யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது?

3,236 views
Skip to first unread message

sundar

unread,
Nov 2, 2009, 4:02:56 AM11/2/09
to கடவுள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து இந்த பூமியில் வாழ்ந்த காலத்தில் அனேக ஜீவ
வார்த்தைகளை பேசினார் பேசிய அவரே "என் வார்த்தைகளே கடைசி நாளில் நியாயம்
தீர்க்கும்" (யோவான்12-48) என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மட்டுமல்லாமல் "வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் என்
வார்த்தைகள் ஒழிந்து போகாது" (மத் 24-35) என்று சொல்லி, வானத்தையும்
பூமியும் விட அவர் வார்த்தைகள நிலையானது என்பதை தெளிவாக விளக்கி
சொல்லிவிட்டார்.

ஆனால் இன்று மனுஷர்கள், நாளை நியாயம்தீர்க்கபோகும் அவருடைய வார்த்தைகள்
யூதருக்கு சொன்னது என்று மிக சுலபமாக தள்ளிவிட்டு, அவருடைய வார்த்தைகளை
விட நிரூபங்களில் உள்ள வார்த்தைகளுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கின்றனர் அதுதான் தேவனுடைய வார்த்தைகள் என்ற அளவுக்கு
உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் இயேசுவின் நியாயம் தீர்க்கபோகும்
வார்த்தைகள் என்ன சொல்கின்றன என்பதை விளங்கவேண்டிய அவசியம் இருப்பதால்
இந்த செய்தியை இங்கு பதிக்கிறேன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்து ஒருவன் பரலோக் ராஜ்யத்தை அடைய ஆவியில்
எளிமை உள்ளவனாக, இரக்கம் உடையவனாக, நீதியுள்ளவனாக, அன்புள்ளவனாக, தாழ்மை
நிறைந்தவனாக, உலக பொருட்கள்மேல் பற்றில்லாதவனாக, உள்ளதை உள்ளதென்று
பேசுபவனாக, நாளையை பற்றி கவலைபடாதவனாக, தனக்குள்ளவற்றை பிறருக்கு விட்டு
கொடுப்பவனாக, மனத்தாலும் பாவம் செய்யாதவனாக இருக்க வேண்டும் போன்ற
பல்வேறு கற்ப்பனைகளை சொல்லி, "என்னில் அன்பை இருக்கிறவன் இவைகளை
கைகொள்வான்" என்று கூறினார்.

இதை எத்தனைபேர் கைகொள்கிரார்களோ தெரியவில்லை! அனால் "யார் பரலோக ராஜ்யம்
போக முடியாது" என்பதற்கு மட்டும் மூன்றே மூன்று வசனங்களை அவர்
குறிப்பிட்டுள்ளார். அவற்றை மட்டும் நாம் இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

1. நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில்
பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்:18-31)

2. வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்: 5-20)

3. பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே
என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)

இவ்வசனங்கள் மூலம் யாரெல்லாம் பரலோக ராஜ்யம் போகமுடியாது என்று இயேசு மிக
தெளிவாக சொல்லிவிட்டார். இவ்வசனங்களை சற்று விளக்கமாக பார்க்கலாம்.

தொடரும்...

sundar

unread,
Nov 3, 2009, 8:37:47 AM11/3/09
to கடவுள்
Richard Felson to me
show details 4:03 pm (2 hours ago)

பரலோக ராஜ்ஜியம் பரலோகத்தில்தான் உள்ளது என்று உங்களுக்கு யார்
கற்பித்தார்களோ தெரியவில்லை. 'உம்முடைய ராஜ்ஜியம் (பூமியில்) வருவதாக'
என்றுதான் ஜெபிக்கச்சொல்லியிருக்கிறார்.
'சாந்தகுணமுள்ளவர்கள் பூமியை சுதந்தரித்துக்கொள்வார்கள்' பரலோகத்தை அல்ல.
தெளிவாக வேதம் வாசியுங்கள். வேதத்திலுள்ள அனைத்துமே தேவனுடைய
வார்த்தைகள்தான். அதை யார் யாருக்குச் சொன்னார்கள் என்பது
ஆராயும்போதுதான் தெரியும்.
உன்னைப்போல் பிறனை நேசி என்பதுதான் பிரதான கட்டளை. அதை மாத்திரம்
எல்லாரும் செய்தால் போதும்.

முதலில் நீங்கள் 'நுனித்தோலை' அறுத்துவிட்டு பின்பு மற்றவர்களை
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளச் சொல்லுங்கள்.

பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை (தசமபாகம் உட்பட) கைக்கொள்ளச் சொல்கிற
யாருக்கும் கீழ்கண்ட வசனங்கள் சாட்டையடியாக இருக்கும்.

நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கச்சொல்லி
"நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும் பொருட்டாக பக்க வழியாய்
நுழைந்த கள்ள சகோதரர்".கலாத்தியர்2:4

'நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் எந்த மனுஷனும்
நீதிமானாக்கப்படுவதில்லை'16

நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது
வீணாயிருக்குமே.21

'நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும்
கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்'.கலா5:4

"மாமிசத்தின்படி நல்வேஷமாய்க்காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள்
தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை
விருத்தசேதனம் பண்ணீக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள்.கலா6:12

"கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை,
விருத்தசேதனமில்லமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.6:15
Richard Felson

sundar

unread,
Nov 3, 2009, 9:02:12 AM11/3/09
to கடவுள்
Richard wrote
//////பரலோக ராஜ்ஜியம் பரலோகத்தில்தான் உள்ளது என்று உங்களுக்கு யார்

கற்பித்தார்களோ தெரியவில்லை. 'உம்முடைய ராஜ்ஜியம் (பூமியில்) வருவதாக'
என்றுதான் ஜெபிக்கச்சொல்லியிருக்கிறார்.////

பரலோக ராஜ்யம் எங்குள்ளது என்பதுபற்றி நான் எதுவுமே எழுதவில்லையே
சகோதரரே! யாரோ சொல்வதை ஏன் என்மேல் சுமத்துகிறீர்கள்?


