் மேம்படுவதோடு, கற்பனை வளம் கூடுகிறது
- மனக்குவிப்பு திறன், நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது.
- மன அழுத்தம் இல்லாத, ஆனந்தமான வாழ்க்கை வசப்படுகிறது.
- உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியான தடைகளை தகர்க்க துணைநிற்கிறது.
- நாட்பட்ட நோய்கள் குணமடைகின்றன.
|
|
|
|