கூடங்குளம் பஞ்சாயத்து

12 views
Skip to first unread message

janaa.s(ஜனா)

unread,
Nov 17, 2011, 10:37:33 AM11/17/11
to inets...@googlegroups.com
கூடங்குளம் பஞ்சாயத்து - விகடன்



நாளுக்கு நாள் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுக் கொண்டே இருக்கிறது. அது தமிழகத்தில் மட்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை. மாறாக, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அணுசக்திக்கு எதிரான ஒத்த கருத்துடைய செயற்பாட்டாளர்கள் அனைவரும் தங்களின் ஆதரவை கூடங்குளம் மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் 'கூடங்குள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க' வட இந்தியாவில் இருந்து அணுசக்திக்கு எதிரான போராளிகள் சுமார் 100 பேர் யாத்திரை மேற்கொண்டு, கடந்த 10-ம் தேதி மதுரை, திருநெல்வேலி வழியாக இடிந்தகரைக்கு வந்து தங்களின் ஆதரவைப் பதிவு செய்தனர்.
மதுரையில் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனும், சென்னையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமனும் யாத்திரையை நெறிப்படுத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக 13-ம் தேதி லயோலா கல்லூரியில் அணுசக்தி குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் மக்களின் மனநிலையும் அப்துல் கலாம் கூறிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதாக இருக்க, அவர்களின் சார்பில் சில கருத்துகளை முன்வைத்தார். சுவ்ரத் ராஜூ. இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்திய அமெரிக்க 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அம்சங்களைப் பரிசோதிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டவர். தற்போது, அப்துல் கலாம் குறிப்பிட்ட தோரியம் அணு உலைகள், செர்னோபிள் விபத்து எண்ணிக்கை போன்று பல்வேறு விஷயங்கள் குறித்து என்னிடம் பகிர்ந்துகொண்டார்...
"உலகெங்கும் உள்ள அணு உலைகளில் யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. யுரேனியம், வெவ்வேறு ஐசோடோப்புகளைக் கொண்டிருக்கிறது. ஐசோடோப்புகள் என்பது ஒரே மாதிரியான வேதியியல் பண்புகளையும், வெவ்வேறான இயற்பியல் பண்புகளையும் பெற்றிருக்கும் ஒரு பொருளாகும். அதில் யு-235 என்பது இயற்கையாகக் கிடைக்கக் கூடிய, அணுவைப் பிளக்கக் கூடிய ஐசோடோப்பாக இருப்பதால் அதுவே எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியத்தைப் பயன்படுத்துகிறோம். மற்ற நாடுகளில் யுரேனியத்தை செறிவூட்டி அதன் எண்ணிக்கையை 235 ஆக உயர்த்தி எரிபொருளாக்கப்படுகிறது.
ஆனால் தோரியம் அப்படியல்ல. அதை முதலில் ஓர் உலையில் வைத்து அணுவைப் பிளக்கும் தன்மை உள்ள ஐசோடோப் யுரேனியமாக அதாவது யு-233 ஆக மாற்ற வேண்டும். இதற்கு மூன்று தன்மைகள் இருக்கின்றன.
முதலாவதாக, இந்த யு-233 அணு ஆயுதங்கள் செய்யப் பயன்படும். இதைச் சுத்தப்படுத்தி அதை மீண்டும் உபயோகிக்க அதிகம் செலவுபிடிக்கும். இரண்டாவதாக, யு-232 மூலமாக யு-233 பெற முடியும் என்பதால் யு-232 உடன் நாம் நிறுத்திக் கொள்ள முடியாது. ஏனெனில், யு-232 மூலமாக அதிகளவில் காமா கதிர்வீச்சு இருக்கும். மேலும், யு-233-ஐ நாம் அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் கதிர்வீச்சு அணுமின் நிலையப் பணியாளர்களை வெகுவாகப் பாதிக்கும்.
மூன்றாவதாக, புளூட்டோனியத்தால் இயங்கும் அதிவேக ஈணுலைகளின் மூலம் யு-233-ஐ பெறலாம் என்பது அணுசக்தித் துறையின் திட்டம். ஆனால் கனநீர் உலைகளைக் காட்டிலும் ஈணுலையில் பணிகள் நடக்க ஆரம்பித்தால் மிக விபரீதமான விளைவுகள் ஏற்படும்.
இந்த காரணங்களுக்காக பல நாடுகளும் தோரியம் அணு உலை ஏற்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கின்றன. ஆனால் தான் மட்டும் தனியாக ஓடி, ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்றுவிட நினைக்கிறது இந்தியா.