Richard Wrote
/////பழைய ஏற்பாட்டின் கட்டளைகளை (தசமபாகம் உட்பட) கைக்கொள்ளச் சொல்கிற
யாருக்கும் கீழ்கண்ட வசனங்கள் சாட்டையடியாக இருக்கும்.////

பவுலின் வார்த்தைகளை சுட்டிகாட்டி நியாயபிரமாணம் தேவையில்லை என்று
வாதிடும் அன்பு சகோதரரே! பவுல் எழுதியுள்ள கீழ்க்கண்ட வசனத்தை
பாருங்கள்

I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்;
வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும்,
சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
10. திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும்,
கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை

இங்கு தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிக்க தகுதியற்றவர்களாக செய்யும்
பாவபட்டியலில் சொல்லப்படும் பல பாவசெயல்கள் நியாபிரமாணத்தில் இருந்து
வந்ததுதான். இதை கொரிந்தியருக்கு மட்டும்தான் எழுதினார் என்று
கூறப்போகிறீர்களா அல்லது உங்களுக்கும் உண்டா? ஒவ்வொரு நிரூபமும்
இன்னாருக்கு இன்னாருக்கு
என்று குறிப்பிடப்பட்டுள்ளது

1. இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி
பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும்,
கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

1. தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய
பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற
பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது:

இதெல்லாம் அந்தந்த பட்டணத்தில் உள்ளவர்களுக்கு மட்டும்தான்
எழுதப்பட்டதா?

பவுல் கூறும் நியாயபிரமாணம் ஒழிந்தது என்ற கருத்து பலியிடுதல் ஆசாரிப்பு
கூடாரம் அமைத்தலை பற்றியதை மட்டுமே மற்றபடி எந்த கட்டளைகளையோ
நீதிநியாயங்களையோ அவர் ஒதுக்கவில்லை. பவுல் சரியாகத்தான் எழுதியுள்ளார்!
ஆனால் பாவத்தை விட்டொழிக்க மனதில்லாத மனிதர்கள் அவர் வசனங்கள
தங்களுக்கு ஏற்றார்போல புரட்டி சொல்லும் சாக்குபோக்குதான் தேவனுடைய
கற்பனைகள் வேண்டாம் என்று தள்ளுவது.

ஓசியா 8:12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்;
அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
மல்கியா 2:9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப்
பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும்
அற்பரும் நீசருமாக்கினேன்.

என்று கர்த்தர் புலம்புவது, வேதத்தை கைகொள்ளாமல் அதைவிட்டு விலகும்
மனிதர்களை பார்த்துதான்.

கர்த்தரின் வாத்தையையும் தள்ளுகிறீர்கள் இயேசுவின் வார்த்தைகளையும்
தள்ளுகிறீர்கள் அது எங்களுக்கு சொல்லவில்ல என்கிறீர்கள் நல்லது!
நிரூபமும் உங்களுக்கு அல்ல, அது அந்தந்த சபைக்கு எழுதப்பட்டது அதைமட்டும்
ஏன் உங்களுக்கு என்று எடுத்துகோள்கிறீர்கள்?
SUNDAR

sundar

unread,
Dec 2, 2009, 3:03:53 AM12/2/09
to கடவுள்
இயேசு கிறிஸ்த்துவே பல வசனங்களை சொல்லி அப்படி செய்யாதவர்கள்
பரலோகராஜ்யத்தில்
பிரவேசிக்க முடியாது என்று சொன்ன பிறகு அதை செல்லாமல் போகபண்ணும் பல
சிஷ்யர்கள்
இருப்பது ஆச்சர்யம்தான்.

அவர்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் இயேசு என்ன சொல்கிறார் என்பதை நாம்
ஆராய்வோம்!

நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை (LITTLE CHILD) போல ஆகாவிட்டால் பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்: 18:3)

ஒருவர் ிள்ளைகளை போல ஆகவேண்டுமென்றால், பிள்ளைகளின் தனிப்பட்ட
குணம் என்னவென்பதை நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இல்லையேல்
அவர்களைபோல மாறுவது கடினம். சிறு பிள்ளைகளின் தனிப்பட்ட குணம்
சிலவற்றை சற்று விளக்கி கூறுகிறேன், நம்மை அத்தோடு ஒப்பிட்டு பார்த்து
உண்மை அறியலாமே!

எந்த குழந்தையாவது எதை உடுப்பது, என்ன சாப்பிடுவது, எங்கு விளையாடுவது
என்று நினைத்து கவலைப்பட்டுக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறோமா?
இருக்கவே
முடியாது! பொதுவாக குழந்தைகள் எதைபற்றியும் சிந்தித்து கவலைப்படாது.
எல்லாவற்றையும் கவனிக்க நமது பெற்றோர் இருக்கின்றனர் என்ற தைரியத்தில்
அது எப்பொழுதும் கவலையற்று இருக்கும்.

