மத்தேயு 5:18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ள
தெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின்
உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன்.
மத்தேயு 19:17 நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள்
என்றார்.
அதே நேரத்தில் பவுல் எழுதிய நிரூபங்களிலுள்ள கீழ்கண்ட வார்த்தைகள்
நியாயப் பிரமாணத்தை கைகொள்வதால் பயனேதும்இல்லை அது மாற்றபட்டுவிட்டது
என்று போதிக்கிறது
ரோமர் 3:20 எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியையினாலே தேவனுக்கு
முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.
எபி: 7:18 முந்தின கட்டளை பயனற்றதுமாய் இருந்தபடியால் மாற்றப்பட்டது
இவ்வாறு இருவேறுபட்ட புதிய ஏற்பாட்டு வசனங்களுக்கிடையில் பழய ஏற்பாட்டு
கற்பனைகள் கைகொள்ளப்பட வேண்டுமா என்பதை அறிவதற்கு முதலில் நியாயப்
பிரமாணம் என்றால் என்னவென்பதை அறிய வேண்டும்!
"நியாயம் என்றால் என்ன? என்பதைசொல்லும் கட்டளைகளும் பிரமாணங்களும்
நியாயபிரமாணம் ஆகும். வேதத்தில் முதல் முதலில் நியாயபிரமாணம் என்ற
வார்த்தை யாத்ராகமம் 16:4 ல் வருகிறது அதில் கர்த்தர் மோசேயை நோக்கி
"...... அதினால் அவர்கள் என் நியாயபிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்க
மாட்டார்களோ என்று அவர்களை சோதிப்பேன்" என்று சொல்லுகிறார் அதன் மூலமும்
அதன் பின்வரும் யோசுவா புத்தகத்தின் பல்வேறு வசனங்கள் மூலமும் (யோசு:
8:30,32,34)"நியாயபிரமாணம் என்பது சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம்
கொடுத்த கட்டளைகளும் பிரமாணங்களும்தான்" என்பதை தெளிவாக புரிந்துகொள்ள
முடியும்.
சீனாய் மலையில் மோசேயிடம் கொடுக்கப்பட்ட இறைவனின் வார்த்தைகளை பொதுவாக
நான்கு பகுதிகளாக பிரிக்கலாம்
கர்த்தரின் பத்து கட்டளைகள்
கர்த்தரின் நீதி நியாயங்கள்
ஆசாரிப்புகூடாரத்துகடுத்த பிரமாணங்கள்
பலியிடுதலுக்கடுத்த பிரமாணங்கள்
இந்த நான்கில் கடைசி இரண்டு பகுதிககளை மட்டுயே இயேசு தன்னுடய பலியின்
மூலம் நிறைவு செய்திருக்கிறார்! அதாவது பலியிடுதல்மற்றும் தேவனை தொழுது
கொள்ளும் அசாரிப்பு கூடாரம் ஆகிய இந்த இரண்டு பிரமாணங்களும் கீழ்கண்ட
வசனத்தின் அடிப்படையில் முடிவுக்கு வருகிறது
ஓசியா 6:6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப் பார்க்கிலும் தேவனை
அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.
யோவான் 4:21 நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும்
பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
இவ்வாறு பலிக்கு பதில் இரக்கமும், ஆசாரிப்பு கூடாரத்தில் மட்டுமல்ல எல்லா
இடங்களில் பிதாவை தொழுது கொள்வதும் நிறைவேறியதன் மூலம் நியாயப்
பிரமாணத்தின் கடைசி இரண்டு பாகம் மட்டுமே முடிவுக்கு வந்துள்ளது. அதையே
பவுல் இவ்வாறு கூறுகிறார்
ரோமர் 10:4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து
நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்
ஒருவேளை பவுல் மொத்த நியாயப்பிரமாணமும் முடிந்துவிட்டது அல்லது
ஒழிக்கபட்டு விட்டது என்ற கருத்தில் எழுதியிருந்தால் அவர் நிச்சயம்
கீழ்கண்ட வார்த்தைகளை எழுதியிருக்க மாட்டார்!
