KAVICHINGA NAVALAR

10 views
Skip to first unread message

Venkatachalam Subramanian

unread,
May 5, 2017, 12:45:54 PM5/5/17
to palsuvai

 

Aum
Dr.Jeyabarathi has passed into eternity. His knowledgeable writings are endless

Dear Friends.


An Agathiyarian asked for this poem is unicode.

So here it is.....


Regards


JayBee


கவிச்சிங்க நாவலர்


பல பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் பாடியுள்ள

கவிச்சிங்க நாவலரின் அரிய ஆற்றல்களின் உச்ச கட்டங்களாக

இரண்டு நிகழ்ச்சிகளைக் கூறலாம்.

ஒரு முறை பொன்னுச்சாமித்தேவர் கவிச்சிங்க நாவலரிடம்

இவ்வாறு கோரிக்கையிட்டார்:


"கால், கொம்பு, விசிறி, ஒற்று, ஙகரம், ஞகரம், பகரம்,

மகரம் ஆகியவை நீங்கிய அநாசிக நிரோட்டக வெண்பாவை

இயற்றவேண்டும். அதையும் பத்தே பத்து நிமிடங்களில் இயற்றவேண்டும்".


கால் = ¡

கொம்பு = ¦

விசிறி = §

ஒற்று = மெய்யெழுத்து

ஙகரம் = ங வரிசை

ஞகரம் = ஞ வரிசை

பகரம் = ப வரிசை

மகரம் = ம வரிசை.


அநாசிக எழுத்துக்கள் என்பவை க, ச, ட, த, ப, ற,

ய, ர, ல, வ, ள, ழ, ஆகியவை.


இந்த இடத்தில் உடற்கூறு பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும்.


வாயின் உட்புறம், தொண்டைக்குழி, நாசியின் உட்புறம்,

ஊட்டி ஆகியவை சந்திக்கும் இடத்தில் Pharynx, Laryngo-pharynx,

Oro-pharynx, Naso-pharynx என்னும் இடங்கள் இருக்கின்றன.

வாயிலிருந்து உணவை அல்லது தண்ணீரை விழுங்கும்போது

Glottis, Epiglottis என்னும் ஜவ்வு/தசைகள் தானாகவே இயங்கும்.

அப்போது Laryngo-pharynx, Naso-pharynx ஆகியவை மூடப்படும்.

உணவு Oro-Pharynx வழியாகச் சென்று Oesophagus என்னும்

உணவுக் குழலில் இறங்கி இரைப்பைக்குச் செல்லும். சம்பந்தப்பட்ட

பாதைகள் சரியாக மூடப்படவில்லையென்றால் தண்ணீர் எட்ஸெட்டெரா

மூச்சுக் குழலுக்குள்ளோ அல்லது நாசியின் உட்புறத்துக்குள்ளோ

சென்று புரையேறிவிடும்.


பேசும்போது சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது

நாசியின் உட்புறம் திறந்திருக்கும். ங, ஞ, ண, ந, ம, ன ஆகியவை

அப்படிப்பட்டவை. நாசியின் வழியாக மூச்சு வரும். இவற்றை Nasals

என்று சொல்வார்கள். இவைதாம் நாசிக எழுத்துக்கள்.


கசடதபற, யரலவளழ ஆகியற்றை உச்சரிக்கும்போது

நாசிப் பாதை மூடியிருக்கும். இவை அநாசிக எழுத்துக்கள்.


நிரோட்டகம் - அதாவது நிர் ஓட்டகம் என்றால் உதடு

ஒட்டாமலோ குவியாமலோ சொல்லப்படுவது. 'ஓஷ்டக' என்பது உதடு.

உதடு தொங்கி பெரியதாக இருப்பதால்தான் ஒட்டகத்துக்கு

ஒட்டகம் என்று பெயர்.


நிரோட்டக எழுத்துக்கள் எல்லா உகரங்கள், ஊகாரங்கள்,

எல்லா ஒகரங்கள் ஓகாரங்கள், ஔகாரங்கள், மகர வரிசை,

வகர வரிசை, பகர வரிசை ஆகிய அனைத்தும் நீக்கி மீதி இருப்பவை.