அதுபோல் நாமும் நம் தேவைகளைஎல்லாம் ஏற்ற நேரத்தில் கவனிக்க நமது
பரமதகப்பன் இருக்கிறார் என்று நிம்மதியாக இருக்கலாமே! நாளைய தேவைக்காக,
சொந்த வீட்டுக்காக, மகன் மகள் திருமணத்துக்காக, நல்ல வேலைக்காக, நல்ல
வாழ்க்கைக்காக கவலைபட்டு கொண்டு இருக்காமல் ஸ்தோத்திரத்தொடே எல்லா
வேண்டுதலையும் அவர் சமூகத்தில் வைத்துவிட்டு குழந்தையை போல கவலயற்றி வாழ
முயற்சிக்கலாமே!


எந்த குழந்தையும் தனக்கென்று ஒரு திட்டத்தையோ, அலது பட்ஜெட்டயோ
தீட்டுவது
இல்லை. தாய் தகப்பனின் திட்டமே அவர்களை வழிநடத்தும்! குழந்த்தைகள்தனது
ல்லா தேவைக்கும் தனது தாய் தகப்பனையே நோக்கி பார்க்கும்.

அதுபோல் நாமும் நமக்கென்று திட்டங்களை தீட்டாமல், எதிர்காலம் பற்றி
வரைபடம்
போடாமல், பரம தகப்பனின் வழியில் நம்மை ஒப்புகொடுத்து, அவர் திட்டமே
நம்முடைய திட்டமாகவும், அவர் எதிர்ப்பார்ப்பே நம்முடைய எதிர்ப்பாகவும்,
அவர் சித்தமே நம்முடைய சித்தமாகவும் இந்த பூமியில் ஒரு பரதேசி போலவும்
வாழ முயற்சிக்கலாமே!


சிறு பிள்ளைகள் தங்கள் மனதில் உள்ளதை அப்படியே பெசிவிடுவதை எல்லோரும்
பார்க்க முடியும். உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றும் பேசும் மாய்மால
பேச்சு குழந்தைகளின்டம் கிடையாது. அப்படி அவைகளுக்கு பேசவும் தெரியாது.
இதனால் பெரியவர்கள் அனேக நேரங்களில் பிரச்சனைக்குள்ளாகவும்
நேரிடுவதுண்டு. வெள்ளை மனம் கள்ளமில்லாத
உள்ளம் குழந்தைகளிடம் உண்டு.

அதுபோல் நாமும் யாருக்கோ எதற்கோ பயந்துகொண்டு உள்ளத்திலுள்ள காரியங்களை
மறக்காமல், நம் சொந்த கருத்தைகூட பிறருக்கு பயந்துகொண்டு நேர்த்தியாக
சொல்ல விரும்பாமல், பிரறோடு சேர்ந்து ஒத்த வேஷம் போட முயலாமல். உள்ளொன்று
வைத்து புறமொன்று பேசாமல், ஒரு குழந்தையை போல, உள்ளதை உள்ளதென்றும்
இல்லதை இல்லதென்றும் சொல்ல முயற்சிக்கலாமே!


பொதுவாக குழந்தைகளின் ஆசை வட்டம் மிக குறுகியது. ஒரு சில பொருட்கள் வாஙகி
கொடுத்தாலே உடனே திருப்தியாகிவிடும். அவைகள் பணத்தையும் உலக
பொருட்களையும் நோக்கி ஒடுவதுஇல்லை. இன்று அனேக மனிதர்களை மீள முடியாமல்
காட்டி வைத்திருக்கம் பணத்தின் பதிப்பு குழந்தைகளைக்கு தெரியாது எனவே
அவைகள் பணத்தை மதித்து அதற்க்காக எந்த தவறையும் செய்ய துணியாது. அதுபோல்
நாமும் நமது ஆசை வட்டத்தை சுருக்கலாமே! தான் இருக்கும் நிலையில் மன
ரம்யமாக வாழ தெரியாதவன் எவ்வளவு அதிகமாக கிடைத்தாலும் நிம்மதியாக வாழ
முடியாது என்பது எனது கருத்து. நாமும் உலக மக்களைப்போல பணத்தையே மேலாக
மதித்து அதை சேர்ப்பதிலேயே குறியாக இருக்காமல், நாம் பணத்தை ஆள்கிறோமா
அல்லது பணம் நம்மை ஆள்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து ஒரு
குழந்தைகளை போல நம்மை மாற்ற முயலலாமே!


இன்று உலகில் எல்லோரும் தான் செய்யும் செயலுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது
என்று ஆராய்ந்து பார்ப்பதில் மிக கவனமாக இருப்பதை பார்க்க முடியும்.
கடவுளை கும்பிடுவதில்
கூட தனக்கு லாபம் என்ன என்பதை நோக்கமாக கொண்டே ஆண்டவரை தேடி வரும்
அநேகரை பார்க்க முடியும். ஆண்டவர் பெயரை சொல்லியே தனது வாழ்க்கையை
மேன்படுத்திகொண்ட பலரையும் இன்று உலகில் பார்க்க முடியும். ஆனால்
குழந்தைகள்
தான் செய்யும் செயலுக்கு ஆதாயம் தேடுவது இல்லை அதுபோல் நாமும் செய்யும்
செயலின் பலனை எதிர்பார்க்காமல் அதை ஆண்டவருக்கென்று செய்ய
முயரச்சிக்கலாமே!

