பொதுவாக அனேக உத்தம மனுஷர்கள் நேர்மையாகவே பணத்தை சம்பாதிக்க
விரும்புகிறார்கள் என்பதை நாம் அவர்கள் பேச்சில் இருந்து அறியமுடியும்.
அவ்வாறு அநேகர் விரும்பினாலும், சமயத்துக்கு ஏற்றாற்போல் பொய் புரட்டு
ஏமாற்று போன்ற காரியங்களை செய்தாவது பணத்தை சம்பாதித்துவிட்டு,
"இதெல்லாம் இந்த காலத்தில் ஒரு பெரிய தவறான காரியம் அல்ல" என்று தங்களை
தாங்களே சமாதானப்படுத்தி கொள்வதுண்டு.
சிலரோ இவ்விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அதிகம் துணிந்து திருட்டு கொலை
கொள்ளை என்று ஏதாவது ஒரு வழியில் துன்மாக்கமாய் நடந்தாவது யாரையாவது
சாகடித்தாவது பணம் சம்பாதித்துவிட முனைகின்றனர்.
சில அந்தஸ்துள்ள பெரிய மனுஷர்களோ கொஞ்சம் மாறுபட்ட முறையில் மறை முகமாக
சிலரை ஏமாற்றியோ அல்லது பொதுமக்கள் பணம் ஊர்பணம் என்று கொள்ளயடித்தோ
அல்லது லஞ்சம் வாங்குதல் ஊழல் செய்தல் துன்மார்க்கனுக்கு துணைபோதல் போன்ற
காரியங்களில் ஈடுபட்டு பணத்தை கொள்ளையடித்து கோடீஸ்வரராகி
விடுகின்ற்றனர்.
இவர்களின் வழிமுறைகள் வேறாகஇருப்பினும் இவர்கள் எல்லோருடைய மொத்த
நோக்கமும் பணம் பொருளை அதிகம் சம்பாதித்து சமூகத்தில் தன்னுடய
அந்தஸ்த்தை உயர்த்திக்கொள்ளவேண்டும் என்பதே!
ஆனால் நாம் ஆண்டவரோ மனுஷர்களின் எல்லா வழிகளின் மேலும் நோக்கமாக
இருக்கிறார். நமது உத்தமத்தில் இருந்து தவறி ஒரு சிறிய ஏமாற்று வேலை
செய்து பணம் சம்பாதித்தால் கூட அது கர்த்தருக்கு பிடிப்பது இல்லை.
அது நம்முடைய கையில் இருந்து நிச்சயம் ஏதாவது ஒரு வழியில்
பிடுங்கப்படும்.
எசேக்கியேல் 22:13 இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும்,
உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.
என்று சொல்லும் கர்த்தரிடம், ஒவ்வொருவர் வீட்டில் இருக்கும்
பொருட்களிலும் பணத்திலும் எது எங்கு எவ்வாறு சம்பாதிக்கப்பட்டது எந்த
பணத்தை கொண்டு வாங்கப்பட்டது என்ற சரியான கணக்கு அவரிடம் உண்டு.
துன்மார்க்கமாக சம்பாதித்த ஒரே ஒரு பொருள் ஒருவர் வீட்டில் இருக்குமாகின்
அந்த பொருள் அவர் வீட்டில் இருக்கும்வரை அவர் தேவனின் சித்தத்தை
நிறைவேற்ற முடியாது. அந்த பொருளை பற்றிய கணக்கை தேவன் ஒருபோதும்
மறப்பதில்லை என்பதற்கு இந்த வசனமே சாட்சி.
மீகா 6:10 துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த
பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும்
இருக்கிறதல்லவோ?
அத்தோடு, இவ்வாறு துன்மாக்கமாக வரும் பொருட்கள் சாபம் நிறைந்ததாயும்,
அதை சம்பாதித்தவர்களை மட்டுமல்லாது அவர்கள் சந்ததியையும் பாதிப்பதோடு
அவர்களை நித்தியத்துக்கு கொண்டுசெல்லும வழிகளையும் அவைகள் அடைத்து
விடுகிறது. நாம் நினைக்கிறோம் இவைகள் எல்லாம் வெறும் பொருட்கள் தானே
என்று! ஆனால் இந்த உலகில் உள்ள பொருட்கள் எல்லாமே ஒவ்வொரு விதமான
பேய்கள். "ஒன்றை பயன்படுத்தி அதில் சுகம் கண்டு விட்டால் பின்னர் அது
நம்மை விடாமல் தொடர்ந்து பிடிக்கும் பிசாசுகள்" என்றே சொல்லவேண்டும்.
நாம் உண்மையாக சம்பாதித்தால் கூட இந்த உலகத்தில் நாம் இருக்கும்வரை இங்கு
வாழ்வதற்கு நமக்கு அத்தியாவசியமான தேவைக்கான பொருட்களை பயன்படுத்தி
கொள்ள மட்டுமே நமக்கு அனுமதியுண்டு மற்றபடி எந்த உலக பொருளின் மீது ஆசை
வைக்கவோ அதிகமாக சேர்த்து வைக்கவோ நமக்கு நிச்சயம் அனுமதியில்லை.
அவ்வாறிருக்கையில் ஒருவர் அநியாயமாக சம்பாத்தித்த பொருள் என்பது நிச்சயம்
அவருக்கு கேட்டை விளைவிப்பதோடு அதில் உள்ள ஒவ்வொரு காசும் தேவனை நோக்கி
முறையிட்டுகொண்டே இருக்கும்
யாக்கோபு 5:3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள
துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள்
மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள்.
இந்த கடைசி நாட்களில் பொக்கிஷங்களை சேர்க்கவேண்டாம் என்று வேதம்
எச்சரிப்பதால்:
பொய்பொருளாகிய உலக பொருளை தேடுவதில் அககறை காட்டி மெய்ப் பொருளாகிய
இறைவனை தேடுவதை விட்டுவிடாதீர்கள்! அல்லது இரண்டையும் தேடுவேன்
என்றுசொல்லி தேடி. இடையிலேயே விழுந்துக் போகாதீர்கள்!
லூக்கா 12:33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்
போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச்
சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி
கெடுக்கிறதுமில்லை
sundar
http://www.lord.activeboard.com/t45153043/topic-45153043/