தீபாவளி வாழ்த்துக்கள்

55 views
Skip to first unread message

இமலாதித்தன்

unread,
Oct 22, 2008, 10:13:45 PM10/22/08
to Emalathithan
வணக்கம்....
          தீபாவளி வாழ்த்துக்கள்

முன் குறிப்பு:
நீங்கள் உங்களை திராவிட தமிழனென உணர்ந்தால் நிச்சயம் இந்த தொகுப்பை முழுமையாக படித்துணர வேண்டுகிறேன்.....தொடர்க

(தீபாவளி என்ற பண்டிகை பற்றி தமிழர்கள் நாம் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய  சிலகுறிப்புகள்...... )

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது) :
   - ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய்
   கடலுக்குள் ஒளிந்து கொண்டான்
   - தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து
   கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்
   - விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது
   - ஆசைக்கு இணங்கிப் பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது
   - அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது
   - அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்
   - தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்
   - விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை விஷ்ணு வின் மனைவி      நரகாசூரனுடன் போர்தொடுத்து அவனைக் கொன்றாள்
   - இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
   அந்த நிகழ்வை தீபாவளியாக கொண்டாடினார்கள்......

இந்த தத்துவத்தை பற்றி தந்தை பெரியார் கூறியதன் சிறு தொகுப்பு :

    "" நரகாசூரன் இறந்ததற்காக கொண்டாடப்படும் இந்த நிகழ்வை  நரகாசூரனின் இனத்தாரான
    திராவிட மக்கள் நாம் ஏன்  கொண்டாட வேண்டும் ?

   
                                          -இதுதான் தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விடயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே தவிர
வேறு என்னவென்று  யாருக்குத் தெரியும்?
யாராவது சொன்னார்களா?
இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் நிலநூல்கூடத் தெரியவில்லை என்றுதானே கருத
வேண்டியிருக்கிறது?
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலைமீதோ எடுத்து
போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின்,
கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம் இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது.
மற்றொரு ஊர் பிரகத்ஜோதிஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம்
மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது.
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.
வங்காளத்தில் தேவர்களும்
அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?
இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும்,
சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும்,
புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து
பார்த்து, கங்காஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், நாம் 'ஆமாம்" என்று சொல்லிக்
கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு
போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
சிந்தியுங்கள் எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால்....
இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்?
அந்தக் காலத்தில் நாம் மோசம் போய்விட்டோம். அறிவியல் பெருகிவிட்ட இந்தக்
காலத்திலும் மோசம் போகலாமா? ""
                                                 -தந்தை பெரியார்
இது தீபாவளி என்ற பண்டிகை பற்றி தந்தை பெரியார் கூறியதன் சிறு தொகுப்பு

அடுத்து ....

தீபாவளி பற்றி பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை:

மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
'உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்று கேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணரு நாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவிரே!
                                    -பாவேந்தர் பாரதிதாசன்

அசுரர் யார்?

சுரர் என்றால் குடிப்பவர் என்று பொருள். அசுரர் என்றால் குடியாதவர் என்று பொருள். ஆரியர் சோமபானம் குடித்ததாக இருக்கு வேதம் சொல்கிறது. சோமச் செடியை தெய்வமாகமே கும்பிட்டார்கள். வேள்வி செய்து அதில் குதிரை, மாடு, ஆடு, பன்றி, முயல், உடும்பு இவற்றை வேக வைத்து அதனை ஆரியர்கள் 'அவிர்ப்பாகம்' என்று சொல்லி உண்டு மகிழ்ந்தார்கள்.

ஆனால் சோமபானம், சுரபானம் குடித்த ஆரியர் உயர்ந்தவர்களாகச் சித்திரிக்கப்பட்டார்கள். குதிரை, மாடு, ஆடு, முயல், உடும்பு இவற்றைக் கொன்று சாப்பிட்டவர்கள் தேவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவற்றை அன்பு, அருள், காருண்யம், ஒழுக்கம் காரணமாக வெறுத்து ஒதுக்கியவர்கள் அசுரர்கள் என்று இழித்துரைக்கப் பட்டார்கள்.

