அனைத்து மொழிகளுக்கும் விக்கி சமூகம் தரும் பரிசு - விக்கி லெக்சீம்

8 views
Skip to first unread message

Shrinivasan T

unread,
Mar 29, 2019, 2:02:08 AM3/29/19
to panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, kuzhu, indi...@googlegroups.com

விக்கித் தரவு திட்டமானது, விக்கி சமூகத்தினரின் ஒரு பெருந்தரவுத் திட்டம். அது சொற்களையும் அவற்றுக்கான விளக்கம், தொடர்புடைய பிற விவரங்களை தகவல்களாக மட்டுமே தொகுக்கிறது.

ஆனால், சொற்களுக்கு இலக்கணக் குறிப்புகள், இணையான சொற்கள், எதிர்ச்சொற்கள், பிற மொழிகளில் மொழியாக்கம் என்று பல்வேறு கூறுகள் உள்ளன. அவற்றையும் விக்கித் தரவு திட்டத்தில் சேர்க்கும் வகையில் விக்கிடேடா லெக்சீம் (Wikidata Lexeme) திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில அறிவிப்பை இங்கே காண்க - https://blog.wikimedia.de/2019/03/25/lexicographical-data-on-wikidata-words-words-words/

சொற்களை அவற்றின் இலக்கணக் குறிப்புகளோடு, பிற விவரங்களையும் CC0 - Public Domain என்ற உரிமத்தில் வழங்கும் பெரும் திட்டம் இது.

இதில் தமிழுக்கான சொற்கள் அனைத்தையும், இலக்களக் குறிப்புகளோடு சேர்த்து விட்டால், தமிழின் பெருங்கனவுகளான இயல்மொழி ஆய்வு, இயந்திர மொழிமாற்றம், இலக்கணப் பிழைத்திருத்தி, சொற்பிழைத்திருத்திகளுக்கான அடிப்படை வளமாக லெக்சீம் விளங்கும்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது, விக்கித்தரவு (wikidata) பற்றியும், Lexeme பற்றியும் அறிந்து, அவற்றில் எப்படி தமிழுக்கான சொற்களஞ்சியங்களை சேர்ப்பது என்றுதான்.

பின்வரும் காணொளிகளில் விக்கிசனரி பங்களிப்பாளர் தகவல் உழவன் விக்கித் தரவு பற்றியும் லெக்சீமில் எப்படி சொற்களை சேர்ப்பது என்றும் விவரிக்கிறார்.

 

விக்கித் தரவில் ஒரு உருப்படியை சேர்த்தல்

https://commons.wikimedia.org/wiki/File:Wikipedia-tamil-wikidata-new-item-creaion.webm

 

விக்கித்தரவை மேம்படுத்துதல்

https://commons.wikimedia.org/wiki/File:Wikipedia-tamil-wikidata-modify.webm

 

லெக்சீமில் ஒரு சொல்லை சேர்த்தல்

https://commons.wikimedia.org/wiki/File:Wikidata-lexeme-1-creation.webm

 

லெக்சீமில் ஒரு சொல்லுக்கான விவரங்களை சேர்த்தல்

https://commons.wikimedia.org/wiki/File:Wikidata-lexeme-2-input-image_and_audio.webm

 

விக்கித் தரவு, லெக்சீம் ஆகியவற்றில் மேற்கண்டவாறு, இணைய உலாவி வழியில் தகவல்களை சேர்ப்பதோடு, சொற்கள், அவற்றின் பொருள், இலக்கணக் குறிப்புகள், பிற மொழியில் அதே சொற்கள் என அனைத்தையும் CSV கோப்பாக தயாரித்தால், அவற்றை தானியக்கமாக விக்கித் தரவில் சேர்க்க் முடியும்.

மேலும் அவற்றை Quarry எனும் சேவை மூலம் எளிதில் தேடி எடுக்க முடியும்.

https://query.wikidata.org/

அங்குள்ள உதாரணங்களை இயக்கிப் பாருங்கள். விக்கித் தரவின் பிரம்மாண்டங்களை உணரலாம்.

 

விக்கித் தரவு, விக்கி லெக்சீம் பற்றி ஆராய்ந்து, கற்று, அவற்றை மேம்படுத்த உங்கள் அனைவரையும் அழைக்கிறோம்.

நீச்சல் காரன்

unread,
Mar 29, 2019, 3:14:54 AM3/29/19
to Shrinivasan T, panga...@madaladal.kaniyam.com, freetamil...@googlegroups.com, தஇக - கணித்தமிழ் வளர்ச்சி, kuzhu, indi...@googlegroups.com
விக்கி லெக்சீம் நல்ல தொடக்கம் ஆனால் முன்னர் விவாதித்தது போல விக்கிடேட்டா லெக்லீம் தமிழ்போன்ற ஒட்டுநிலை மொழிகளுக்குப் போதிய வசதியை வழங்கவில்லை அல்லது உதவாது என்றே நினைக்கிறேன். ஒரு பெயர்ச் சொல்லானது அடிப்படையிலேயே சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட விகுதிகள் பெறும்போது அவற்றையெல்லாம் இதில் உள்ளீடு செய்தால்தான் பலன்கிடைக்கும். மொழியியல்/இலக்கணம் அறிந்தவரால் தான் அதைச் செய்யமுடியும். பொதுவெளியில் இருப்பதால் ஏற்படும் திருத்தங்களையும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஆரம்பக்கட்ட மொழியியல் கருவிகளுக்கு உதவலாம், ஆனால் எழுத்து, சொல், பொருள் என்று ஆழமாகப் போகும் போது அதிகச் சோர்வையே கொடுக்கும் எனக் கணிக்கிறேன்.

http://vaani.neechalkaran.com திருத்தியில்  9 கோடி சொல் உணர்திறன் இருந்தும் தமிழில் கணிக்க இயலாத விகுதிகள் வந்துகொண்டே இருக்கின்றன என்ற அனுபவத்திலேயே இக்கருத்தைப் பதிவு செய்கிறேன். மாற்றுக் கருவிகள் இல்லாத போது விக்கிடேட்டா லெக்லீம் ஒரு தீர்வைத் தரும் என்றால் அதையும் வரவேற்கிறேன்.

அன்புடன்,
நீச்சல்காரன்

--
You received this message because you are subscribed to the Google Groups "தஇக - கணித்தமிழ் வளர்ச்சி" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to tva_kanitamil_val...@googlegroups.com.
To post to this group, send email to tva_kanitam...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/tva_kanitamil_valarchi/CAND2794Gji-GTUo%3D0R3fvZiDoH1MXdeUzvNgCzvYwFVngyXfpw%40mail.gmail.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
Reply all
Reply to author
Forward
0 new messages