பொன்னுச்சாமித் தேவர் கொடுத்த சமிசைப்படி தமிழில்

உள்ள 247 எழுத்துக்களில் 187 எழுத்துக்களைப் பயன்படுத்த

முடியாது.


தேவர் சொன்னபடியே பத்தே நிமிடங்களில் கவிச்சிங்க

நாவலர் பாடிவிட்டார்:


அலக கசட தடர ளகட

கலக சயச கதட - சலச

தரள சரத தரத ததல

கரள சரள கள


அலக கசடது அடர் அளம் கட

கல் அக சய சக தட - சலச

தரள சர தத ரத ததல

கரள சரள கள


அலக = எல்லையுடையவாக

கசடது அடர் = குற்றங்களின் செறிவும்

அளம் = உவர்த்தலும்

கட = கடந்த

கல் அக = புலமை மிக்காரின் உள்ளத்தில் உறைகின்றவனே

சய = வெற்றியை உடையவனே

சக தட = உலக எல்லாம் இடம் உடையவனே

சலச = தாமரையில் எழுந்தருளியவனே

தரள = அசைவினை உடையவனே

சர = சரபனே

தத = விரிந்த

ரத ததல = தேரை நிலையாகக் கொண்டவனே

கரள = விடத்தினை

சரள = நேர்மையாக

கள = கண்டத்தில் அணிந்தவனே


Impossible!

Yet Possible!


அன்புடன்


ஜெயபாரதி


=================

>

__._,_.___

Messages in this topic  (1)    Reply  (via web post)  |  Start a new topic

Messages | Files | Photos | Links | Database | Polls | Calendar

---------------------------------------------------------------------------------

For archives click

http://groups.yahoo.com/group/agathiyar/messages

---------------------------------------------------------------------------------





Change settings via the Web (Yahoo! ID required)

Change settings via email: Switch delivery to Daily Digest | Switch format to Traditional

Visit Your Group  |  Yahoo! Groups Terms of Use  |  Unsubscribe



Recent Activity


 4

New Members


 1

New Files

Visit Your Group



Give Back

Yahoo! for Good

Get inspired

by a good cause.


Y! Toolbar

Get it Free!

easy 1-click access

to your groups.


Yahoo! Groups

Start a group

in 3 easy steps.

Connect with others.

.

__,_._,___


 



aiஐயே மெத்தக்கடினம்..என்று நம்ம சிவன் பாடினதுபோல் சிங்கக்கவிராவ்

பாடலைப்படித்ததுமே சொல்லத்தோன்றியது..நீங்கள் அர்த்தம் உரைக்காவிடில்

படித்து இரண்டு பல் உடைந்து, பொருள் தெரியாமல் தலையில் இரண்டு முடியும்

உதிர்ந்திருக்கும்.

மெத்தக்கடினம்,

யோகியார்


2009/10/19 jay bee <jaybee...@gmail.com>

--

yogiyaar

அனைவரும் வாழ்க வளமுடன் நம் குரு சித்தர் பாபாஜி அருளால்!


[Non-text portions of this message have been removed]

__._,_.___

Messages in this topic  (2)    Reply  (via web post)  |  Start a new topic


MARKETPLACE

Mom Power: Discover the community of moms doing more for their families, for the world and for each other




Yahoo! Finance

It's Now Personal

Guides, news,

advice & more.


Y! Messenger

All together now

Host a free online

conference on IM.


Dog Groups

on Yahoo! Groups

Share pictures &

stories about dogs.

.

__,_._,___


 



ஐயே!


நீங்கள் எழுதினீர்கள்:

ஒரிஜினல் 'மெத்தக்கடின'த்தை இயற்றியவர்

கோபாலகிருஷ்ண பாரதியார். பாபநாசம் சிவனல்லர்.

பாடியவர்.... லேட்டஸ்ட்டாக... தண்டபாணி

தேசிகர்.


>>>>>>>>>>>>>>>>>>>>>.

சரியாப்போச்சு.

ரங்காராவ், ராமாராவ் வகையறாவாக்கி

விட்டீர்களே.

பேஷ்! பேஷ்!