I கொரிந்தியர் 6:9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச்
சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்;
வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும்,
சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும்,
I கொரிந்தியர் 6:10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும்,
உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை
இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனேக பாவங்கள் நியாயப் பிரமாணத்தில்
உள்ள கற்பனைகள் மற்றும் நீதி நியாயங்களில் இருந்தே எடுக்கபட்டுள்ளது
எனவே சுருக்கமாக சொல்வோமாகில், பலியிடுதல், விருத்தசேதனம் பண்ணுதல்,
ஆசாரிப்பு கூடாரம் அமைத்தல் போன்ற சடங்காச்சார பிரமாணங்கள் அனைத்தும்
இயேசுவின் பலியால் முடிவுக்கு வந்துள்ளது ஆனால் அவரது கற்பனைகளையும்
நீதி நியாயங்களும் பற்றி வேதம் சொல்லும்போது
உம்முடைய நீதி நித்திய நீதி! உம்முடைய வேதம் சத்தியம் (சங்: 119:142)
உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம் உம்முடைய நீதி நியாயங்கலெல்லாம்
நித்தியம்(சங்: 119:160)
தேவனின் நீதி நியாயங்கள் எல்லாம் நித்தியமானவை என்பதை மேலேயுள்ள வசனங்கள
தெளிவாக தெரிவிக்கின்றன எனவே அவைகள் ஒருபோதும் முடிந்து போகாது
•தகப்பனையும் தாயையும் சபிப்பவன் கண்டிப்பாக கொலை செய்யப்படவேண்டும் (யாத
21:17)
•சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம் (யாத்:22:18)
•மிருகத்தொடே புனருகிறவன் எவனும் கொலைசெய்யபடவேண்டும் (யாத்:22:19)
•விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காது இருப்பீர்களாக(யாத்:22:22)
இது போல் எத்தனையோ நல்ல நல்ல நீதி நியாயங்களையே தேவன்எழுதி
கொடுத்துள்ளார் யாத்ராகமம் முழுவதும் படித்து பாருங்கள் அவர் கொடுத்த
நீதி நியாயங்கலெல்லாம் மிகவும் சரியானவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்,
அவைகள் ஒருபோதும் முடிந்துபோகாது. மேலும் கர்த்தர் சொன்ன நீதி நியாயங்களை
யாராலும் மாற்றவோ முடிக்கவோ முடியாது. தேவனது வார்த்தை களுக்கு கீழ்படிய
விரும்பாத அநேகர் இவ்வாறு தவறான போதனையை கொடுத்து தாங்கள் பாவத்தில்
தொடர்ந்து வாழ்வதை நியாயப்படுத்தி வருகிரார்களேயன்றி மற்றபடியல்ல.
பண்டிகைஆசாரிப்பு என்பது தேவனின் நீதி நியாயங்கள் என்ற பகுதியில்
வந்தாலும் அதுவும் ஒரு சடங்காச்சார நிகழ்ச்சி போன்றதே! அது போன்ற
பண்டிகைகளில் தேவன் பெரிதாக பிரியப்படவில்லை என்பதை கீழேயுள்ள வசனங்கள்
தெரிவிக்கின்றன!
ஆமோஸ் 5:21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்துவெறுக்கிறேன்; உங்கள்
ஆசரிப்புநாட்களில் எனக்குப் பிரியமில்லை.
ஏசாயா 1:13 நீ ங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும்,
ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன்.
மல்கியா 2:3 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின்
சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும்
தள்ளுபடியாவீர்கள்.
இவ்வாறு தேவன் பண்டிகைகளை வெறுப்பதால் பண்டிகை ஆசாரிப்பு என்பது நமக்கு
எந்த பயனையும் ஏற்ப்படுத்த போவது இல்லை என்பதே எனது கருத்து!
தேவன் அதிகமதிகமாக மனுஷர்களிடம் எதிர்பார்ப்பது என்ன வென்பதை சற்று
ஆராய்ந்தால் பரிசுத்தமும், நீதி நேர்மையும் இரக்கம் மற்றும்
மனத்தாழ்மையும் கீழ்படிதலுமே என்பதை அனேக வசனங்கள் அறியமுடியும்!