இந்திய அமெரிக்க ஒப்பந்தம் கையெழுத்தான நொடியில் இருந்து அணுசக்தி மூலம் உருவாகக் கூடிய ஓர் எதிர்காலத்தைக் கனவு காண்கின்ற நிலை சராசரி இந்தியர்களின் மனதில் எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் தந்திர வழிநடத்துதலின் படி செயல்பட்டு, ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி மையத்தில் (ஐ.ஏ.இ.ஏ) இரண்டு முறை வாக்களித்தது. அதனால் ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டுறவில் ஏற்பட இருந்த பெட்ரோலிய பைப்லைன் திட்டம் எனும் முக்கியமான எரிசக்தி ஆதாரம் நின்றுபோனது.
இந்த நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மராத்திய நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த முன்னாள் அணுசக்தித் துறை தலைவர் அனில் ககோட்கர், "வெளிநாட்டில் இருக்கும் நிறுவனங்களின் நலனையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலைகளை நாம் இங்கே இறக்குமதி செய்ய வேண்டும்" என்று சொல்லி இருக்கிறார். இப்போது சொல்லுங்கள்... 'வெளிநாட்டு கை' மக்களுக்குப் பின்னால் இருக்கிறதா அல்லது அரசுக்குப் பின்னால் இயங்குகிறதா?
செர்னோபிள் விபத்து போன்று இங்கும் நடந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சம் கொள்வதற்கும், கவலை கொள்வதற்கும் மக்களுக்கு உரிமை இருக்கிறது. அணுசக்திக்கு ஆதரவாகப் பேசும் சிலர் செர்னோபிள் விபத்தின் போது வெறும் 57 பேர்தான் இறந்து போனார்கள் என்கிறார்கள். அது முற்றிலும் தவறு. உலக சுகாதார நிறுவனம் 9,000க்கும் அதிகமான மரணங்கள் இந்த விபத்தால் நிகழ்ந்திருக்கின்றன என்கிறது. நேரடியான மரணங்கள் தவிர புற்றுநோய் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம். அமெரிக்க புற்றுநோய் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஓர் ஆய்வில் அந்த விபத்தின் போது ஐயோடின்-131 என்ற வேதிப் பொருளை உள்வாங்கிய குழந்தைகள் நாளடைவில் தைராய்டு புற்றுநோய்க்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்கிறது. இன்றும் செர்னோபிள் பகுதியில் 10,000 சதுர கிலோமீட்டர்கள் வரை 'ஸ்ட்ரிக்ட் கன்ட்ரோல்' எனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பகுதியில் சீஸியம்-137 எனும் மாசு படர்ந்திருக்கிறது. இது தன்னுடைய கதிரியக்கத்தை இழக்க சுமார் 30 வருடங்கள் ஆகும்.
இது ஒருபுறம் இருக்க, கூடங்குளத்தில் அமைய இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகள் நூறு சதவிகிதம் பாதுகாப்பானவை என்று கூறுவது அறிவியல் பூர்வமாக சாத்தியமே இல்லை. குறிப்பாக, பல நாடுகளில் இருக்கும் வி.வி.இ.ஆர். உலைகளில் 'கன்ட்ரோல் ராட்' எனப்படும் ஒருவகையான இயங்குமுறையில் பிரச்னைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த 'கன்ட்ரோல் ராட்' என்பது எந்த ஓர் அணுப்பிளவும் நிகழாமல் நியூட்ரான்களை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. யுரேனியம் மற்றும் புளூட்டோனியம் ஆகியவற்றின் அணுப்பிளவை கட்டுப்படுத்த இவை அணு உலைகளில் நிர்மானிக்கப்பட்டு இருக்கின்றன. 2006, மார்ச் 1-ம் தேதி பல்கேரியா கொஸ்லூடி எனும் அணுமின் நிலையத்தில் 4-வது உலையில் மின்சாரம் தடைபட்டதால் முக்கியமான சர்க்குலேஷன் பம்ப்கள் வேலை செய்யவில்லை. இதனால் 'கன்ட்ரோல் ராட்' இயங்குமுறையில் பிரச்னை ஏற்பட்டு விபத்து நிகழ்ந்தது. இது ஓர் உதாரணம் தான்.
இவற்றுடன், இழப்பீடு முறையையும் நாம் கவனிக்க வேண்டும். கூடங்குளம் அணு உலைகளை விற்ற ஆட்டம்ஸ்ட்ராய்க்ஸ்போர்ட் எனும் நிறுவனம் சிறப்பு இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம், மக்கள் தன்னிடம் இழப்பீடு கோருவதைத் தடை செய்கிறது. இந்தியாவில் இருக்கும் அணு விபத்து இழப்பீடுச் சட்டம் காரணமாக வெஸ்டிங்ஹவுஸ் போன்ற அணு உலை விற்பனை நிறுவனங்கள் நம் நாட்டில் கால் வைக்க யோசிக்கின்றன.
ஆக, இந்த நிறுவனங்கள் எல்லாம் தங்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதில் தவறு இல்லை என்கிற போது, தங்களின் வாழ்வாதார பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்ள போராடும் மக்களின் உணர்வுகள் மட்டும் எப்படி தவறாகும்?" என்று கேட்டார் சுவ்ரத் ராஜூ.
 
