
டேபிள்
மேனர்ஸ் பார்த்தோம். நிறைய பேர் கூறியிருந்தனர், ரவி நாங்க எல்லாம்
லோக்கல்ஸ் நீங்க சொல்ற மாதிரி ரெஸ்டாரன்டகளுக்கு போக மாட்டோம் என்று.
டேபிள் மேனர்ஸ் நிறைய இடத்தில் மெயின்ட்டன் செய்ய வேண்டும். ரெஸ்டாரன்ட்,
நண்பர்கள் வீடு, பொது நிகழ்ச்சிகள், விருந்தோம்பல் அழைப்புகள், லயன்ஸ்,
ரோட்டரி கிளப்கள் போன்ற பல இடத்திற்க்கு இது வேண்டும். இது பெரிய
ஹோட்டலுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றால் அது மிக பெரிய தவறு.
இப்பொழுது சின்ன சின்ன ஹோட்டலில் கூட இதை பின்பற்றுகிறார்கள். இதை
கடைபிடித்தால் வாழ்க்கையில் நிச்சயம் நமக்கு ஒரு ஆடட் அட்வான்டேஜ்.
சரி இன்று நாம் பார்க்க போவது ஃபுட் எட்டிகட். என்னடா இது புது வித டிஷ்
என நினைக்க வேண்டாம். எட்டிகட் என்றால் அந்த அந்த இடத்திற்க்கு தகுந்தார்
போல் நடந்து கொள்வது. ஃபுட் எட்டிகட் பகுதியில் நாம் இன்று பார்க்க போவது
விருந்தோம்பல் பகுதி. அதாவது ஹோட்டலை தவிர பல இடங்களில் நாம் பலரோடு
சாப்பிட வேண்டிய நிர்பந்தம் இருக்கின்றது. சிம்பிளாக சொல்ல வேண்டுமானால்
கல்யான வீடுகள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகள். கடந்த வாரங்களில் கூறியது
போல் புஃபே இருந்தால் கொஞ்சமும் கவலை இல்லை. பிரச்சினை பந்தி பறிமாறும்
போதுதான். ஆம் இப்பொழுது கல்யான வீடுகளில் பந்தி ஒரு 100 மீட்டர் ரன்னிங்
ரேஸ் தான். முதலில் கடையை விரித்து வைத்த பிறகுதான் இலையில் உட்கார
அனுமதிப்பார்கள். கொஞ்சம் முன்னாடி உட்கார்ந்தால் பரவாயில்லை ஆனால்
கடைசியில் இல்லை ஏதாவது நடுவுல் காலியான இடத்தில் நம்மை உட்காரவைத்தால்
அவ்வளவுதான் ஆப்பு மாதிரி நடுவில் உட்கார்ந்து தத்தளிப்போம். லைனாக ஆட்கள்
பறிமாறி கொண்டே போய்விடுவார்கள். சாம்பார் சாதத்தில் கை வைக்கும் முன் ரசம்
ரெடி. ரசம் வருவதற்க்குள் தயிர் சாதம் ரெடி. இது பெரிய மனிதர்களின்
பந்திகளில் பல உணவு பொருட்கள் இருக்கும் அதை பட்டியிலிட்டு
முடிப்பதற்க்குள் பாதி பந்தி ஓவர். நிறைய பொருட்கள் வேஸ்ட் ஆகும். ஏதாவது
பிடித்த பதார்த்தங்கள் வேண்டும் என்றால் அதற்க்குள் பந்தி முடிந்து விடும்.
அதனால் தயவு செய்து உங்கள் பசி, உங்களின் சாப்பாட்டு ஸ்பீடு அனலைஸ் செய்து
உட்காரவும். சிலபேர் மிக மெதுவாக சாப்பிடுவார்கள் அவர்களுக்கு இங்கு வேலை
இல்லை. உங்கள் ஸ்பீடுக்கு அவர்கள் வெயிட் செய்யாமல் பக்கத்து இலையை எடுத்து
கிளின் பண்ணி ஒரு வித காபரா கொடுத்து சேய் என்ன வாழ்க்கைடா என்று ஒட
வேன்டிய நிர்பந்தம்.