லேவியராகமம் 11:45 கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும்
பரிசுத்தராயிருப்பீர்களாக.
ஆமோஸ் 5:24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும்
புரண்டுவரக்கடவது.
மீகா 6:8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்;
நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக
மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில்
கேட்கிறார்.
எனவே தேவன் எதை முக்கியமாக நம்மிடம் இருந்து எதிர்பாகிராரோ அதற்க்கு
முக்கியத்துவம்கொடுத்து மற்ற சடங்காச்சார காரியங்களை விட்டுவிடுவதே புதிய
ஏற்பாட்டு பிரமாணம்! எனவே பழய ஏற்பாட்டு பண்டிகை ஆசாரிப்பு முறைகளுக்கு
நாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை!
ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை பலியால் மனுக்குலத்துக்கு கிடைத்த இன்னொரு
முக்கிய விடுதலையும் உண்டு! அது என்னவெனில், நியாயப்பிரமாண கட்டளைபடி,
தெரியாமல்/அறியாமல் மீறுதலுகுட்பட்டு பாவம் செய்தவர்கள் ஆடு மாடு புறா
போன்ற உயிரிகளை தங்களுக்கு ஈடாக கொடுத்து தாங்கள் செய்த பாவத்தில்
இருந்து விடுதலை பெரும் ஒருநிலை இருந்தது:
லேவி 4:2. நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால்,
ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி,
செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது:
3. ..... தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப்
பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.4. ,,,,,,
கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன். 35..... அதின் கொழுப்பு
முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப் போல,
பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த
பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது
அவனுக்கு மன்னிக்கப்படும்.
ஆனால் துணிகரமாக மரணத்துகேதுவான பாவம் செய்தவனோ தப்புவிக்கபடாமல்
கட்டாயம் கொல்லப்பட வேண்டும் என்றொரு மாறாத பிரமாணமும் இருந்தது.
லேவியராகமம் 24:17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலை
செய்யப்படவேண்டும்.
எண்ணாகமம் 35:31 சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக
நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக் கூடாது; அவன் தப்பாமல்
கொலைசெய்யப்படவேண்டும்.
அங்கு மன்னிப்பே இல்லாது சாக வேண்டும் என்றொரு நிலை இருந்தது. ஆண்டவராகிய
இயேசுவின் பலிக்கு பின்னால் இந்நிலை முற்றிலும் மாறி, கிருபையின்
காலத்தில் எவ்வித கொடூர பாவம் செய்தவனுக்கும்கூட எந்த ஒரு ஆடுமாடு
பலியில்லாமல் முழுமன்னிப்பு கிடைக்கும் நிலை உருவாது. மேலும் நாம்
கிருபையின்கீழ் இருப்பதால் எந்த ஒரு பாவமும் நம்மை மேற்கொள்ள முடியாத
ஒருநிலை உண்டானது!
ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்
கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை
மேற்கொள்ளமாட்டாது.
இந்த வசனம் அநேகரால் தவறாக புரிந்துகொள்ளப்படுவதை தவிர்க்கவும் நான்
நியாயப்பிரமாணத்தை போதிக்கிறேன் என்று என்னைப்பற்றி சிலர் தவறாக
நினைப்பதை தவிர்க்க இதற்க்கான விளக்கத்தை தர விளைகிறேன்.
அதாவது ஆண்டவராகிய இயேசுவின் இரத்தம் மூலம் நமக்கு கிடைத்துள்ள கிருபை
ஒரு புல்லட் ப்ரூப் உடையை போன்று நமக்கு பாதுகாப்பு தரக்கூடியது. அந்த
உடை நமது உடம்பில் இருக்கும்வரை எப்படி ஒரு புல்லட் நம்மை கொள்ள
முடியாதோ, அதேபோல் அந்த கிருபைக்குள் இருக்கும்வரை சாத்தானின் எந்த
ஆயுதமும் அல்லது செய்யும் எந்த பாவமும் ஒரு மனுஷனை மேற்கொள்ள முடியாது.
