ஈமான் அமைப்பின் முன்னாள் பொருளாளர் சகோதரர் வஃபாத்து
அஸ்ஸலாமு அலைக்கும்
கீழக்கரை மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் தை.அ.அஹ்மது முஹைதீன் அவர்கள் இளைய மகனும் ஹமீது அப்துல் காதர், ஓஃபூர் ஆகியோரின் தம்பியும் ஜனாபா ஸியாதாவின் கணவரும் பஷாஈர், வாஜீத் ஆகியோரின் மச்சானும், கரீம் சாவன்னா ஸதக் மற்றும் தைக்கா அய்யூப் ஸுஐப் ஆகியோரின் மச்சினனும் மஸார் முஹைதீனின் தகப்பனாரும் அஹ்மது ஜலாலுதீனின் மாமானாருமான ஜனாப்.தை.அ.தமீம் அன்ஸாரி இன்று (6-6-19) அதிகாலை கொச்சியில் வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் நல்லடக்கம் இன்று மாலை சென்னை இராயப்பேட்டையில் நடைபெற்றது.
அன்னாரின் ஹக்கீல் துஆ செய்யவும்.
இவர் ஈமான் அமைப்பின் முன்னாள் பொருளாளர் அல்ஹாஜ் ஒஃபூர் காக்கா அவர்களின் சகோதர் ஆவார்.
அன்னாரது மறைவுக்கு ஈமான் அமைப்பின் சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.