ஒரு சிறு குழந்தையை எவ்வளவு கண்டித்தாலும் சிறிது நேரத்தில்
எல்லாவற்றையும் மறந்துவிடும். கசப்பு, இறுமாப்பு, வஞ்சம், பொறமை,
அகங்காரம் போன்ற குணங்களை சிறு பிள்ளைகளிடம் பார்ப்பது அரிது. அதுபோல்,
நாமும் நமக்கு தீங்கு செய்தவர்களையும்
மன்னித்து, நம்மை பற்றி தீமையை பேசியவர்களை ஆசீர்வதித்து, கசப்பு,
வைராக்கியம், அகம்பாவம், தற்பெருமை போன்ற சாத்தானின் குணங்களை ஒதுக்கி
முடிந்த அளவு எல்லோரோடும் சமாதானமாக வாழ முயற்சிக்கலாமே

இவைகள் எல்லாம் ஒரே நாளில் செய்துவிட கூடிய காரியங்கள் அல்ல! ஆனால்
முயற்சி செய்தால் நிச்சயம் முடியும்! இறைவனை பற்றி வேதத்தை பற்றி
பல்வேறு வார்த்தைகளை சொல்லிக்கொண்டு தகாத செயல்களை செய்துகொண்டிருப்பதை
விட, தனது வாழ்க்கையால் இறைவனை மகிமைபடுத்தி அதன் மூலம் பலருக்கு
இறைவனின் உயர்ந்த குணங்களை வெளிப்படுத்துவதுதான் பலரின் மனதில் பாதிப்பை
ஏற்ப்படுத்தும்
என்பது நிதர்சனமான உண்மை!
SUNDAR

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

sundar

unread,
Dec 2, 2009, 10:10:18 AM12/2/09
to கடவுள்
Gnana Piragasam to me
show details 7:37 PM (0 minutes ago)

சிறுபிள்ளைகளைப்போல் ஆதல் என்றால் என்ன என்பது பற்றிய சகோ.சுந்தர்
அவர்களின் கட்டுரை அருமை. இதைப்போல் வேதபாரகர் பரிசேயரின் நீதியைவிட அதிக
நீதி இல்லாதவர்கள் பரலோகராஜ்யம் பிரவேசிக்க மாட்டார்கள் எனும்
வசனத்திற்கும் விளக்கம் தரும்படி சகோ.சுந்தர் அவர்களிடம் வேண்டுகிறேன்.

Gnana Piragasam

sundar

unread,
Dec 3, 2009, 8:54:28 AM12/3/09
to கடவுள்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவின் வாயில் இருந்து புறப்பட்ட உலகை நியாயம்
தீர்க்கப்போகும் வார்த்தைகளில் "யார் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க
முடியாது" என்பது சம்பத்தப்பட்ட இரண்டாவது வார்த்தை:

"வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி
அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள்(மத்:5:20)

வேதபாரகர் பரிசேயர் என்பவர்கள் ஆண்டவராகிய இயேசு வாழ்ந்த காலத்தில்
வாழ்ந்த பழைய ஏற்ப்பட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு தாங்கள்
அனைத்தும் அறிந்தவர்கள் என்ற நோக்கில் போதனை செய்த பெரிய மனிதர்கள் என்று
அறிய முடிகிறது.

இவர்களை பற்றி ஆண்டவர் பல இடங்களில் "வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை என்பதில்
ஆரம்பித்து நீங்கள் பிசாசின் பிள்ளைகள் எனவே உங்கள் தகப்பனின் கிரியையை
செய்ய விருப்பமாயிருக்கிறீர்கள் என்பது வரை" மிக அதிகமான விமர்சனங்களை
கூறி கடிந்துகொண்டுள்ளர். கடைசியில் ஆண்டவரை மரண ஆக்கினைக்குள்
தீர்த்தவர்களும் அந்த
மகா கணம் பொருந்திய வேதபாரகர் பரிசேயர்கள் தான்! (மத் 20:) அப்படி
அவர்களை கடுமையாக கடிந்து கொண்ட ஆண்டவர் அவர்களை கடிந்துகொள்ளும்போது
அனைவருக்கும் போதனையாக சொன்ன வார்த்தைதான் நான் தலைப்பாக எடுத்துக்கொண்ட
மத்தேயு 5:20.

வேதபாரகர் பரிசேயரை விட நாம் அதிக நீதி செய்யவேண்டுமென்றால் முதலில்
அவர்களின் நீதி என்ன என்பதை நாம் அறிய வேண்டும். எனவே என்னால் முடிந்தவரை
அவர்களின் நீதி பற்றி விளக்குகிறேன்.
.
1. அவர்கள் வேத வாக்கியங்களை நன்றாக அறிந்திருந்தனர்.