அதாவது எதிராளியாகிய சாத்தானால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது!
அல்லது எந்த ஒரு பாவமும் நம்மை கிருபையை விட்டு பிரித்துவிட முடியாது!
ஆகினும் நாம் கிருபைக்குள் இருந்துகொண்டு சரீரத்தில் செய்யும்
பாவத்துக்கும்
மீருதலுக்கும் கிடைக்கவேண்டிய தணடனையை அனுபவிக்காமல் ஒருகாலும் தப்பிக்க
முடியாது. நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் தகுந்தபலனை
கிறிஸ்த்துவின் நியாயாசனத்தில் அடையவேண்டியது அவசியம்:
II கொரிந்தியர் 5:10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது
தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின்
நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.
அந்நேரம் நமக்கு கிடைப்பது, முந்தியதைவிட பிந்தியது அதிகம் வேதனையை
தரும்:
எபிரெயர் 10:31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளிலே விழுகிறது பயங்கரமாயிருக்குமே.
எனவேதான் நாம் கிருபைக்குள் இருந்தாலும் நமது இஸ்டத்துக்கு நடக்க
துணியாமல் விழிப்புடன் இருந்து பாவம் செய்யகூடாது என்று வசனம்
போதிக்கிறது!
ரோமர் 6:15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல்
கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
"பாவம்செய்யக்கூடாது" என்று வசனம் சொல்லும் பட்சத்தில், பாவம் எது
என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம் அல்லவா? பாவம் என்பது எது?
ரோமர் 3:20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால்
வருகிறபடியால் I யோவான் 3:4 நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.
இங்கு "முடிந்துபோயின்று" என்று பவுல் சொல்லும் "நியாயப்பிரமாணத்தை"
மீறுவதுதான் பாவம் என்று என் திரும்ப வருகிறது?
காரணம், நியாயப்பிரமாணத்தில் பலியிடுதல் மற்றும் ஆசாரிப்பு
கூடாரத்துக்கடுத்த பிரமாணங்களே முடிந்து போயிற்று! தேவனின் கற்பனைகளும்
கட்டளைகளும் நீதி நியாயங்களும் ஒருநாளும் ஒய்ந்து போகவில்லை! என்பது
இங்கும் தெளிவாகிறது!
நான் சொல்லும் காரியங்களின் பொருள்புரியாமல் பலர் ஏதோ நான் நியாயப்
பிரமாணத்தை
திக்கிறேன் என்று தவறாக நினைக்கிறார்கள். ஆனால் சாத்தானால்
ஆட்கொள்ளப்பட்டு தேவனுக்கு கீழ்படிந்து நடக்க மனதில்லாதவர்கள் தாங்கள்
நிலையை நியாயப்படுத்தவே இவ்வாறு கூரிவருகின்றனரேயன்றி மற்றபடி வசனத்தின்
அடிப்படயில் உண்மை இதுவே!
இன்னும் ஒரு காரியத்தையும் நான் இங்கு சொல்ல விளைகிறேன்! "ஆவியில்
நடப்பவர்கள் நியாயப்பிரமாணத்துக்கு கீழ்பட்டவர்கள் அல்ல அவர்களுக்கு
ஆக்கினை தீர்ப்பில்லை" என்றும் வசனம் சொல்கிறது:
கலாத்தியர் 5:18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள்
நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல.
ரோமர் 8:1 கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி
நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
இந்தவசனத்தின் அடிப்படையில் ஆவியில் நடத்தப்படும் ஒருவன் பாவம் செய்தால்
கூட அவனுக்கு எந்த ஆக்கினை தீர்ப்பும் இல்லை என்று புரியமுடிகிறது இந்த
வசனத்துகான விளக்கங்கள் கீழ்கண்ட திரியில் வாசித்து
தெரிந்துகொள்ளலாம்!
ஆவியில் நடத்தப்படுதலின் மூன்று நிலைகள்!
http://www.lord.activeboard.com/t36245374/topic-36245374/
SUNDAR