அடுக்கிய மூவுலகும் கேட்கும்

1 view
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
Mar 19, 2012, 10:55:22 PM3/19/12
to palsuvai


 




அடுக்கிய மூவுலகும் கேட்கும்.
      தர்மம் செய்தலால் அன்றி வேறு எதனாலும் நம் முன்வினைகள் அழிவதில்லை. அறம் செய்வது கடவுள் வழிபாட்டின் ஓர் அங்கம் என்பதால்தான் வழிபாட்டின் முடிவில் பால், பழம், பஞ்சாமிர்தம், பொங்கல் முதலியன வழங்கப்படுகின்றன. தர்மத்துடன் சேராத வழிபாடு எந்த இலக்கத்துடனும் சேராத பூஜ்யத்துக்கு சமம். திருமணம் முதலான குடும்ப வைபவங்கள், தேவ பூஜை, பித்ருக்களுக்கு சிரார்த்தம், ஹோமம் செய்யும் நாள் திருவிழா நாள் ஆகிய ஐந்து காலங்களிலும் தர்மம் செய்வது மிகவும் முக்கியம். வசதியற்றவர்கள் கூழாவது ஊற்றவேண்டும்.
      கல்யாணம் தேவர் பிதிர்விழா வேள்வி என்று
      ஐவகைநாளும் இகழாது அறம் செய்க
      பெய்க விருந்திற் கூழ்.............(ஆசாரக் கோவை)
கோலால் ஒலிக்க்சப்படும் முரசொலி பத்துமைல் வரை கேட்கும். இடியோசை நாற்பது மைல் வரை கேட்கும் . ஆனால், சான்றோர் கொடுத்தார் என்ற சொல் அடுக்கடுக்காயுள்ள மூன்றூலகிலும் கேட்கும்.      கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
      இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
      அடுக்கிய மூவுலகும் கேட்கும் சான்றோர்
      கொடுத்தார் என்ப்படும் சொல்.
(நாலடியார்)
-=-=-=-=-==-=-=-=-=-=-
செய்தி மூலம்: தர்மச்சக்கரம்

Reply all
Reply to author
Forward
0 new messages