வேதபாரகரும் பரிசேயரும் வேதவாக்கியங்களை நன்றாக அறிந்து வைத்திருந்தனர்
என்பதை அவர்கள் மோசேயின் நியமனங்களை சுட்டி காட்டியதிலும், ஆபிரகாம்
பற்றி மோசே பற்றி கேள்விகள் எழுப்பியதிளுமிருந்து அறிந்துகொள்ள முடியும்.
அதுபோல் நாமும் நம் கையில் உள்ள வேதாகமத்தில் முழுமையாக பலமுறை படித்து,
ஆண்டவர் வேதத்தின் மூலம் நமக்கு என்ன சொல்கிறார் எதை செய்யலாம் எவற்றை
செய்யக்கூடாது என்ற பொதுவான சத்தியத்தை அறியவில்லை என்றால் ஒருகாலும்
அவர்களை விட அதிக நீதி செய்ய முடியாது. எனவே முதலில் நேரம் கிடைக்கும்
போதெல்லாம் நம் கையில் உள்ள பரிசுத்த வேதாகமத்தை தொடக்கம் முதல்
முடிவுவரை கிரமமாக படித்து ஆண்டவரின் மனவிருப்பம் என்ன என்பதை முதலில்
அறியவேண்டும் அதை அறிவயும் வாஞ்சை வர வேண்டும். அரைகுறை படிப்பு,
அங்கொன்றும் இங்கொன்றும் படிப்பு போன்றவற்றின் மூலம் வேதத்தின் உண்மை
செய்தியை அறிவது கடினம்!
.
2. அவர்கள் வேத வார்த்தைகளின்மேல் வைராக்கியம் உள்ளவர்கள்.

ஆம்! வேதபாரகரும் பரிசேயரும் வேத வாக்கியங்களின் மேல் மிக அதிக
வைராக்கியம் உள்ளவர்களாக இருந்தனர் எனவேதான் ஆண்டவராகிய இயேசு அதில்
சிறிய மாற்றம் செய்வதைக்கூட அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை! முக்கியமாக
ஒய்வு நாளில் ஆண்டவர் சுகமாக்கியதைகூட அவர்களால் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. நாமும் நமது கையில் உள்ளவேத வார்த்ததைகள் மீது
அறிவுக்கேதுவான வைராக்கியம் உள்ளவர்களாக இருப்பது நல்லது. நமது
இஸ்டத்துக்கு ஏற்றாற்போல் வேத வார்த்தைகளை புரட்டாமல், நமக்கு சாதகமாக
இருக்கு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு, எதிராக இருக்கும் வசனங்களை
கண்டுகொள்ளாமல் விடுதல் போன்ற புரட்டுகள் இல்லமால், வேத வார்த்தைகளுக்காக
எதையும் இழக்க தயாராக இருக்கும் ஒரு வைராக்கியத்துடன் வாழ்கிறோமா? என்று
நம்மை நாமே ஆராய்வது நல்லது!
.
3. அவர்கள் பழைய ஏற்ப்பாட்டில் தேவனிட்ட கட்டளைகளை சரியாக கைகொண்டனர்!

"மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள்
ஒற்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி," மேற்கண்ட
வார்த்தைகளை ஆண்டவர் வேதபாரகர்களை நோக்கி சொல்வதன் மூலம் அவர்கள் பழைய
ஏற்ப்பட்டு கட்டளையாகிய விருத்த சேதனம் பண்ணுதல், தசமபாகம் செலுத்துதல்
போன்ற கட்டளைகளை சரியாக கைகொண்டனர் என்பதை அறியமுடியும். நாம் எப்படி?
புதிய ஏற்ப்பாட்டில் ஆண்டவராகிய
இயேசு சொன்ன போதனைகளில் எத்தனை போதனைகளை நமது வாழ்க்கையில் கைகொள்கிறோம்?
என்மேல் அன்பாயிருக்கிரவன் என் வார்த்தைகளை கைகொள்வான் என்று இயேசு
தெளிவாக சொல்லியிருக்கிறாரே! அவர் கட்டளையிட்டதுபோல் பிறருக்கு சுவிசேஷம்
அறிவிக்கிறோமா? அல்லது நான் நரகத்துக்கு தப்பித்துவிட்டேன் என்று சுய
திருப்தி அடைந்துவிட்டு சும்மா இருக்கிறோமா? ஆராய்ந்து பார்ப்பது
நல்லது.
.
இப்படி வேதபாரகரும் பரிசேயரும் தேவனுடைய வார்த்தைகளை நன்றாக அறிந்து,
அதன்மேல் வைராக்கியமாய் இருந்து, அவற்றை கைக்கொண்டு நடப்பதெல்லாம்
சாதாரண
நீதி என்று இயேசு சொல்லிவிட்டார் ஏனெனில் அவர்களைவிட நம்மிடம் இயேசு அதிக
நீதியை எதிர்பார்க்கிறார். உங்கள் நீதி அவர்கள் நீதியைவிட அதிகமாக
இருக்கவேண்டும் இல்லையென்றால் நீங்கள் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க
முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்

சரி இப்பொழுது வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத விஷேசித்தவைகள் எது என்று
இயேசு குறிப்பிடார் என்பதை இங்கு பார்க்கலாம்

நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும்
இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும்
செய்யவேண்டும் அவைகளையும் விடாதிருக்கவேண்டும். (மத்:23)

நீதி, விசுவாசம், இரக்கம் இவை மூன்றும் வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத
விசேஷித்தவைகள் என்று இயேசு குறிப்பிட்டுள்ளார் அவற்றை பற்றி சற்று
ஆராய்வோம்.
.
நீதி:

நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; (சங்:89:14)
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.(சங் 97:2)
தேவனுடைய சினகசானத்தின் ஆதாரமே நீதியும் நியாயய்மும்தான் என்று
சங்கீதக்காரன் இருமுறை சொல்கிறான். எனவேதான் கர்த்தர் வேதத்தில் அனேக
இடங்களில் "நீதியாய் நடவுங்கள்" "நீதி செய்ய படியுங்கள்" "நீதியும்
நியாயமும் செய்யுங்கள்" (நீதி 29:3,எரே:22:3) என்று திரும்ப திரும்ப
சொல்கிறார்.

