ஈமான் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவரும், ஆடிட்டரும், அமீரக காயிதேமில்லத் பேரவையின் முன்னாள் பொருளாளரும், கவிஞருமான அல்ஹாஜ் அப்துல் கதீம் அவர்கள் நேற்று 15.01.2020 புதன்கிழமை இரவு தஞ்சாவூரில் வஃபாத் ஆனார் காலமானார்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
இத்தகவலை அவரது மகன் இம்தியாஸ் அஹமத் முகநூலில் தெரிவித்திருந்தார்.
அன்னாரது ஜனாஸா இன்று 16.01.2020 வியாழக்கிழமை லுஹர் தொழுகைக்குப் பின்னர் தஞ்சாவூர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறைவுக்கு ஈமான் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்
மறைந்த அப்துல் கதீம் அவர்கள் ராஜகிரி தாவூத் பாட்சா அவர்களின் சகலர் ஆவார். ஈமான் அமைப்புக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அவரது பணிகள் இளைஞர்களுக்கு முன் மாதிரியாக என்றும் திகழும்.
தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சிறப்பான புலமை பெற்றவர். இரு மொழிகளிலும் கவிதை இயற்றும் திறமை கொண்டவர்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அல்ஹாஜ் அப்துல் கதீம் அவர்கள் முஸ்லிம் லீக்கின் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் அப்துல் ஸமது ஸாஹிப், இந்நாள் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் என எல்லோரிடமும் மிக நெருக்கமாக பழகி அவர்களது அன்பை பெற்றவர் ஆவார்.
MUDUVAI HIDAYATH
DUBAI - UAE
00971 50 51 96 433