பொதுவாக சாப்பிடும் போது இடது கை தயவு
செய்து மடியில் வைத்து சாப்பிடவும். பல பேர் இடது கையில் அப்பளத்தை வைத்து
கொன்டு வலது கையில் சாப்பிடுவார்கள். கையில் சாப்பிடுவது கவுரவ குறைச்சல்
செய்கை அல்ல. ஆனால் சிலர் வீட்டில் சாப்பிடுவது மாதிரி சாப்பிட கூடாது.
நுனி விரல் தான் உங்கள் ஏரியா. சில பேர் வீடு மாதிரி உதயசூரியன் பாணியில்
கை முழுவதும் பிசைந்து சிலர் உள்ளங்கையையையும் தாண்டி வழியும். தயவு செய்து
கையில் ரசம் வாங்கி குடிப்பது, மோர் வாங்கி குடிப்பது, பம்பு செட்டு
மாதிரி உறிஞ்சி குடித்தல் பொது இடத்தில் தர்மசங்கடத்தை உண்டாக்கும்.
எவ்வளவு ருசியான விருந்தாகியும் கையை மட்டும் நக்காதீர்கள். சிலர் வழித்து
நக்கி சாப்பிடுவது அசிங்கம். அது போல் வாய் முழுவதும் உணவை வைத்துகொண்டு
பேச முனையாதீர்கள். சாப்பிட்டும் இடம் பல சமயம் பல பேர் ரனகளம்
ஆக்கிவிடுவார்கள்.
சில பந்திகள், விருந்து வீடுகள், பொது
இடத்தில் மிடில் கிளாஸ் பந்திகளில் சாப்பிடும் போது மிகவும் கவனம் தேவை.
ஆம் இலையை போட்ட உடன் நீங்கள் தண்ணீர் தெளியுங்கள் பலர் இலையை வாட்டர் வாஷ்
செய்து கீழே அல்லது பக்கவாட்டில் ஊற்றுவார்கள் இது தவறு. அடுத்து பொரியல்
காய் கறி முழுவதும் வைத்து சாதம் பரிமாறும் வரை தயவு செய்து எவ்வளவு
பசியிருந்தாலும் காத்திருங்கள். சில பேர் பொரியல் வைத்து இரண்டு இலை
தாண்டுவதிற்க்குள் சுவாஹா செய்து பறிமாறுவர்கள் இங்க வச்சோமா இல்லையா என
குழம்பி போய் கொலை வெறி ஆகிவிடுவார்கள். பலர் எக்ஸ்ட்ரா அப்பளம், ஸ்வீட் ,
பருப்பு வேண்டும் என அடம் பிடித்து உட்கார்ந்து இருப்பார்கள். பெரியவர்கள்
யாராவ்து அருகில் அம்ர்ந்து இருந்தால் தயவு செய்து அவர்கள் எழும் வரை
அமருங்கள். அவர்கள் உங்களை பார்த்து தம்பி எந்திரிங்கன்னு சொன்னா மட்டும்
எழுந்து கை கழுவ செல்லுங்கள். கை கழுவும் இடத்தில் வாயில் தண்ணீர் உற்றி
மிமிக்கரி, வாந்தி, காக்லிங் செய்யாதீர்கள் அடுத்தவர் பின்னால் நின்றால்
அவர்களுக்கு பைப்பை திறந்து விட்டு மரியாதை செலுத்துங்கள். பீடா வெத்திலை
உங்களுக்கு ஒத்து வ்ருமானால் மட்டுமே சாபிடுங்கள். பிரியானி எதாவது போய்
சாப்பிட நேர்ந்தால் எனக்கு நல்ல 'பீஸ்" வையுங்கள். அல்லது நல்லி எழும்பு
மட்டும் போடுங்கள் என நச்சரிகாதீர்கள். நல்ல விஷேஷங்களுக்கு சென்றால் இலையை
மேல் இருந்து கீழ் நோக்கி மூடுங்கள். மாற்றி மூடினால் அபசகுணம் என்று பலர்
என்னுவார்கள். திதி தெவசம் சாப்பாடு மட்டும் தான் கீழ் இருந்து மேல்
நோக்கி மூட வேன்டும்.
Thanks -Ravi Nag பிரியங்களுடன்,
ராமஜனார்த்தனன் .சே

IBM Global Services Delivery Center Czech Republic, s.r.o.
Registered address: Brno, Technicka 2995/21, Zip code: 61600
Company ID: 26244535
Entered in the Commercial Register maintained by the Regional Court in Brno (Part C, Entry 39922)