உண்மையான நீதி எப்படிப்பட்டது தனக்கு லாபமா நட்டமா, தன் பிள்ளையா பிறர்
பிள்ளையா? தன் ஜாதியா பிற ஜாதியா? தன் மதமா, தன் சபையா, தனக்கு
வேண்டியவரா? என்றெல்லாம் ஆராய்ந்து நியாயத்தை புரட்டாமல் பணத்தையும்
அந்தஸ்த்தையும் அழகையும் பார்த்து மயங்காமல் இவற்றுக்கெல்லாம்
அப்பாற்ப்பட்டு, நியாயமாக செயல்படுவதுதான் நீதியாக
நடப்பது ஆகும். வேத பாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த நீதி
நம்மிடம் உள்ளதா என்று ஆராய்ந்து பார்ப்போம்.
.
இரக்கம்!

"நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய
இரக்கங்களுக்கு முடிவில்லை" (புல:3:22) என்று வேதம் சொல்கிறது.
"இரக்கப்ப்ட்டுகிறவர் பாக்கியவான்கள்
அவர்கள் இரக்கம் பெறுவார்கள்" என்று இயேசு கூறியுள்ளார். உண்மையான
இரக்கம் எப்படிப்பட்டது நல்ல சமாரியன் கதையில் வரும் சமாரியனை பாருங்கள்,
யாரோ ஒரு அறியாதவனுக்காக தன் பணத்தையும் நேரத்தையும் செலவழிக்க
முன்வந்தான். ஆண்டவரின் இரக்கத்தை பாருங்கள் நாம் பாவி என்று
அறிந்திருந்தும் நமக்காக ஜீவனை கொடுக்க முன்வந்தார். ஆனால் நாம் என்ன
செய்கிறோம்? நம்மிடம் தேவையுடன் வரும் ஜனங்களுக்கு நம்மாலியன்ற உதவி
செய்கிறோமா? உதவி செய்ய முடியாவிட்டாலும் நமது முடியாமைக்காக
வருந்துகிறோமா? அல்லது "தனக்கு போகத்தான் தானம்" என்ற நல்ல உலக
கோட்பாடில் வாழ்கிறோமா? என் காதுகள் கேட்க ஒரு பெரிய சபையின் பாஸ்டர்
"என்னை யாராவது
தேடி வந்துவிட்டால் ஏதாவது உதவி கேட்டுவிடுவார்களோ என்று பயமாக
இருக்கிறது" என்ற சொன்ன வார்த்தையை இன்னும் என்னால் ஜீரணிக்க
முடியவில்லை! என்னை பொறுத்தவரை என்னிடம் அனுப்பப்படும் ஒவ்வொருவரும்
ஆண்டவரால் அனுப்பபடுகிரவராகவே நான் கருதுகிறேன். வருபவர் மோசமானவர் என்று
நாம் அறியாத பட்சத்தில், நமக்கு உதவே செய்ய திராணி இருந்தும்
நிராகரிப்பது சரியான சரியான செயல் அல்ல என்றே கருதுகிறேன். நாம்
என்ன நோக்கத்தோடு உதவி செய்கிறோம் என்பதை வைத்துதான் ஆண்டவர் அதை
அங்கீகரிக்கிராறேயன்றி மற்றபடியல்ல!

இரக்கம் என்பது மஹா பெரியாது! எக்காலத்திலும் யாருக்காகவும் அதவாது
தனக்கு அனேக தீங்குகள் செய்த ஒருவனுக்கு கூட மனமுருகுவதுதான் இரக்கம்!
விபச்சாரம் செய்தவர்களை கல்லெறிந்து ந்து கொல்லவேண்டும் என்று கூடி நின்ற
வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உயர்ந்த இரக்கம் உங்களிடம் உள்ளதா?
என்று நம்மை நாமே ஆராய்வோமாக!
.
விசுவாசம்!

தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆப:2:4)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.(கலா 3:11)

இந்த வேத வார்த்தைகளை ஆராய்ந்து பார்ப்போமானால் இங்கு "விசுவாசித்தவர்கள்
எல்லாம் பிழைப்பார்கள்" என்று எழுதவில்லை. விசுவாசத்தோடு நீதிமானாய்
இருப்பவர்கள்தான் பிழைப்பார்கள் என்றே கூறுகிறது. அதாவது நீதிமானாய்
இருக்கிறவன் தன் விசுவாசத்தால் பிழைப்பன் என்பதே சரியான பொருள் என்று
நான் கருதுகிறேன்.

இறைவன் என்று ஒருவர் இருக்கிறார், இயேசு நமக்காக மரித்தார், ஆண்டவர்
வார்த்தைகள் சத்யமானது, அவர் சொனதை செய்வார் என்றெல்லாம் விசுவாசம் இன்று
கிறிஸ்த்தவர்கள் எல்லோருடமும் உள்ளது தேவன் ஒருவர் உண்டென்று
விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும்
விசுவாசித்து, நடுங்குகின்றன. (யாக:2:19) அது தேவைதான்!
ஆனால் ஆனால் கிரியை இல்லாத வெறும் விசுவாசத்தால் எந்த பயனும் இல்லை
என்பதை யாக்கோபு தன் நிருபத்தில் திருப திரும்ப சொல்வதை நாம் நிச்சயம்
கவனிக்க வேண்டும்.
வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ?
(யாக:2:20)
ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும்
செத்ததாயிருக்கிறது. (யாக 2:26)