மகாவிட்ணுவின் அவதாரங்களுள் பரசுராமன் அவதாரம் என்பது முழுக்க முழுக்க அசுரர்களைக் கொன்றொழித்த கதைதான் . பூலோகத்தில் அசுரர்கள் செய்துவரும் கொடுமைகளினால் பூமாதேவி பாரம் தாங்க முடியாமல் தனது கணவன் விட்ணுவிடம் முறையிட்டாள். உடனே 'பூமியில் அவதாரம் செய்து பூமிபாரத்தைத் தீர்த்து வைப்பேன்' என்று கூறி தக்னி முனிவருக்கும் அவரது பத்தினி ரேணுகைக்கும் பரசுராமனாகப் பிறக்கிறார் விட்ணு.

தந்தை கட்டளைப்படி பரசுராமன் தனது தாயையும் உடன் பிறந்த சகோதரனையும் கொன்று பெரிய 'வீரன்" என்று பெயர் எடுக்கிறான். காமதேனு என்னும் பசுவை கார்த்தவீரியார்ச்சுனன் என்னும் அரசன் கவர்ந்து செல்கிறான். அதைச் சாக்கிட்டு அந்த அரசனையும் பூலோகத்தில் இருந்த சத்திரியர்களை; (அசுரர்களை)யும் ஒரு காலத்திலும் தலைதூக்காதபடி கோடரியால் வெட்டிக் கொன்று பூமி பாரத்தைத் தீர்த்தான்.

தாயைக் கொன்றவன், சகோதரனைக் கொன்றவன், அசுரர்களைக் கொன்றவன் எப்படி கடவுள் அவதாரமாக இருக்க முடியும்? இந்த அவதாரத்திடம் இருந்து பக்தர்கள் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? யாரோ ஒரு அரசன் தவறு செய்தான் என்பதற்காக எல்லா அரசர்களையும் பூண்டோடு அழிப்பது எந்தவகை தர்மம்? பூலோகத்தில் அரசு ஆண்டவர்கள் எல்லாம் அசுரர்கள் என்பதுதான் இதற்குக் காரணமா?
இராம இராவண யுத்தம் ஆரிய திராவிடர் இருசாராருக்கும் இடையிலான மோதல்தான். இப்படி நேரு தான் எழுதிய நூலில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

'தீபாவளி என்பது வடநாட்டு மார்வாரிகளும், குஜராத்திகளும் கொண்டாடும் புதுக்கணக்கு, புத்தாண்டுப் பிறப்பு விழா. தீபாவளிக்கும் தமிழர்க்கும், தீபாவளிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை' எனப் பேராசிரியர் சைவப்பெரியார் அ.கி. பரந்தாமனார் தாம் எழுதிய " மதுரை நாயக்கமன்னர் கால வரலாறு" என்னும் நூலில் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

'தென்னிந்தியாவில் இருந்த தமிழ் திராவிட மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும்,அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)

இவ்வாறு நடைமுறை உண்மைக்கும் வாழ்வியல் நடைமுறைக்கும் ஒத்துவராத, முரண்பட்டு இருக்கிற பொய்களை, கலையுரைத்த கற்பனைகளை எல்லாம் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் தமிழர்களைத் தாழ்வுபடுத்தும் இந்தத் தீபாவளியை இன்னும் எத்தனை காலத்துக்கு எப்போதும் ஈரத்திலேயே படுக்க விரும்பும் எருமைகளைப் போல தமிழர்கள் கொண்டாடிக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் தங்கள் பேச்சாலும் எழுத்தாலும் கொளுத்திய பகுத்தறிவு ஒளி காரணமாக அநேக தமிழ் மக்கள் தீபாவளி கொண்டாடுவதை நிறுத்திவிட்டார்கள். என்றாலும் இன்னமும் ஆரிய இனத்துக்கு அடிமையான இழிநிலையை உணராத மக்கள் தொடர்ந்து தீபாவளியைக் கொண்டாடி வருகிறார்கள்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் :
இனிமேலாவது பாரதி விரும்பிய உலர்ந்த தமிழனாக மானத்தோடு வாழக் கற்றுக் கொள்வோமாக......


இதையெல்லாம் படித்து விட்டும் கூட தீபாவளியை கொண்டாட துடிக்கும்
என் திராவிட தமிழ் நெஞ்சமே உங்களுக்கு இந்த பாலாஜி.இரா.ச.இமலாதித்தனின்
இதயம் கனத்த
தீபாவளி வாழ்த்துக்கள்!!!

 


--
இதயம் நிறைந்த வணக்கத்துடன்...
இரா.ச.இமலாதித்தன்(பாலாஜி)
+91 97902 53933
Reply all
Reply to author
Forward
0 new messages