செல்போனை அடிக்கடி தொலைத்துவிட்டு கவலைப்படுபவர்களுக்கு ...

12 views
Skip to first unread message

janaa.s(ஜனா)

unread,
Nov 21, 2011, 12:57:19 PM11/21/11
to inets...@googlegroups.com

செல்போனை அடிக்கடி தொலைத்துவிட்டு கவலைப்படுபவர்களுக்கு ஆறுதல் தரும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

21-11-2011 அன்று வெளியிட்டது

திருட்டுப்போன அல்லது காணாமல் போன செல்போனை செயலிழக்க செய்யும் புதிய முறை அடுத்த மாதம் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய நிலையில் செல்போன் தொலைந்தால் அல்லது திருட்டுப்போனால் அதிலுள்ள சிம் கார்டு செயல்பாட்டை மட்டுமே முடக்க முடியும். இதனால் சிம் கார்டை மட்டும் மாற்றி அந்த போனை தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்ற நிலை இருக்கிறது. இனி செல்போன் காணாமல் போனால் அதற்குரிய ஐஎம்இஐ எண்ணை கொண்டு ஒட்டுமொத்த செயல்பாட்டையும் முடக்க முடியும். எனவே அதை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. இதற்கிடையே செல்போன் சேவை தொடர்பான வாடிக்கையாளர்களின் புகார்களை பெற்று, உரிய காலத்தில் தீர்வு காண்பதற்கான வழிகாட்டு விதிமுறைகள் அடுத்த மாதம் வெளியாகும் என தெரிகிறது. வாடிக்கையாளர்களுக்கான தகவல்களை அவரவர் மாநில மொழியில் வழங்குதல், பிரீபெய்டு இணைப்புகளுக்கும் BILL விவர அறிக்கை, புகார் குறைதீர்ப்பு மையம் அமைத்தல் போன்றவை இந்தபுதிய வழிகாட்டு விதிமுறையில் இடம் பெறும் என தெரிகிறது.

   பிரியங்களுடன்,

   ராமஜனார்த்தனன் .சே

IBM Global Services Delivery Center Czech Republic, s.r.o.
Registered address: Brno, Technicka 2995/21, Zip code: 61600
Company ID: 26244535
Entered in the Commercial Register maintained by the Regional Court in Brno (Part C, Entry 39922)



Reply all
Reply to author
Forward
0 new messages