இன்றைய காலகட்டங்களில் விசுவாசிகளும் பாஸ்டர்களும் எவ்வகையான விசுவாசம்
வைத்துள்ளனர் என்றே புரியவில்லை! எதாவது ஒரு சிறு தலைவலி வந்தால் கூட
உடனே உலகிலேயே பெரியவியாதி எதுவோ அது வந்திருக்குமோ என்று பயப்படுவதையும்
தடுமாறுவதையும் பலமுறை பார்க்க முடிகிறது. அவர்கள் பயந்தது போலவே
மிகபெரிய வியாதிகள் அவர்களை தாக்குகிறது. இது ஏன? விசுவாசமின்மை அல்லவா?
தேவன் மேலுள்ள விசுவாசம் எங்கே போனது? எதுவும் புரியவில்லை. பயம்
இருக்கும் இடத்தில் விசுவாசம் இல்லை! அசைக்க முடியாத மிக உயர்ந்த
விசுவாசந்த்தை ஆண்டவர் ஒருவரால் மட்டுமே தரமுடியும். அதை அடைய நாம் அவர்
சித்தப்படி வாழ வேண்டும். அவருக்கு முழுமையாக கீழ்படிய வேண்டும்
அப்பொழுது மட்டுமே வேதபாரகர் பரிசேயரிடம் இல்லாத அந்த உன்னத விசுவாத்தை
நாம் பெறமுடியும்.
.
என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவா 15:5) என்று
நமக்காக
பரிதபித்து, ஜீவனை கொடுத்து ஆண்டவர் பெற்றுதந்துள்ள பரிசுத்த ஆவியின்
பெலத்துடன் இன்றே முயற்சி செய்வோம் பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கும் உன்னத
நிலயை
அடைவோம்!

SUNDAR

anbu57

unread,
Dec 10, 2009, 10:03:47 AM12/10/09
to கடவுள்
வேதபாரக பரிசேயரின் நீதியைக் காட்டிலும் அதிக நீதி பற்றிய சகோ.சுந்தரின்
விளக்கம் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவாக உள்ளது. நன்றி
சகோதரரே!

sundar

unread,
Dec 10, 2009, 10:48:44 PM12/10/09
to கடவுள்


சகோதரர் அன்பு அவர்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!

நான் சிறு கைபிரதியாக அச்சிட்டு வெளியிட்டு பலரிடம் எதிர்ப்பை வாங்கி
கட்டிக்கொண்ட
ஒரு கட்டுரையை பாராட்டியுள்ளீர்கள்

அடுத்ததாக:-


3. பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே
என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)


என்ற வசனத்துக்கும் தாங்கள் தரும் விளக்கம் என்னவென்பதை பதிந்தால்
பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்!

anbu57

unread,
Dec 12, 2009, 8:24:46 PM12/12/09
to கடவுள்
//நான் சிறு கைபிரதியாக அச்சிட்டு வெளியிட்டு பலரிடம் எதிர்ப்பை வாங்கி

கட்டிக்கொண்ட
ஒரு கட்டுரையை பாராட்டியுள்ளீர்கள்.//

கலா. 1:10-ன்படி மனுஷரைப் பிரியப்படுத்தாமல், கர்த்தரையே
பிரியப்படுத்துகிற போதனையைக் கூறுகையில் மனுஷரிடமிருந்து எதிர்ப்பு
வருவது சகஜம்தான்.

//அடுத்ததாக:-


3. பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே
என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)

என்ற வசனத்துக்கும் தாங்கள் தரும் விளக்கம் என்னவென்பதை பதிந்தால்

பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுகிறேன்! //

என்ன சகோதரரே! பொறுப்பை என்னிடம் தந்து விட்டீர்கள்?
உங்கள் விருப்பப்படியே 3-ம் வசனத்திற்கு நான் விளக்கம் தர முயல்கிறேன்.

இந்த 3-ம் வசனம் புரிந்துகொள்வதற்கு மிகமிக எளிமையானதுதான். ஆனால் ஏனோ
சிலர், எளிமையான இவ்வசனத்தைக்கூட தேவையில்லாமல் புரட்டுகின்றனர்.

இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்வதில் பயனில்லை, பிதாவின்
சித்தம் செய்வதே முக்கியமானது என மிகத் தெளிவாக அவ்வசனம்
கூறியுள்ளபோதிலும், யோவான் 6:28,29,39,40

வசனங்களைச் சுட்டிக்காட்டி, நாம் இயேசுவை விசுவாசிப்பதுதான் பிதாவின்
சித்தம் என்பதாக சிலர் கூறுகின்றனர்.

உண்மையில், இயேசுவை விசுவாசித்து அவரை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று
சொல்கிறவர்களுக்காகத்தான் அவ்வசனத்தை இயேசு கூறியுள்ளார். அப்படிப்பட்ட
அவர்களிடம், நீ இயேசுவை

விசுவாசிப்பதுதான் பிதாவின் சித்தம் என்று சொல்வதில் என்ன அர்த்தம்
இருக்கமுடியும்?

இயேசுவை விசுவாசிப்பது அவசியமானதுதான்; ஆனால் அது (செத்த
விசுவாசமாயிராமல்) உயிருள்ளதாக இருக்கவேண்டும். விசுவாசம் உயிருள்ளதாக
இருக்கவேண்டுமெனில், கிரியை இருக்கவேண்டும் என

யாக்கோபு 2:14-26 வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. தன் எஜமானனிடம்
விசுவாசமுள்ள ஒரு வேலைக்காரன் எப்படி தன் எஜமான் சொல்வதற்கெல்லாம்
கீழ்ப்படிவானோ அதேபிரகாரமாக,

தேவனிடம்/இயேசுவிடம் விசுவாசமுள்ளவர்களாகிய நாம் அவர்களின்
கற்பனைகளுக்குக் கீழ்ப்படியவேண்டும்.

