ஒத்துழைப்புடன் துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளரின் உடல் சொந்த ஊருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது
துபாய் :
துபாய் ஈமான் அமைப்பின் பெரும் முயற்சியால் வைகோ எம்.பி. ஒத்துழைப்புடன் துபாயில் மரணமடைந்த தமிழக தொழிலாளரின் உடல் சொந்த ஊருக்கு நேற்று திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மதிமுகவின் கொள்ளை விளக்க அணியின் துணைச் செயலாளர் நெல்லை அபுபக்கரின் உறவினர் இப்ராஹிம் அஜ்மானில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் கல்லூரியில் படித்த நண்பர் கார்த்திக் ராஜாவின் சித்தப்பா ’துரைராஜ்’ ( வயது 45 ) துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததாகவும், கடந்த மார்ச் 17-ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அந்த கம்பெனி முயற்சி வருவதாகவும், இதில் ஏதேனும் தடங்கல் காரணமாக ஈமான் அமைப்பின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்துல்லாவிடம் தெரிவித்தார்.
எனினும் விமான சேவை முடக்கப்பட்டதால் அந்த நிறுவனத்தின் தலைமையகம் அபுதாபியில் இருப்பதால் எதிர்பார்த்தபடி உடல் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனையடுது அவரது குடும்பத்தினர் உடலை விரைவாக அனுப்பி வைக்க தேவையான உதவிகளை செய்ய கேட்டுக் கொண்டனர்.
அல் அய்ன் இந்திய சோஷியல் செண்டரின் தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா உதவியுடன் அவர் பணி செய்த கம்பெனி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு இறந்தவரின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்கிடையில் தற்போது விமான சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்திய விமான நிலைய பகுதியிலும், இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்காக வைகோ எம்.பி.யின் உதவியும் நாடப்பட்டது. அவரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசி இறந்தவரின் உடலை கொண்டு வர அனைத்து உதவிகளையும் செய்திட கேட்டுக் கொண்டார்.
ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், பொதுச்செயலாளர் ஏ. ஹமிது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகளின் ஆதரவுடன் தொடர்ந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
விழாக்குழு செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் அந்த நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொள்வதிலும், அரபி மொழியில் உள்ள தகவல்களை சரிபார்ப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார்.
இதுமட்டுமல்லாமல் மதிமுக வளைகுடா அமைப்பாளர் தஞ்சாவூர் ஸ்டாலின் பீட்டர், மதிமுகவின் அமீரக நிர்வாகி வில்லிசேரி பாலமுருகன், உள்ளிட்டோரும் இந்த பணிகள் சிறப்புடன் நடக்க தலைமையுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு வந்தனர்.
இதன் காரணமாக நேற்று இரவு அமரர் துரைராஜின் உடல் சென்னை விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதியே கார்கோ விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட இருந்தது. எனினும் உடலை கொண்டு செல்வதற்கான அரசு அனுமதி கிடைக்க காலதாமதம் ஆனதால் மே 4-ஆம் தேதி கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில் மே 2-ஆம் தேதி செல்ல இருந்த கார்கோ விமானம திடீரென ரத்து செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் அவரது உறவினர்கள் உடலை பெற்று சொந்த ஊருக்கு கொண்டு செல்வது வரை வைகோ எம்பியுன் தொடர் கண்காணிப்பு இருந்து வந்ததை நன்றியுடன் நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.
இந்த பணியில் இந்திய துணைத் தூதரகம், ஏர் இந்தியா மற்றும் எமிரேட்ஸ் நிறுவன ஊழியர்கள், சென்னை எமிரேட்ஸ் கார்கோவின் பெருமாள் உள்ளிட்டோரின் உதவி குறிப்பிடத்தக்கது.