அவர் பெயர் பழனி மாம்பழக் கவிச்சிங்க

நாவலர்.


>>>>>>>>>>>>>>>>>>>....

>>>>>>>>>>>>>>>>>....


அவர் ஒரு கவிச்சிங்கம் என்றால் நீங்களோ கவி

யோகியார்.

இல்லையா?

உங்களுக்கே இப்படியா!!!

பல் உடையாமல் இருக்க வேகமாக இதை

அடிக்கடி சொல்லிக்கொண்டு வாருங்கள்......


கடல்ல ஒரு உரல் உருளுது பெரளுது தத்தளிக்குது

தாளம்போடுது.


இது யாரு தச்ச சட்டெ, எங்க சச்சா தச்ச சட்டெ.


தமிழ்ப் பாடல் சரியாக இல்லையென்றால்

தலையில் எழுத்தாணியால் குத்திக்கொண்ட ஆளைப்

பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

தமிழ்ப்பாடலால் வெட்டப்பட்ட பலா மரம்

தழைத்ததையும் பாலை நிலம் மருத நிலமாகப் மாறியதையும்

பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

உள்ள மசிரில ரெண்டு மசிர் விழுகுதுங்குறத

இப்பத்தான் கேள்விப்படுறேன்.


மாம்பழக்கவிச்சிங்க நாவலர் ஒரு வரகவி,

ஆசுகவி, அருட்கவி.

குருடராக இருந்தும் முதுகில் விரலால் எழுதச்

செய்து எழுதப்படிக்கக் கற்றவர்.

ஏகச்சந்தக் கிராஹி.

அத்தனையும் பழனி முருகனின் அருள்.

__._,_.___

Messages in this topic  (3)    Reply  (via web post)  |  Start a new topic




Yahoo! Groups

Dog Lovers Group

Connect and share with

dog owners like you


Celebrity kids

and families

Surviving in

the spotlight

.

__,_._,___


 



ஐயா//மெத்தச்சரி..

யோகியார்


2009/10/20 jay bee <jaybee...@gmail.com>

__._,_.___

Messages in this topic  (4)    Reply  (via web post)  |  Start a new topic


.

__,_._,___


 




ஸம்+தா sam+dhhA = [முன்னே] இடு. முன் வை. to present, put forth.

கவிதையின் 'சந்தம்' - வேதங்களின் யாப்பில் வரும் 'ச்ந்தஹ்' chhandah, chhandas - என்பது வேறு.

ஸந்தா[sandhaa]> ஸந்தானம்[sandhAnam] e.g. அக்நிஸந்தா[dhA]நம் , தீயை இடுதல்

ஸம்ஹிதா>சம்ஹிதை சீராகச் சேர்த்து இடப்பட்ட presentation

ஏக-ஸந்த-கிராஹி= ஒரு முறை முன்னிடப்பட்டதை கிரஹித்துக்கொள்பவன். -கிராஹிணி பெண்பால்.

துவி-ஸந்த- , த்ரி-ஸந்த- கிராஹி களைச்சேர்த்து வைத்துக்கொண்டு புதுக்கவிகளை எமாற்றிய புலவர்சபைக் கதை தெரிந்திருக்குமே! அவர்களுக்குப் பாடம் புகட்ட வந்த ஒரு கவியைப்பற்றியும் ஜேபீயார் முழுக்கதை சொல்ல இங்கு கேட்போமாக!


"It is a far far better thing that I do

than I have ever done! "


--- On Wed, 10/21/09, jay bee <jaybee...@gmail.com> wrote:


From: jay bee <jaybee...@gmail.com>

Subject: Re: [agathiyar] An Incredible Poem(Tamil unicode)

To: agat...@yahoogroups.com

Date: Wednesday, October 21, 2009, 5:32 AM

__._,_.___

Messages in this topic  (5)    Reply  (via web post)  |  Start a new topic



Recent Activity


 7

New Members

Visit Your Group



Yahoo! Groups

Dog Zone

Connect w/others

who love dogs.


Yahoo! Groups

Mom Power

Find wholesome recipes

and more. Go Moms Go!

.

__,_._,___


Reply all
Reply to author
Forward
0 new messages