பிதாவின் வசனங்களைத்தான் இயேசு கூறியுள்ளார் (யோவான் 7:16; 14:24). எனவே
பிதா தாமே நேரடியாகச் சொன்ன போதனைகள் மற்றும் இயேசுவின் மூலமாகச் சொன்ன
போதனைகள் (உ-ம்: மத்தேயு 5-7

அதிகாரங்கள்) ஆகியவற்றின்படி நடப்பதுதான் பிதாவின் சித்தப்படி
நடப்பதாகும்.

இயேசுவை விசுவாசிக்கிற நாம், அவரை நோக்கி: கர்த்தாவே கர்த்தாவே எனச்
சொல்லக்கூட அவசியமில்லை என்பதைத்தான் மத்தேயு 7:21-ல் இயேசு தெளிவாகக்
கூறியுள்ளார். ஆனால் இன்றைய விசுவாசிகள்

கர்த்தாவே கர்த்தாவே என இயேசுவை நோக்கிச் சொல்வதற்கும் ஒருபடி மேலாக,
அவரை ஆராதனையும் செய்துகொண்டிருக்கின்றனர். இப்படி ஒரு கூட்டம்
பின்னாளில் எழும்பும் என்பதை அறிந்துதான்,

தம்மை நோக்கி: கர்த்தாவே என்று சொல்வதால் பயனில்லை என்பதை அந்நாளிலேயே
இயேசு சொல்லி எச்சரித்துள்ளார். இயேசுவின் அந்த எச்சரிப்பைப்
புரிந்துகொண்டு, அவரை நோக்கி கர்த்தாவே எனக் கூறி

ஆராதிக்க முற்படாமல், அவர் மூலமாக பிதா தந்த வசனங்களுக்குக் கீழ்ப்படிய
முற்படுவோம். இப்படிச் செய்வதுதான் பிதாவின் சித்தப்படி நடப்பதாகும்.

sundar

unread,
Dec 13, 2009, 10:59:44 PM12/13/09
to கடவுள்
///On Dec 13, 6:24 am, anbu57 <gnana...@gmail.com> wrote:

> பிதாவின் வசனங்களைத்தான் இயேசு கூறியுள்ளார் (யோவான் 7:16; 14:24). எனவே
> பிதா தாமே நேரடியாகச் சொன்ன போதனைகள் மற்றும் இயேசுவின் மூலமாகச் சொன்ன
> போதனைகள் (உ-ம்: மத்தேயு 5-7
>
> அதிகாரங்கள்) ஆகியவற்றின்படி நடப்பதுதான் பிதாவின் சித்தப்படி

> நடப்பதாகும்.////


தங்கள் கருத்துகளுக்கு நன்றி!

இயேசுவானவர் இந்த பூமியில் வாழ்ந்தபோது பேசிய எல்லா வார்த்தைகளுமே
பிதாவினுடயதுதான். அவர் சுயமாக எதுவுமே பேசவில்லை.

எனவே தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடப்பதுவே பிதாவின் சித்தம்
செய்வது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்,

சுருக்கமாக சொன்னால் கிறிஸ்த்தவ வாழ்க்கை என்பது இயேசுவை விசுவாசித்து
ஆவியானவரை பெற்று அவர் உதவியுடன் பாவத்தை ஜெயித்து வாழும் ஒரு வாழ்க்கையே
குறிக்கும். இயேசுவை விசுவாசிக்கும் நாம் அவரைப்போல பாவம் செய்யாமல்
வாழ்ந்தால் பலன் உண்டு. இல்லை என்றல் நாம் கிறிஸ்த்தவர்களாக இருப்பதில்
எந்த பயனும் இல்லை. இப்படி கிரிச்த்தவராய் இருந்துகொண்டு பாவத்தை
துணிந்து செய்பவர்களால் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கபடுவதை பல இடங்களில்
காண முடிகிறது.

இயேசுவை விசுவாசிப்பதோ, அந்நிய பாஷையில் பேசுவதோ, சுவிஷ்ஷம் சொல்வதோ,
ஆவியில் நிறைந்தவற்போல் குதிப்பதோ வேறு எந்த செயலுமோ பிசாசினால் செய்ய
முடியாதது அல்ல!
அவன் பொய்யனும் பொய்க்கு பிதாவும், மனுஷ கொலைபாதனுமாய் இருப்பதால்
சத்தியத்துக்கு கீழ்படிந்து பாவம் செய்யாமல் வாழ்வது மட்டுமே பிசாசால்
செய்யமுடியாத காரியம்.

எனவே பிசாசின் கிரியைகளை அழித்து பிதாவின் சித்தம் செய்யவேண்டுமெனில்
தேவனின் வார்த்தைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படியவேண்டும் என்பதே எனது
கருத்து!

அதை செய்ய முடியாதவர்கள் இன்னும் சாத்தானின் பிடியில் இருப்பதால், அதை
நியாயப்படுத்த ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பது இயல்பு. அனால்
நியாயதீர்ப்பின் போது தங்கள் தவறை நிச்சயம் உணர்வார்கள்!


Reply all
Reply to author
Forward
0 new messages