உவர்நீரில்தான் சங்கு பிறக்கும் ஆனால் நல்ல தீர்த்தத்தில் சங்கு
பிறக்கிறது. அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான். இந்த அதிசயம் நடக்கும்
இடம் திருக்கழுக்குன்றம். இங்குள்ள வேதபுரீஸ்வரர் திருக்கோவில். கோவில்
தீர்த்தத்திற்கு சங்கு தீர்த்தம் என்று பெயர். இதில் 12 ஆண்டுகளுக்கு
ஒருமுறை நல்ல சங்குகள் தோன்றுகின்றன. சங்குகள் தோன்றுவதற்கு ஓரிரு
நாட்களுக்கு முன் குளத்தில் உள்ள நீரின் நிறம் பெரிதும் மாறுகிறது. இந்த
நிற மாறுபாட்டை மக்கள் தெரிந்து கொண்டு குளத்தில் துணி துவைப்பது,
குளிப்பது முதலானவற்றை நிறுத்தி விடுவார்கள். சங்கு என்றைக்கு தோன்றி
இருக்கிறதோ அதற்கு முதல் நாள் குளத்தில் ஆயிரக்கணக்கான குமிழ்கள் தோன்றிக்
கொண்டே இருக்கும். மறுநாள் குளத்தின் ஏதாவது ஒரு பகுதியில் சங்குகள்
காணப்படும். அந்தச் சங்குகள் மந்திரமுறைப்படி சேகரிக்கப்படும். மேள
தாளங்கள் முழங்க கோவிலுக்கு கொண்டு சென்று அபிஷாகத்திற்குப்
பயன்படுத்தப்படும்.
நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்:
http://kuppuastro.blogspot.com/