- விகடன்








Facebook >
318513_257496604298314_100001139295839_635082_2123862750_n[1].jpg



View of Chernobyl power plant taken from the roof of a building in Pripyat, Ukraine.

விபத்து நடந்து 25 ஆண்டுகள் கழித்தும் மக்கள் குடியேற முடியாமல் இருக்கும் செர்நோபில் அணுஉலை பக்கத்தில் இருக்கும் ஊர் PRIPYAT

சிந்தியுங்கள் இனியும் இந்த அணுஉலை தேவையா என்று அறிவுஜீவிகளே 

அணு உலை பாதுகாப்பானதா இல்லையா……………………????!!!!!

இது போன்ற உலகை உலுக்கும் கேள்விகள் எல்லாம் வேண்டாம். அதை மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள்….!!!

சிவகாசி பட்டாசு தொழில் கொடவுன்களையும்,
திருப்பூர் துணிகளின் சாயக்கழிவுகளையும்,
ஆம்பூர் வகையறா தோல் தொழிற்சாலை நச்சுகளையுமே சரியானபடி வழிநடத்த துப்பில்லாத நமக்கு…..???

அணுஉலை தேவையா எனபதே எனது முதல் கேள்வி…?

மனிதக் கழிவையே சரிவரக் கையாளத் தெரியாத நமக்கு அணுக்கழிவை என்ன செய்யலாம் என்ற விவாதம் தேவையா?

முதலில் மயிர் வளரட்டும்… பூச்சூடுவது பற்றி பிறகு பேசலாம்…..!!!

மின்சாரம் இல்லாமல் செத்துவிடுவேன் என்பவர்களுக்கு.
சரி செத்துவிடு என்பதே என்வாதம்.

ஏன் என்றால் முல்லைப்பெரியாறு தொடங்கி ,
ஆந்திரா கர்நாடகா என்று எந்த ஆற்றுப்பிரச்சனைகளயும் தீர்க்க முடியவில்லை. இவை எல்லாம் இயற்கை வள‌ங்கள்…….

பூனையையே நிர்வகிக்கத் தெரியாதவர்களுக்கு அணுஉலை என்னும் புலி தேவை அற்றது

313240_257506600963981_100001139295839_635103_1546886531_n[1].jpg

கூடங்குளம் அணு உலை:

ரஷ்யாவில் 1986-ல் செர்நோபில் அணு உலை வெடித்து 10லட்சம் பேர் பலியானார்கள்.அந்நாட்டில் அணு உலைக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அந்த சக்தி வாய்ந்த அணு உலையை வேறு நாட்டில் அமைக்க திட்டமிட்டனர்..இதனை எந்த நாடும் வாங்க முன் வரவில்லை. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ரஷ்ய அணு உலை நிறுவனத்திடம் 1987- ல் பல ஆயிரம் கோடி கமிசன் வாங்கி கொண்டு அதை இந்தியா கொண்டு வந்தார்.

