╔═════════ ೋღ❤ღೋ ═════════╗
....இருப்பாய் தமிழா நெருப்பாய்!
.குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
.குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
.கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
.குதிகால் பட ஓடிப் பறப்பான்!
..........நன்றி :- காசி ஆனந்தன்
╚═════════ ೋღ❤ღೋ ═════════╝
![373931_2625406947780_1033467061_2989071_1598382524_n[1].jpg 373931_2625406947780_1033467061_2989071_1598382524_n[1].jpg](https://groups.google.com/group/inetsolaris/attach/acf2fbdfcd236a38/373931_2625406947780_1033467061_2989071_1598382524_n%5B1%5D.jpg?part=0.1)
முல்லைப் பெரியாறு 1895ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. நூற்றாண்டைக் கண்டுவிட்டது; கிழடு தட்டி விட்டது! உடையும் எல்லைக் கோட்டில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது என்று தலையை விரித்துப் போட்டு மயான ஒப்பாரி வைக்கிறது கேரள மாநில அரசு.
நிமிடத்துக்கு 49 லிட்டர் நீர் கசிகிறது அணையிலிருந்து; அய்யோ அப்பா என்னமோ நடக்கப் போகிறது என்று நாடகம் நடத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணையாவது 1895இல் கட்டப்பட்டது.
கேரள மாநில அரசு குட்டியாடி அணையைக் கட்டியதே - அது எப்பொ ழுது தெரியுமா? 1972ஆம் ஆண்டுதான். அதன் வயது 39 ஆண்டுகளே! இதன் நீர்க்கசிவு. என்ன தெரியுமா? நிமிடத்துக்கு 249.77 லிட்டர் தண்ணீராகும்.
ஞாபகம் வையுங்கள்!
116 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட முல்லை பெரியாறு அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு வெறும் 49 லிட்டர் தான்.
39 ஆண்டுகளுக்கு முன் கேரள அரசு கட்டிய குட்டியாடி அணையின் நீர்க்கசிவு நிமிடம் ஒன் றுக்கு 249.77 அடி.
அப்படி என்றால் முல் லைப் பெரியாறு அணையால் ஏற்படும் ஆபத்தைவிட குட்டியாடி அணையால் தான் மகா மகா ஆபத்து!
முதலில் குட்டியாடி அணையை உடைத்து விட்டு அதற்குப் பிறகு முல்லைப் பெரியாறு அணையின் பக்கம் நெருங்கட்டும்!
1966இல் கேரளாவில் கட்டப்பட்ட பம்பை அணை யின் நீர் கசிவு நிமிடம் ஒன்றுக்கு என்ன தெரியுமா? 96 லிட்டராகும்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்கசிவை விட 57 லிட்டர் அதிகமாகும்.
249 லிட்டர் அதிகமா? 49 லிட்டர் அதிகமா? (குட்டியாடி அணை)
96 லிட்டர் நீர் அதிகமா? 49 லிட்டர் நீர் அதிகமா? (பம்பை அணை)
கேரள அரசுக்கு முத லில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் போல் தோன் றுகிறது.
249 லிட்டர் தண்ணீர் கசியும் குட்டியாடி அணை, 96 லிட்டர் நீர் கசியும் பம்பா அணை - இவற்றின்மீது கவனம் செலுத்திவிட்டு, காரி யம் முடித்துவிட்டு, வெறும் 49 லிட்டர் மட்டும் கசியும் முல்லைப் பெரி யாறு அணை விடயத்தில் மூக்கை நுழைக்கட்டும் கேரள மாநில அரசு.
வைத்தியரே, வைத்தியரே! முதலில் உங்கள் வயிற்றுவலி நோயைச் சரிப்படுத்திக் கொள்ளுங் கள்! மூலிகையை முழுங்கும் வேலையை பாருங்கள்!! பிறகு அடுத்தவர் நகத்தை வெட்டுவதுபற்றி யோசிக்கலாம்.
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு
எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு
பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம்
ஓடக்கூடிய ஆவணப்படம்.
கண்டிப்பாக பார்க்கவும்~~~~> : http://youtu.be/gDHtkwfEtog
The Mullai Periyar DAM _பிரச்னையும் தீர்வும்!
அப்பறம் என்ன செய்யணும் ?
ம்....ம்....
உங்களால் முடிந்த ஒன்று தான் !
தமிழ் படிக்க தெரிந்த 10 தமிழனுக்கு இந்த மெயிலை அனுப்பவும் 
-நன்றி
பிரியங்களுடன்,
ராமஜனார்த்தனன் .சே

IBM Global Services Delivery Center Czech Republic, s.r.o.
Registered address: Brno, Technicka 2995/21, Zip code: 61600
Company ID: 26244535
Entered in the Commercial Register maintained by the Regional Court in Brno (Part C, Entry 39922)