ரஷ்யாவில் தோல்வி அடைந்த இந்த அதிக சக்தி கொண்ட அணு உலையை குஜராத்,கேரளா, ஆந்திரா, சண் டிகார், ஒரிசா,பீகார்,மத்தியபிரதேஷ்,மேற்கு வங்காளம்,... போன்ற மாநில மக்கள் அங்கு அமைக்க விடவில்லை.கடைசியில் இழிச்சவாயர்கலான தமிழ் நாட்டில் அந்த ஆபத்தான அணு உலையை வைத்துள்ளனர்.

இந்த உலையில் சிறிதளவு கசிவு ஏற்பட்டாலும் அழியப்போவது தமிழினம்தான்.அணு உலை பாதுகாப்பானது என்றால் அது நிச்சயம் டெல்லி,கேரளா, மேற்கு வங்காளத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

ஜப்பானில் அணு உலை வெடித்த பிறகுதான் தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.கூடங்குளம் அணு உலை வெடித்தால் மதுரை முதல் கன்னியாகுமரி வரை பாலைவனமாக மாறிவிடும்..பல ஆயிரம் ஆண்டுகள் வரை அணு கதிர் வீச்சு இருக்கும் என்பதால் நெல்லை,கன்னியாகுமரி,தூத்துக்குடி,மதுரை, தென்காசி, ராஜபாளையம், ராமநாதபுரம்,சிவகாசி,சிவகங்கை,திருச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கர்நாடகம்,ஆந்திரா,போன்ற மாநிலங்களுக்கு அகதிகளாக செல்லும் நிலை ஏற்படும்.

1986-ல் ரஷ்யாவில் உள்ள செர்நோபிலில் அணு உலை வெடித்து 10 லட்சம் பேர் பலியானார்கள்.அங்கு தற்போது கடும் அணு கதிர் வீச்சு இருப்பதால் ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் வசிக்க முடியவில்லை . 2525 - ம் ஆண்டு வரை அணு கதிர் வீச்சு இருக்கும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதை அறிய கூகுல் இணையதலத்தில் சென்று,(செர்நோபில் டிசாஸ்டர்) என்று தேடி பாருங்கள்.அணு உலையால் பாதித்த செர்நோபில் பகுதியை பார்த்தால் பிணங்கள்,இடிந்த கட்டிடங்கள்,கருகிய மரங்கள், என்று மிகவும் பரிதாபமாக உள்ளது. இவ்வளவு பயங்கரமான அணு உலை நமக்கு தேவையா? மின்சாரம் தயாரிக்க ஆயிரம் வழிகள் உள்ளன.அதை விட்டு விட்டு அணு உலை மிகவும் அவசியம் என்று மத்திய காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடிப்பது ஏன்? கூடங்குளம் பகுதியில் இதுவரை நல்ல தொழிற்சாலைகள் அமைக்காதது ஏன்? தற்போது அணுஉலைக்கு எதிராக நெல்லை மாவட்டத்தில் போராட்டம் வெடித்துள்ளது.

அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை முடக்கி விடலாம் என்று மத்திய அரசு கனவு காண்கிறது . தமிழனின் உயிர் என்றால் மதிப்பில்லையா . நண்பர்களே. இனியாவது நாம் ஊழல் தலைவர்களுக்கு எதிராக ஆர்ப்பரிப்போம். தமிழகத்தை காப்போம். அணு உலை போராட்டத்தை முடக்க சதி செய்யும் இந்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம். அணு உலைகளை மூடும் வரை ஓயாமல் தொடர்ந்து போராடுவோம்.

மனித குலத்தை அழிக்கும் அணு உலைகளை உலகத்தில் இருந்தே அப்புறப்படுத்துவோம்.

   பிரியங்களுடன்,

   ராமஜனார்த்தனன் .சே

IBM Global Services Delivery Center Czech Republic, s.r.o.
Registered address: Brno, Technicka 2995/21, Zip code: 61600
Company ID: 26244535
Entered in the Commercial Register maintained by the Regional Court in Brno (Part C, Entry 39922)



318513_257496604298314_100001139295839_635082_2123862750_n[1].jpg
313240_257506600963981_100001139295839_635103_1546886531_n[1].jpg
B9C.gif
AF9.gif
Reply all
Reply to author
Forward
0 new messages